மழைக்கால கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் முதல் நாளிலேயே முடங்கிய மக்களவை, மாநிலங்களவை

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. 14 நாட்கள் நடைபெறும் கூட்டத் தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசும், அக்னிபாத், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே மாநிலங்களவையில் எதிர்க்கட்சி … Read more

தேசிய பங்குச்சந்தைக்கு புது சிஇஓ – நிர்வாக இயக்குநர் நியமனம்! யார் இந்த ஆஷிஷ் குமார்?

தேசிய பங்குச்சந்தையின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக ஆஷிஷ் குமார் சவுகான் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஆஷிஷ் குமார் சவுகான், தற்போது பிஎஸ்இயின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். கடந்த பத்தாண்டுகளாக இவர் பிஎஸ்இயின் தலைமை பொறுப்பில் இருக்கிறார். இவரது பதவி காலம் வரும் நவம்பரில் முடிவடைகிறது. ஏற்கெனவே பத்தாண்டுகள் பதவியில் இருந்திருப்பதால் மீண்டும் மறுநியமனம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை. அதனால் என்.எஸ்.இ.க்கு விண்ணப்பித்தார். என்.எஸ்.இயின் நிர்வாக இயக்குநர் விக்ரம் லிம்யேயின் பதவி காலம் ஜூலை 16-ம் தேதியுடன் … Read more

லடாக் உண்மையான எல்லை கோட்டுப் பகுதியில் பறந்த சீன போர் விமானத்தை விரட்டியடித்த இந்திய விமானப் படை

புதுடெல்லி: இந்தியா – சீனா இடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்தஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அங்கு இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் போக்கை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இருதரப்பு ராணுவத்தினரும், அதிகாரிகளும் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், இரு நாட்டு எல்லையான கிழக்கு லடாக் பகுதியில், சீன நாட்டின் போர் விமானம் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நேற்று இந்திய விமானப் படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி … Read more

அக்னிபத் திட்டத்தில் அடுத்த சர்ச்சை: சாதி, மத சான்றிதழ் கேட்கும் இந்திய ரணுவம்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு … Read more

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வான எம்.பி.கள் உறுதிமொழி ஏற்பு..!!

டெல்லி: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வான எம்.பி.கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாநிலங்களவை உறுப்பினராக ப.சிதம்பரம் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். ப.சிதம்பரத்தை தொடர்ந்து மாநிலங்களவையில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

வெறுமனே குடிக்கிறது மட்டும்தான் டீம் அவுட்டிங்கா? – பிரபல செயல் அதிகாரி எழுப்பிய கேள்வி!

IT உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு இருக்கும் பொதுவான வேலைகளில் ஒன்றாக Team Outing பார்க்கப்படுகிறது. அதீத பணிச்சூழல்களிடையே ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை அலுவலக நண்பர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து டீம் அவுட்டிங் செல்லும் முறை நடைமுறையில் இருப்பதுதான். ஆனால், அப்படி குழுவாக வெளியே போகிறவர்கள், பார், ரெஸ்டாரண்ட், ரெசாட்டிற்கு சென்று, மது குடித்தும் கொண்டாடுவதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள். இந்த மாதிரியான கொண்டாட்டங்களை தாண்டி வேறு என்ன இருந்திட முடியும் என எண்ணிவிட்டார்களா என தெரியவில்லை என்ற … Read more

திரவுபதி முர்மு vs யஷ்வந்த் சின்ஹா | குடியரசுத் தலைவர் தேர்தல் தொடங்கியது: பிரதமர் மோடி வாக்களிப்பு

புதுடெல்லி: நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (ஜூலை 18) காலை 10 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்றம், அனைத்து மாநிலங்களின் பேரவைகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் 776 பேர், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 4,120 எம்எல்ஏக்கள் என 4,896 பேர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் திட்டம்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி (இன்று) தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடவுள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலும் இன்று நடைபெறுவதால், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க ஏதுவாக அதற்கான ஏற்பாடுகளும் நாடாளுமன்ற வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத் தொடரில் 24 புதிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு … Read more

திரெளபதி முர்மு Vs யஷ்வந்த் சின்ஹா.. ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள் வாக்களித்தனர்!!

சென்னை: இந்தியாவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று தொடங்கியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று தொடங்கியது. இத்தேர்தலில் பாஜ கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.எம்பி, எம்எல்ஏக்கள் வாக்குச்சீட்டு முறையில் புதிய ஜனாதிபதி தேர்வு செய்ய உள்ளனர். எம்எல்ஏக்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. … Read more

மேகவெடிப்புக்கு வெளிநாட்டு சதியே காரணம் – அதிர்ச்சியூட்டிய முதல்வர் சந்திரசேகர ராவ்!

“தெலங்கானாவில் நிகழ்ந்த மேகவெடிப்புக்கு வெளிநாட்டு சதியே காரணம்” என்று அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தெலங்கானாவில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரக்காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களும், கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை – வெள்ளத்துக்கு இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர் மழையால் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே, இந்த கனமழைக்கு … Read more