நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி (நாளை) தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. எனவே, எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, தலைநகர் … Read more

அமர்நாத் யாத்திரையில் 17 நாளில் 50 பக்தர்கள் பலி

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. இதுவரையில் 1.6 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கரடுமுரடான மலைப் பாதையில் அமர்நாத் குகைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், உடல்நிலை பாதிப்பு, மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் நடுவழியில் இறந்து வருகின்றனர். கடந்த 17 நாட்களில் இதுபோல் 35 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 8ம் தேதி அமர்நாத் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு 15 பக்தர்கள் அடித்து செல்லப்பட்டு … Read more

எல்லை பிரச்சினையை தீர்க்க அசாம்-அருணாச்சல் ஒப்பந்தம்

இடாநகர்: அசாம் – அருணாச்சல் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நிலவுகிறது. இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு ஆகிய இருவரும் கடந்த ஜனவரி 24-ம் தேதியும் ஏப்ரல் 20-ம் தேதியும் சந்தித்துப் பேசினர். இந்நிலையில் இரு மாநில முதல்வர்களும் அருணாச்சலில் உள்ள நாம்சாய் நகரில் நேற்று முன்தினம் சந்தித்தனர். அப்போது இரு மாநிலங்களுக்கு இடையிலான பல ஆண்டு கால எல்லைப் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கான உடன்பாட்டில் … Read more

இலவசமாக வழங்கப்படும் தொலை சட்ட சேவை: மத்திய அமைச்சர் தகவல்!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற 18ஆவது அகில இந்திய சட்ட சேவைகள் கூட்டத்தில், “இந்த ஆண்டு முதல், தொலை சட்ட சேவை நாட்டில் குடிமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்” என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இதன் மூலம், ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பொது சேவை மையங்களில் காணொலி உள்கட்டமைப்பு மூலம் வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு விளிம்புநிலை மக்கள் சட்ட உதவி பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எளிதான மற்றும் நேரடி அணுகலுக்காக, தொலை … Read more

வெள்ளத்தில் சிக்கிய உதவி ஆட்சியர் காரை மீட்க உதவிய பொதுமக்கள்.!

ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கப்பாதை ஒன்றில் தேங்கியிருந்த மழை வெள்ளத்தில் சிக்கிய உதவி ஆட்சியரின் காரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.  தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக அம்மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஸ்ரீ கங்காநகர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள சுரங்கப்பாதை ஒன்று வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனை அறியாமல் அவ்வழியாக சென்ற உதவி ஆட்சியரின் கார் வெள்ளத்தில் சிக்கி கொண்டது. இதனை அறிந்த பொதுமக்கள் விரைந்து சென்று அந்த காரை சுரங்கப்பாதையில் … Read more

கொரோனா தடுப்பூசி திட்டம் 200 கோடி டோஸ்: ஒன்றிய அரசு சாதனை

புதுடெல்லி: நாடு முழுவதும் மக்களுக்கு 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சாதனையை ஒன்றிய அரசு நெருங்கி வருகிறது. சீனாவில் 2019ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி, ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த தொற்றால் உலகளவில் நேற்றைய நிலவரப்படி 56.1 கோடி பேர் பாதித்துள்ளனர். 63.1 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இதில், 8.93 கோடி பாதிப்புகள், 10.2. லட்சம் பலியுடன் உலகளவில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. 2வது இடத்தில் உள்ள … Read more

'விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் நிறைய இருக்கிறது' – சபாநாயகரிடம் வலியுறுத்திய எதிர்கட்சிகள்

பணவீக்கம், அக்னிபத் திட்டம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட சில வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்த விவாதத்தை மக்களவையில் நடத்த வேண்டுமென குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில் பல்வேறு முக்கியமான மசோதாக்களை கொண்டு வர அரசு திட்டமிட்டிருக்கிறது … Read more

உ.பி. லக்னோ லூலூ மாலில் தொழுகையால் சர்ச்சை – அனுமன் மந்திரம் படித்து இந்துத்துவாவினர் எதிர்ப்பு

புதுடெல்லி: லக்னோவில் ரூ.2,000 கோடி மதிப்பில் கடந்த 10-ம் தேதி லூலூ மால் திறக்கப்பட்டது. இதை முதல்வர் ஆதித்யநாத் திறந்து வைத்தார். சுமார் 22 லட்சம் சதுர அடிகளில் நகரின் மிகப்பெரிய மாலான இதில், கடந்த 12-ம் தேதி 10 பேர் கொண்ட முஸ்லிம் குழு தொழுகை நடத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்கு இந்துத்துவாவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து மாலில் மதச்சார்பு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை என்று அதன் நிர்வாகம் அறிவிப்பு பலகை … Read more

மோடியை சிக்க வைக்க சதி செய்தாரா சோனியா? காங்கிரஸ் காட்டம்!

குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2002ஆம் ஆண்டில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது. ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி., இஷான் ஜாப்ரியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த கலவரம் தொடர்பாக அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு அமைப்பினர், பிரதமர் மோடி உள்பட 64 பேரை … Read more

கியூட் தேர்வை எழுத மறுவாய்ப்பு இல்லை: யுஜிசி திடீர் அறிவிப்பு

புதுடெல்லி: ‘கியூட் பொது நுழைவுத் தேர்வை தவற விட்ட மாணவர்களுக்கு மறு வாய்ப்பு  வழங்க முடியாது,’ என பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 45 ஒன்றிய பல்கலைக் கழகங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான முதல் கட்ட ‘கியூட்’ கட்ட பொது நுழைவுத் தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இத்தேர்வில் கடைசி நேரத்தில் சில தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதால், மாணவர்கள் பலர் தேர்வு எழுத முடியாமல் தவற விட்டனர். தேர்வை தவறவிட்ட … Read more