பாஜக இளைஞரணி நிர்வாகி கொலை – கர்நாடகாவில் பெரும் பதற்றம் – பழிக்கு பழியா?

கர்நாடகாவில் பாஜக இளைஞரணி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் தக்ஷின் கன்னடா மாவட்டத்தில் உள்ள பெல்லாரே கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டாரு (26). இவர் பாஜக இளைஞரணி நிர்வாகியாக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை தனது வீட்டுக்கு அருகே இருந்த கடையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பிரவீன் நெட்டாருவை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினர். … Read more

#BIG NEWS:- மாணவர்களுக்கு சிற்றுண்டி.. முதல்வர் சொன்ன முக்கிய தகவல்..!

தமிழக அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். பள்ளி மாணவ – மாணவியர்களிடையே மனநல மற்றும் உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கு மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார். அதன்பின்னர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது; “மாணவர்கள் … Read more

தொடரும் சோகம்..!! சிவகாசியில் பள்ளிக்கூடம் சென்று வீடு திரும்பிய +1 மாணவி திடீர் தற்கொலை… !!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த அய்யம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணன். இவரது இளைய மகள் யோகலட்சுமி (17). இவர் பாரைப்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற யோகலட்சுமி, மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. திடீரென அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் உடலை கைப்பற்றி மாரனேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

விஷ சாராயம் குடித்த 28 பேர் உயிரிழப்பு – குஜராத்தில் மேலும் 30 பேர் கவலைக்கிடம்

அகமதாபாத்: பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் விஷ சாராயம் குடித்து 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் குஜராத்தும் ஒன்றாகும். இம்மாநிலத்தில் மது அருந்தவும் மது விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தடையை மீறி கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன. இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் கூட கள்ளச்சாராய … Read more

லடாக் மலைசிகரத்தில் 12 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக்கொடி ஏற்றம்..!

நாட்டின் 75வது விடுதலை மகோத்சவத்தை முன்னிட்டு இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் லடாக் மலைசிகரத்தில், 12 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்கள். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதிவரை அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  Source link

மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் எம்.பி. சஸ்பெண்ட்

டெல்லி: மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் எம்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நேற்று ஆவணங்களை கிழித்து எறிந்ததால் கூட்டத் தொடர் முழுவதும் சஞ்சய் சிங் எம்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

'தலையணையுடன் உறவு கொள்'! – ராகிங் செய்த சீனியர் மாணவர்கள்

ஜூனியர் மாணவர்களை அருவருக்கத்தக்க வகையில் ராகிங் செய்த மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சீனியர் மருத்துவ மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவக் கல்லூரியாக உள்ளது MGM மெடிக்கல் காலேஜ். இந்த கல்லூரியில் படிக்கும் பெயர் தெரிவிக்க விரும்பாத ஜூனியர் மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக மாணியக் குழுவை (UGC) தொடர்புகொண்டு எம்.ஜி.எம். கல்லூரியில் நடக்கும் அக்கிரமங்களை … Read more

மக்களே கவனம்.. ஆசை காட்டி மோசடி.. நிதி நிறுவனத்தில் சோதனை..!

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்று, வங்கிகளில் அளிக்கப்படும் வட்டியை விட 3 மடங்கு அதிகமாக வட்டி அளிப்பதாகக் கூறியதை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் பணத்தை இந்த நிறுவனத்தில் செலுத்தி அதற்கான வட்டியும் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 8 மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு முறையாக வட்டி கொடுக்காமலும், செலுத்திய பணத்தையும் திரும்பத் தராமலும் பல்வேறு காரணங்களைக் கூறி நிதி நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், பொருளாதாரக் குற்றத் … Read more

டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!! வரும் 1 ஆம் தேதிக்கு மாற்றம்.!!

ஒருங்‌கிணைந்த பொறியியல்‌ சார்நிலைப்‌ பணிகளில்‌ அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம்‌ செய்யும்‌ பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌, கடந்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி  விண்ணப்பங்களைக்‌ கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அன்று நடைபெற்று, எழுத்துத்தேர்வில்‌ விண்ணப்பதாரர்கள்‌ பெற்ற மதிப்பெண்‌ விவரங்கள்‌ கடந்த பிப்ரவரி 15-ம் தேதி அன்று தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மீன்வளத் துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணித்துறையில் இளநிலை வரைவாளராகியபணிகளுக்கான இரண்டாம் கட்ட அசல் … Read more

மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் அமைச்சரிடம் தீவிர விசாரணை

கொல்கத்தா: மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கடந்த 22-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், தலைநகர் கொல்கத்தாவில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, நடிகை அர்பிதா முகர்ஜி கடந்த 23-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரையும் 10 நாட்கள் காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் நேற்று … Read more