நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை எம்.பி.க்கள் நடத்தக்கூடாது என தடை விதிப்பு..!!

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை எம்.பி.க்கள் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்துக்குள் மத நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என்று நாடாளுமன்ற செயலக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என்று புதிய பட்டியலை வெளியிட்டதால் ஏற்பட்ட சர்ச்சை ஓயும் முன்பு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர் காமராஜர் : பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

டெல்லி: காமராஜர் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். … Read more

'பாகிஸ்தான் பத்திரிகையாளரை அழைத்தேனா?'.. பாஜகவினரின் குற்றச்சாட்டுக்கு அன்சாரி விளக்கம்

”நான் பாகிஸ்தான் பத்திரிகையாளரை அழைக்கவும் இல்லை, சந்திக்கவும் இல்லை” என மீண்டும் விளக்கம் அளித்துள்ளார் ஹமீத் அன்சாரி. பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளரான நஷ்ரத் மிஸ்ரா என்பவர், கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது 5 முறை இந்தியா வந்ததாகவும், இங்கிருந்து திரட்டிய முக்கிய தகவல்களை அந்த நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு வழங்கியதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும், அப்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்ததாகவும், இந்தியாவில் அவரை சந்தித்ததாகவும் அவர் கூறியிருப்பதாகவும் பாஜக கூறியுள்ளது. … Read more

குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற்ற குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1-இன் மாவட்ட கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 137 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில், இன்று அவர்களுக்கு நேர்காணல் நடந்தது. இந்த நிலையில், குரூப்-1 தேர்வின் முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் … Read more

ஒரே நொடி தான்… கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட பதறவைக்கும் வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகாந்த் (42). இவர், மனைவி மற்றும் 9 வயது மகள் ஸ்ருதி, 6 வயது மகன் ஷ்ரேயஸ் ஆகியோருடன், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் வசித்தார். அங்கு விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 10-ம் தேதி, விடுமுறையை கொண்டாட, குடும்பத்துடன் ஓமன் நாட்டிற்கு சென்றார். ஓமன் கடற்கரை ஓரம் உள்ள பாறையில், குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தார். அப்போது, மிக ஆக்ரோஷமாக வந்த ராட்சத அலைகள், பாறையின் மீது … Read more

‘‘நிதிஷ் குமாருக்கு போன் செய்தேன் எடுக்கவில்லை’’-  யஷ்வந்த் சின்கா ஆதங்கம்

பாட்னா: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா, களமிறக்கப்பட்டுள்ளார். அவா் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஆதரவைத் திரட்டி வருகிறார். பாட்னாவில் ஆர்ஜேடி, சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை சந்தித்து பேசினர். அப்போது குமாருடன் பலமுறை பேச முயற்சித்ததாகவும், ஆனால் பிஹார் முதல்வர் தனது … Read more

நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்த தடை: ஒன்றிய பாஜக அரசு அடுத்த அதிரடி

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை எம்.பி.க்கள் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  தொடங்கவுள்ள நிலையில் அவையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் நேற்று வெளியிட்டது. அதில், ‘வாய்ஜாலம் காட்டுபவர், சின்னஞ்சிறு புத்திக்காரர், கொரோனா பரப்புவர், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு முறைகேடு,  நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி,  கோழை, கிரிமினல், முதலை கண்ணீர்  உள்பட பல … Read more

பொது இடத்தில் தொழுகை ஏன்?.. லக்னோ லுலு மாலுக்கு எதிராக இந்து மகாசபா புகார்!

லக்னோ லுலு மாலில் தொழுகை நடத்தியாகக் கூறப்படும் மற்றொரு வீடியோ ஒன்றையும் அகில பாரத இந்து மகாசபா வெளியிட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள லுலு மாலில் சிலர் தொழுகை நடத்தியாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வந்தது. இதையடுத்து பொது இடத்தில் தொழுகை நடத்துவதா என்று எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்துத்துவ அமைப்பினர், இந்த மாலுக்கு இந்துக்கள் செல்லாமல் புறக்கணிக்க வேண்டும் என அகில பாரத் இந்து மகாசபா அமைப்பு வலியுறுத்தியது. … Read more

ஐ2யு2 குழுவின் முதல் உச்சி மாநாடு; இந்திய உணவுப் பூங்கா திட்டத்தில் முதலீடு.! அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் ஆர்வம்

புதுடெல்லி: இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யும் வகையில் உணவு பூங்காக்கள், சூரிய சக்தி உற்பத்திக்கு அதிகளவு நிதி ஒதுக்க அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஐ2யு2 குழுவின் முதல் உச்சி மாநாடு காணொலி மூலம் நடந்தது. பிரதமர் மோடியுடன், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அமெரிக்க அதிபர் … Read more

பிரதமர் மோடியை தாக்க பயங்கரவாதிகள் திட்டம்?

பிரதமர் நரேந்திர மோடியை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியதாக உளவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் உளவுப் பிரிவினர் தனது விசாரணையை துவங்கினர். கடந்த 12ஆம் தேதி பீகாருக்கு மோடி சென்ற இருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையில் பாட்னாவில் உள்ள புல்வாரி ஷரீஃப் என்ற இடத்தில் இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடியை தாக்க பயங்கரவாதிகள் 6 & 7 தேதிகளில் சதித்திட்டம் தீட்டியதாக 11ம் தேதி சோதனை நடத்திய போலீசார் … Read more