ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் கோளாறு.. அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால் விமான நிலையத்தில் அவசர நிலை.!

ஷார்ஜாவில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில், 222 பயணிகள் மற்றும் ஏழு விமான ஊழியர்கள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். விமானத்தில் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டதால் விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. கொச்சி விமான நிலையத்துக்கு வரவேண்டிய இதரவிமானங்கள் கோயமுத்தூருக்கும் கண்ணூருக்கும் திருப்பி விடப்பட்டன. சுமார் ஒருமணி நேரம் கழித்து அவசர நிலை விலக்கிக் கொள்ளப்பட்ட பின் சென்னை வரும் இண்டிகோ விமானம் புறப்பட அனுமதியளிக்கப்பட்டது. Source link

குழந்தைகளே 7 மணிக்கு பள்ளிக்கு போகிறார்கள் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் 9.30 மணிக்கே வர முடியாதா?: உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி

புதுடெல்லி: ‘குழந்தைகளே காலை 7.30 மணிக்கு பள்ளிக்கு செல்கையில், நீதிபதிகளும், வக்கீல்களும் காலை 9.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு வர முடியாதா?’ என உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் கேள்வி எழுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான பணி நேரம் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரையாகும். இந்நிலையில். உச்ச நீதிமன்றத்தின் 2வது அமர்வின் நீதிபதியான யு.யு.லலித் நேற்று காலை வழக்கத்திற்கு மாறாக 9.30 மணிக்கு வழக்கு விசாரணையை தொடங்கினார். அப்போது, வேறு ஒரு வழக்கில் … Read more

கனமழையால் மூணாறில் தொடரும் மண்சரிவு : வீடுகள் சேதம் ஒருவர் பலி

மூணாறு: தொடரும் கனமழையால் மூணாறில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்தார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகி, கனமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தின் பல இடங்களில், மண்சரிவோடு, மரங்களும் வேரோடு சாய்ந்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று பெய்த கனமழையால், மூணாறு லட்சுமி எஸ்டேட்டில் உள்ள ஒரு வீட்டின் மீது மண் சரிந்து விழுந்ததில், பண்டாரம் (75) என்பவர் உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். இம்மாவட்டத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. … Read more

உலக சுகாதார அமைப்பிடம் 5 கோடி தடுப்பூசிகளை கேட்டது ஒன்றிய அரசு: கோவாக்ஸ் திட்டத்தில் இலவசம்

புதுடெல்லி: கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் 5 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும்படி உலக சுகாதார அமைப்பிடம் ஒன்றிய சுகாதார அமைச்சகம் கேட்டுள்ளது. ஏழை மற்றும் வருமானம் குறைந்த நாடுகளிலும் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக கிடைக்கச் செய்ய, உலக சுகாதார நிறுவனம், கோவாக்ஸ் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தியா இதுவரையில் இதை வாங்க பயன்படுத்தவில்லை.இந்நிலையில், நாட்டின் 75வது சுதந்திர … Read more

மையங்கள் மாற்றத்தால் குளறுபடி; கியூட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

புதுடெல்லி:  ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளங்கலை பிரிவில் சேருவதற்கான, ‘கியூட்’ எனப்படும் தகுதி நுழைவு தேர்வு நாடு முழுவதும் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இத்தேர்வில் பங்கேற்க  14.9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். முதல் கட்ட தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்காக, இந்தியா மற்றும் வெளிநாடுகள் உட்பட மொத்தம் 510 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வில் பங்கேற்கும் 98 சதவீதம் பேருக்கு அவர்கள் விரும்பி கேட்ட தேர்வு மையங்களே ஒதுக்கப்படும் என்று தேசிய தேர்வு … Read more

புந்தேல்கண்ட் விரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

உத்தரபிரதேசத்திற்கு நாளை ஒரு நாள் பயணமாக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, 14 ஆயிரத்து 850 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புந்தேல்கண்ட் விரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விரைவுச்சாலைக்கு 2020ம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆக்ரா – லக்னோ விரைவுச் சாலையுடன் இணையும் 296 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நான்கு வழி விரைவுச்சாலை, போக்குவரத்து தொடர்புக்கு பெருமளவு ஊக்கத்தையும், தொழில்துறை வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   Source link

கல்லறையாக மாறி வரும் காபூல்; கருவில் இருந்த 7 மாத குழந்தையை இழந்தோம்: நாடு திரும்பிய சீக்கியர் குமுறல்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில்  கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சி அமைத்ததில் இருந்து, அங்கு வசித்து வந்த சீக்கியர்கள், இந்துக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவானது. இவர்களின் மீது அடிக்கடி மதவெறி தாக்குதல்கள் நடந்தன. கடந்த மாதம் 18ம் தேதி காபூலில் உள்ள சீக்கியவர்களின் புனித தலமான குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் வசிக்கும் சீக்கியர்கள், இந்தியர்கள் நாடு திரும்ப ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, … Read more

''எங்களுக்கு வேண்டியது நீதியே, அனுதாபம் அல்ல'' – சித்தராமையா கொடுத்த ரூ.2 லட்சத்தை தூக்கி எறிந்த பெண்

கெரூர்: கர்நாடகாவில் இருதரப்பினர் மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா வழங்கிய 2 லட்ச ரூபாயை பெண் தூக்கியெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி அருகே கெரூர் கிராமம் உள்ளது. இங்கு கடந்தவாரம் புதன்கிழமை மாலை பேருந்து நிலையத்தில் காத்திருந்த ஒரு பெண்ணை சிலர் கேலி செய்ததாக தெரிகிறது. இதனை வேறு மதத்தை சேர்ந்த சிலர் கண்டித்தனர். இரு தரப்பினரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மோதல் வெடித்துள்ளது. ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். … Read more

நடுவானில் ஆட்டம் கண்ட தனியார் விமான இன்ஜின்: அவசரமாக தரையிறக்கம்

புதுடெல்லி:  கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி போயிருந்த தனியார் விமான நிறுவனங்கள், தற்போதுதான் முழுவீச்சில் சேவையை அளித்து வருகின்றன. ஆனால், இந்த விமானங்களில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை இண்டிகோ நிறுவன பயணிகள் விமானம், குஜராத்தின் வதோதராவுக்கு புறப்பட்டது.  நடுவானில் அதன் இன்ஜினில் பெரும் அதிர்வுகள் உருவானது. இதனால், பயணிகள் பீதியில் அலறினர். இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள … Read more

காங்கிரஸ் தலைவர் சித்தாராமையா மீது பணத்தை தூக்கி வீசிய பெண்

கர்நாடகாவில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு கொடுத்த பணத்தை பெற்று கொள்ளாமல் காங்கிரஸ் தலைவர் சித்தாராமையா மீது பெண் ஒருவர் வீசியெறிந்தார். பாகல்கோர் மாவட்டத்தில் மதக்கலவரத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் நலம் விசாரித்த சித்தாராமையா, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினார். அப்போது, அந்த பணத்தை தூக்கி வீசிய பெண் ஒருவர், தங்களுக்கு நீதியும், அமைதியும் வேண்டும் என்று தெரிவித்தார்.   Source link