ஜூலை 11 அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்..!!

டெல்லி: ஜூலை 11 அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டது. பொதுக்குழு தொடர்பாக அதிமுக சார்பிலும்  தனியாக மற்றொரு கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக தன்னை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்க ரிசர்வ் வங்கி பரிந்துரை!ஆனால்.." – நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் நடைபெற துவங்கியுள்ளது. இத்தொடரில் இன்று மக்களவை எம்.பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல். திருமாவளவன் கிரிப்டோகரன்சி குறித்து கேள்வி எழுப்பினார். இதையடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிரிப்டோ கரன்சி விவகாரத்தில் ரிசர்வ் வங்கி நிலைப்பாடு குறித்து தகவல் அளித்தார். “பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி விரும்புகிறது. கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும் என ரிசர்வ் … Read more

18 மாதங்களில் மக்களுக்கு 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை: ஒப்பிட முடியாத வேகம் என பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: இந்தியாவில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 200 கோடியைத் தாண்டி உள்ளது. இது ஒப்பிட முடியாத வேகம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சீனாவின் வூகான் மாகாணத்தில்கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில்மனிதர்களுக்கு கரோனா வைரஸ்பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் பரவத் தொடங்கியது. அதன்பின் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டன. இதில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம்கோவாக்சின் என்ற தடுப்பூசியையும், … Read more

குடியரசு துணை தலைவர் தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் ஜக்தீப் தன்கர் வேட்புமனு தாக்கல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தன்கர் வேட்புமனு தாக்கல் செய்தார். நாட்டின் 13வது குடியரசுத் துணைத் தலைவராக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கையா நாயுடு பதவி வகிக்கிறார். இவரது பதவிக்காலம், வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் … Read more

வியட்நாம் – இந்தியா இடையே 13 புதிய வழித்தடங்களில் விமான சேவை – வியட்ஜெட் நிறுவனம் அறிவிப்பு !

வியட்நாம் – இந்தியா இடையே இந்த ஆண்டு இறுதிக்குள் 13 புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக வியட்நாமை சேர்ந்த வியட்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அதிக பயணிகளை ஏற்றும் வகையில் ஏர்பஸ் ஏ330 விமானங்களை சேர்க்க இருப்பதாகவும் வியட்ஜெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

சவான் மாதத்தையொட்டி சிவன் கோவில்களில் குவிந்த மக்கள் : முதல் திங்களையொட்டி பக்தர்கள் விரதம் எடுத்து வழிபாடு

உத்தரபிரதேசம்: பல்வேறு மாநிலங்களில் சவான் மாதத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாட்டின் வட மற்றும் கிழக்கு மாநிலங்களில் சவான் மாதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஒவ்வொரு திங்களன்றும்  பக்தர்கள் விரதமிருந்து சிவனை வழிபடுவார்கள். சவான் மதத்தின் முதல் திங்களான இன்று உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கங்கையாற்றில் புனித நீராடினர்.ஜார்கண்டில் கன்வர் யாத்திரை சென்ற பக்தர்கள் டியோக்கரில் உள்ள கோவில்களில் கூடி … Read more

காஷ்மீர் எல்லையில் குண்டுவெடித்து ராணுவ கேப்டன் உட்பட இருவர் பரிதாப பலி

காஷ்மீர் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்தததில் ராணுவ கேப்டன் மற்றும் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தனர். குளிர்காலம் தொடங்கிவிட்டதால் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக உளவுத்துறை அண்மையில் எச்சரித்திருந்தது. குளிர்காலத்தில் உறைப்பனி வெப்பநிலை காஷ்மீரில் நிலவும் என்பதால், பனிமூட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தீவிரவாதிகள் அதிக அளவில் ஊடுருவுவது வழக்கம். இதனிடையே, உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினரும், … Read more

சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசில் குழப்பம்; முதல்வருடன் கருத்து வேறுபாடு: ஊரக அமைச்சர் ராஜினாமா

புதுடெல்லி: சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநில பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பதவியிலிருந்து டி.எஸ்.சிங் தியோ நேற்று முன்தினம் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம், சுகாதாரம் மற்றும் குடும்பநலம், மருத்துவக் கல்வி, 20 அம்ச திட்ட அமலாக்கம் மற்றும் வணிக வரித் துறை அமைச்சர் பதவியில் தியோ தொடர்வதாக கூறப்படுகிறது. ஆனால் பதவி விலகல் கடிதம் … Read more

நர்மதா ஆற்றில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலி.. 15 பேர் மீட்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நர்மதா ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலியானார்கள். 15 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய பேருந்து, மகாராஷ்டிர மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தாகும். இது இந்தூரிலிருந்து புனேவுக்குப் போய்க் கொண்டிருந்தது. ஆற்றில் உள்ள பாலத்தில் பஸ் போய்க் கொண்டிருந்தபோது திடீரென தடுமாறி தலைகீழாக ஆற்றில் கவிழ்ந்தது. பாலத்தின் சுவரை உடைத்துக் கொண்டு பேருந்து ஆற்றில் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் தர் மாவட்டத்தில் … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் – பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களிப்பு..!

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாக்களித்தனர். குடியரசுத் தலைவர் தேர்லில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்களும், எம்.பி.க்களும் வாக்களித்தனர். கொரோனாவிலிருந்து … Read more