ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தல்: யாருக்கு வெற்றி? ஓங்கும் காங்கிரஸ் 'கை' – முழு விவரம்

Who Will Win Jubilee Hills By-Election: ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தல் முடிவுகள் 2025 தேதி, நேரம், நேரடி வாக்கு எண்ணிக்கை விவரங்கள். ஆறு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 11 அன்று நடைபெற்றது.

குண்டு வெடித்த காரை ஓட்டியது உமர் தான்: தாயாரின் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி

புதுடெல்லி: டெல்​லி​யில் வெடித்த காரை ஓட்​டிச் சென்​றது மருத்​து​வர் உமர் நபி-தான் என்​பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த திங்​கட்​கிழமை மாலை 6.52 மணிக்கு ஹூண்​டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். 20-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். இந்த சம்​பவம் நாடு முழு​வதும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யது. இது தொடர்​பான விசா​ரணை​யில், வெடிபொருளு​டன் கூடிய அந்த … Read more

அலிநகர் தேர்தல் முடிவு 2025: பீகார் மக்கள் அதிகமாக உச்சரிக்கும் பெயர் மைதிலி தாக்கூர்..! யார் இவர்?

Who is this Maithili Thakur?: பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும், வாக்கு எண்ணிக்கை விரைவில் தொடங்கும். இந்த முறை, பெரும்பாலானோர் தர்பங்காவில் உள்ள அலிநகர் தொகுதி மீது கவனம் செலுத்தி வருகின்றனர்.

அல் பலா பல்கலை.க்கு அங்கீகார கவுன்சில் நோட்டீஸ்

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தது தெரியவந்தது. இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அல் பலா மருத்துவக் கல்லூரியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு நேரில் சென்ற அதிகாரிகள் மருத்துவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், அல் பலா பல்கலைக்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) அனுப்பியுள்ள … Read more

பீகார் தேர்தல் முடிவுகள் 2025: இன்று ஒரு தீர்க்கமான நாள்! வாக்கு எண்ணிக்கை எத்தனை மணிக்கு?

Bihar Election Results 2025: பல்வேறு அமைப்புகள் வெளியிட்ட முந்தைய கருத்துக் கணிப்புகளில் NDA ஆட்சி அமைக்கும் என்றும், மகா கூட்டணி ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை பெறாது என கணிக்கப்பட்டது. இவை வெறும் கருத்துக் கணிப்புகள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று (நவம்பர் 14) வெளியிடப்படும்.

காரில் இருந்தது ராணுவத்தில் பயன்படுத்தும் வெடிமருந்தா?

புதுடெல்லி: டெல்லியில் கார் குண்டு வெடித்த இடத்தில், ஐ20 காரின் டயர்கள், காரின் உடைந்த பாகங்கள், 42 மாதிரிகளை தடயவியல் குழுக்கள் சேகரித்துள்ளன. பவுடர் போன்ற பொருளும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும். அப்போது வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்ன என்பது தெரிந்து விடும். அவை ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வெடிமருந்து பொருட்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பென்டாரித்ரிட்டோல் டெட்ரா நைட்ரேட் (பிஇடிஎன்) வெடிமருந்து பொருள் நைட்ரோகிளிசரின் வகையை சேர்ந்ததுதான். இதில் … Read more

பீகார் மக்களின் ஆணை என்ன?.. 46 வாக்குச்சாவடிகளில் 243 சட்டசபை இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை!

Bihar Election Results Today: பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 முடிவுகளுக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. நவம்பர் 14 (வெள்ளிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், பீகார் முதல்வராக யார் முடிசூட்டப்படுவார்கள் என்பது முடிவு செய்யப்படும்.

செங்கோட்டையில் ஜனவரி 26-ம் தேதியே தாக்குதல் நடத்த சதி?

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்​டை​யில் கடந்த ஜனவரி 26ம் தேதியே தாக்​குதல் நடத்த திட்​ட​மிட்​ட​தாக​வும் அந்த முயற்சி முறியடிக்​கப்​பட்​ட​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்​ளது. டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) வசம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து காவல் துறை உயர் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: ”கைது செய்​யப்​பட்​டுள்ள மருத்​து​வர் முஜம்​மிலிட​மிருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட செல்​போனை ஆய்வு செய்து வரு​கிறோம். குறிப்​பாக, அவர் தாக்​குதலுக்கு முன்பு யாருடன் தொடர்பு கொண்​டார் என்​பதை ஆய்வு செய்​தோம். அப்​போது அந்த செல்​போனில் … Read more

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் சரண்: ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டவர்

லதேகர்: மாவோயிஸ்ட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தேடுல் வேட்டைகள் நடத்தப்படும் அதே நேரத்தில், சரணடையும் மாவோயிஸ்ட்களுக்கு மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளும் அளிக்கப்படுகின்றன. இதனால் சரணடையும் மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேகர் மாவட்டத்தில் போலீஸார் முன்னிலையில், 2 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர். அவர்களில் ஒருவர் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ் ஜி என்ற பிரஜேஷ் யாதவ். இவர் மாவோயிஸ்ட் அமைப்பில் துணை மண்டல கமாண்டராக இருந்தார். இவரை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு … Read more

டெல்லியில் வெடித்த காரை மருத்துவர் உமர் ஓட்டிச் சென்றது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி!

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் வெடித்த ஐ20 காரை ஓட்டிச் சென்ற மருத்துவர் உமர் நபியின் டிஎன்ஏ மாதிரிகள், அவரது தாயாரின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒத்துப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை கார் வெடிகுண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் டாக்டர் உமர் முகமது கார் வெடி குண்டை வெடிக்கச் செய்ததில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், காரில் குண்டை வெடிக்கச் … Read more