டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!! வரும் 1 ஆம் தேதிக்கு மாற்றம்.!!

ஒருங்‌கிணைந்த பொறியியல்‌ சார்நிலைப்‌ பணிகளில்‌ அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம்‌ செய்யும்‌ பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌, கடந்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி  விண்ணப்பங்களைக்‌ கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அன்று நடைபெற்று, எழுத்துத்தேர்வில்‌ விண்ணப்பதாரர்கள்‌ பெற்ற மதிப்பெண்‌ விவரங்கள்‌ கடந்த பிப்ரவரி 15-ம் தேதி அன்று தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மீன்வளத் துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணித்துறையில் இளநிலை வரைவாளராகியபணிகளுக்கான இரண்டாம் கட்ட அசல் … Read more

மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் அமைச்சரிடம் தீவிர விசாரணை

கொல்கத்தா: மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கடந்த 22-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், தலைநகர் கொல்கத்தாவில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, நடிகை அர்பிதா முகர்ஜி கடந்த 23-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரையும் 10 நாட்கள் காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் நேற்று … Read more

அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா ஆஜர்: விசாரணை இன்றுடன் நிறைவு!

அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை சோனியா காந்தி, ராகுல் காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார். அதன்படி, சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, ராகுல் காந்தி விசாரணைக்கு ஏற்கனவே ஆஜராகி விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், … Read more

இமயமலையில் 21,312 அடி உயரத்தை ஏறி 13 வயது சிறுவன் புதிய சாதனை..!

ஐதராபாத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் இமயமலை தொடர்களில் ஒன்றான லடாக்கின் மார்கா பள்ளத்தாக்கில் 21,312 அடி உயரத்திற்கு ஏறி புதிய சாதனை படைத்துள்ளான். 9ஆம் வகுப்பு மாணவர் விஸ்வநாத் கார்த்திகே, கடந்த 9ஆம் தேதி காங் யாட்சே மற்றும் டிசோ ஜோங்கோ மலைத்தொடர்களில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டார். சுமார் 14 நாட்கள் கடின உழைப்பில், காற்றில் ஈரப்பதம் இல்லாததால் சுவாசப்பிரச்னை உள்பட பல்வேறு சிக்கல்களை சந்தித்த சிறுவன் 21,312 அடி உயரத்தை அடைந்து தேசியக் கொடியை … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு!: டெல்லியில் அமலாக்கத்துறை முன்பு 3வது நாளாக ஆஜரானார் காங். தலைவர் சோனியா காந்தி..!!

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஏற்கனவே 2 நாட்கள் டெல்லியில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகியிருந்த நிலையில், 3வது நாளாக இன்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஆஜராகியுள்ளார். கடந்த 22ம் தேதியன்று முதல்முறையாக ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மீண்டும் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை தொடர்ந்து நேற்றைய தினம் 2வது முறையாக சோனியா காந்தி ஆஜரானார். நேற்று சுமார் 6 மணி நேரம் … Read more

காங்கோவில் பயங்கர கலவரம் – இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

காங்கோ நாட்டில் போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. காங்கோ அரசை கவிழ்த்து தங்கள் கொள்கைகளை பறைசாற்றும் அரசை நிறுவ வேண்டும் என ஒவ்வொரு அமைப்பும் முயற்சித்து வருகின்றன. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ராணுவத்தினர் மீதும், பொதுமக்கள் மீதும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் … Read more

சோனியா காந்தி ஒத்துழைப்பு: விசாரணை இன்றுடன் நிறைவுபெறலாம்; அமலாக்கத் துறை வட்டாரம் தகவல்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அதனால் அவரிடம் இன்றுடன் விசாரணை நிறைவு பெறலாம் என்றும் அமலாக்கத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தும் ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை, யங் இந்தியா நிறுவனம் வாங்கியதில் நிதிமுறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக யங் இந்தியா நிறுவனத்தின் பங்குதாரர் ராகுலிடம் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே விசாரணையை முடித்துள்ளனர். மற்றொரு பங்குதாரரான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், கடந்த 21ம் … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு: டெல்லியில் அமலாக்கத்துறை முன்பு 3வது நாளாக ஆஜரானார் காங். தலைவர் சோனியா காந்தி..!!

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லியில் அமலாக்கத்துறை முன்பு 3வது நாளாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜரானார். அமலாக்கத்துறை ஏற்கனவே 2 நாள் விசாரணை நடத்திய நிலையில் இன்றும் சோனியா காந்தி ஆஜராகியுள்ளார். நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

கர்நாடகா: சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்த டேங்கர் லாரி

துமகூரு அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதிய டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் துமகூரு அருகே கூலூரு பகுதியில் நேற்றிரவு தண்ணீர் டேங்கர் லாரி வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து உடனே லாரி தீப்பிடித்து எரியத் துவங்கியது. ஓட்டுநரும், கிளீனரும் லாரியில் இருந்து உடனே வெளியேறியதால் அவர்கள் இருவரும் உயிர் தப்பினர். … Read more

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா – பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. செப்டம்பர் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ள விழாவின்போது மாட வீதிகளில் காலையும், மாலையும் வாகன சேவை நடைபெறும். குறிப்பாக 27-ம் தேதி கொடியேற்றமும், அன்றிரவு பெரிய சேஷ வாகன சேவையும் நடைபெறும். 5-ம் நாளான அக்டோபர் 1-ம் தேதி 3-வது புரட்டாசி சனிக்கிழமை இரவு கருட சேவை நடைபெறும். … Read more