நேஷனல் ஹெரால்டு | சோனியா காந்தியிடம் 2-வது முறையாக விசாரணை – போராட்டம் நடத்திய ராகுல் உட்பட 50 எம்.பி.க்கள் கைது

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், நேற்று 2-வது முறையாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து, ராஷ்டிரபதி பவன் நோக்கி பேரணி சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 50 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தும் ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை, யங் இந்தியா நிறுவனம் வாங்கியதில் நிதிமுறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக யங் இந்தியா … Read more

மேற்குவங்கத்தின் புகழ்பெற்ற ஒரு ரூபாய் மருத்துவர் சுஷோவன் பந்தோபத்யாயா காலமானார்

மேற்குவங்கத்தின் புகழ் பெற்ற ஒரு ரூபாய் மருத்துவர் சுஷோவன் பந்தோபத்யாயா காலமானார். நிறைவாழ்வு வாழ்ந்து பலருக்கு தன்னலமற்ற அரிய மருத்துவ சேவை செய்து 84 வயதில் காலமான ஒரு ரூபாய் மருத்துவர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் வயது மூப்பின் காரணமாக காலமானார். பிரதமர் மோடி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் மருத்துவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.பத்மா விருது வழங்கிய போது அவரை சந்தித்துப் பேசியதை மோடி நினைவுகூர்ந்துள்ளார். Source link

ஒரே ஆண்டில் பெட்ரோல் விலை 78 முறை உயர்வு… 7 நாட்கள் மட்டுமே விலை குறைப்பு : ஒன்றிய அரசு தகவலால் அதிர்ச்சி!!

டெல்லி: இந்தியாவில் 2021-2022 நிதியாண்டில் பெட்ரோல் விலை 78 முறையும், டீசல் விலை 76 முறையும் உயர்த்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாநிலங்களவை எம்பியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சாதா பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் பதில் அளித்துள்ளார்.அவர் அளித்த பதிலில்,’டெல்லியில் 2021-22ம் ஆண்டில் 20.07.2022ம் தேதி … Read more

செஸ் ஒலிம்பியாட் 2022: வெளியானது பிரதமர் மோடியின் 2 நாள் சென்னை பயணத்திட்டம்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் பயண விவரத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிரதமர் நநேரத்திர நாளை (ஜூலை 28) பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து விமானப்படை விமானத்தில் புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு சென்னை விமானநிலையத்திற்கு வந்து சேருகிறார். பின்னர் அங்குள்ள ஓய்வறையில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்கும் அவர், 5.25 மணிக்கு விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 5.45 மணிக்கு அடையாரில் உள்ள … Read more

5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியது – அரசுக்கு ரூ.4.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்

புதுடெல்லி: நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்று தொடங்கியது. 72 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.4.3 லட்சம் கோடி கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளன. அதானி நிறுவனம் தனிப் பயன்பாட்டுக்காக இந்த ஏலத்தில் கலந்துகொள்கிறது. மற்ற மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இவ்வாண்டு இறுதி அல்லது 2023 மார்ச்சுக்குள் 5ஜி … Read more

5ஜி அலைக்கற்றைக்கு 5வது சுற்று ஏலம் இன்று!!

டெல்லி : 5ஜி அலைக்கற்றைக்கு 5வது சுற்று ஏலம் இன்று நடைபெறுகிறது. அலைக்கற்றையை கைப்பற்றும் முனைப்பில் முன்னணி நிறுவனங்கள் மும்முரமாக உள்ளன. ஜியோ, ஏர்டெல், வேடோஃபோன் – ஐடியாவுடன் அதானி நிறுவனமும் ஏலத்தில் பங்கேற்க உள்ளன.

நாடு முழுவதும் கார்கில் போர் வெற்றி தின கொண்டாட்டம் – ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கார்கில் போர் வெற்றி தின விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். கடந்த 1999-ல் காஷ்மீரின் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊருடுவிய நிலையில், இந்திய ராணுவனத்தினருக்கும் பாகிஸ்தான் படையினருக்கும் மே 3-ம் தேதி தொடங்கி 3 மாதங்களாக போர் நடைபெற்றது. ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த போரில் பாகிஸ்தான் கைப்பற்றிய கார்கில் பகுதிகளை … Read more

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு கட்டாயம் விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த டெண்டர் முறைகேடு வழக்கு கட்டாயம் வரும் 3ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்த உச்ச நீதிமன்றம்,யாரும் ஒத்திவைக்க கோரிக்கை வைக்கக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டுமானால் வழக்கை சிபிஐக்கு மாற்றியமைக்க வேண்டும் … Read more

தேர்தல் ‘இலவச’ அறிவிப்பை தடுப்பது எப்படி? – வழிமுறைகளை ஆராய உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தேர்தலின்போது இலவச திட்டங்கள் அறிவிப்பை தடுப்பது எப்படி என்பது தொடர்பான வழிமுறைகளை ஆராயுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களை கவர்வதற்காகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும் இலவசத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவர். இந்த தேர்தல் இலவச அறிவிப்புகளை எதிர்த்து பாஜக மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்து இருந்தார். தேர்தலில் வெற்றி … Read more

கேரளாவை தொடர்ந்து உத்தர பிரதேச பண்ணையில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்: இறைச்சி, சந்தைக்கு தடை

பெரெய்லி: கேரளாவில் சமீபத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவியது. வயநாடு பகுதியில் உள்ள பண்ணைகளில் பன்றிகளின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் இந்த நோய் உறுதியானது. இதனால்  பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பன்றிகள் இறந்து வருகின்றன. மேலும், நோய் மேலும் பரவுவதை தடுக்க பன்றிகளை கொல்லும் நடவடிக்கையை கேரள அரசு எடுத்துள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்திலும் இந்த காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. பெரெய்லி மாவட்டத்தில் பரித்பூரில் உள்ள பண்ணையில் 20 பன்றிகள் திடீரென உயிரிழந்தன. அவற்றை பரிசோதனை … Read more