வெறுமனே குடிக்கிறது மட்டும்தான் டீம் அவுட்டிங்கா? – பிரபல செயல் அதிகாரி எழுப்பிய கேள்வி!

IT உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு இருக்கும் பொதுவான வேலைகளில் ஒன்றாக Team Outing பார்க்கப்படுகிறது. அதீத பணிச்சூழல்களிடையே ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை அலுவலக நண்பர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து டீம் அவுட்டிங் செல்லும் முறை நடைமுறையில் இருப்பதுதான். ஆனால், அப்படி குழுவாக வெளியே போகிறவர்கள், பார், ரெஸ்டாரண்ட், ரெசாட்டிற்கு சென்று, மது குடித்தும் கொண்டாடுவதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள். இந்த மாதிரியான கொண்டாட்டங்களை தாண்டி வேறு என்ன இருந்திட முடியும் என எண்ணிவிட்டார்களா என தெரியவில்லை என்ற … Read more

திரவுபதி முர்மு vs யஷ்வந்த் சின்ஹா | குடியரசுத் தலைவர் தேர்தல் தொடங்கியது: பிரதமர் மோடி வாக்களிப்பு

புதுடெல்லி: நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (ஜூலை 18) காலை 10 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்றம், அனைத்து மாநிலங்களின் பேரவைகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் 776 பேர், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 4,120 எம்எல்ஏக்கள் என 4,896 பேர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் திட்டம்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி (இன்று) தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடவுள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலும் இன்று நடைபெறுவதால், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க ஏதுவாக அதற்கான ஏற்பாடுகளும் நாடாளுமன்ற வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத் தொடரில் 24 புதிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு … Read more

திரெளபதி முர்மு Vs யஷ்வந்த் சின்ஹா.. ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள் வாக்களித்தனர்!!

சென்னை: இந்தியாவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று தொடங்கியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று தொடங்கியது. இத்தேர்தலில் பாஜ கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.எம்பி, எம்எல்ஏக்கள் வாக்குச்சீட்டு முறையில் புதிய ஜனாதிபதி தேர்வு செய்ய உள்ளனர். எம்எல்ஏக்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. … Read more

மேகவெடிப்புக்கு வெளிநாட்டு சதியே காரணம் – அதிர்ச்சியூட்டிய முதல்வர் சந்திரசேகர ராவ்!

“தெலங்கானாவில் நிகழ்ந்த மேகவெடிப்புக்கு வெளிநாட்டு சதியே காரணம்” என்று அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தெலங்கானாவில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரக்காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களும், கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை – வெள்ளத்துக்கு இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர் மழையால் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே, இந்த கனமழைக்கு … Read more

அலங்காரமும் இல்லை; அரசியலும் இல்லை.. ஆளுநர்கள் வழிகாட்டிகளாக செயல்பட வேண்டும்: வெங்கய்ய நாயுடு

புதுடெல்லி: ஆளுநர் பதவி என்பது அலங்கார பதவியும் இல்லை, அரசியல் செய்யும் பதவியும் அல்ல மாறாக ஆளுநர்கள் மாநிலங்களுக்கு சிறந்த வழிகாடிகளாக இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். முன்னதாக நேற்று குடியரசு துணைத் தலைவர் இல்லத்தில் மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுக்கு மதிய விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்ய நாயுடு, ஆளுநர் பதவி என்பது அலங்கார பதவியும் அல்ல, அரசியல் செய்யும் பதவியும் அல்ல. … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி பேட்டி

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறலாம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

போட்டியே இல்லாமல் தேர்வான குடியரசுத் தலைவர் பெயர் தெரியுமா உங்களுக்கு? குட்டி ரீவைண்ட்!

இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் நிலையில், இதுவரை நடந்த குடியரசுத் தலைவர் தேர்தல்கள், அவற்றில் எத்தனை தேர்தல்களில் போட்டி நிலவியது, வெற்றி பெற்றவர்கள் யார் யார் என்பது பற்றிய ஒரு சின்ன ரீவைண்ட், இங்கே! இந்திய குடியரசு தலைவரை மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பர். சில மாநிலங்களில் மேலவை உறுப்பினர்கள் இருந்தாலும், அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது. அதேபோல் நாடாளுமன்ற நியமன எம்.பி.க்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க … Read more

லடாக் எல்லை விவகாரம்: இந்தியா-சீன ராணுவ அதிகாரிகள் பேச்சு

ஸ்ரீநகர்: கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றதால் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன ராணுவத்தினர் 40 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.   இந்த மோதலை அடுத்து லடாக் எல்லையில் இரு நாட்டு படைகள் குவிக்கப்பட்டன. லடாக் எல்லையில் பதற்றத்தை குறைக்க  இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்பு கொண்டன. அதன் பலனாக இதுவரை 15 … Read more

விசாகப்பட்டினத்தில் ஆடை அணிகலன் கடையில் பயங்கர தீ விபத்து.. ரூ.2 கோடி மதிப்புடைய பொருட்கள் எரிந்து நாசம்..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் துவடா பகுதியில் உள்ள ஒரு ஆடை அணிகலன் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ வேகமாக கடைமுழுவதும் பரவிவிட்டது. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் பல மணி நேரம் போராடின. கடும் முயற்சிக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இதில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. எனினும் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகி விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். Source link