”இந்தியாவை 75 சிறிய மாநிலங்களாக பிரிக்கணும்” – பிரதமருக்கு முன்னாள் காங். பிரமுகர் கடிதம்!

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டை 75 சிறிய மாநிலங்களாக பிரிக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவான ஆசிஷ் தேஷ்முக், நீண்ட காலமாக விதர்பா தனிமாநில கோரிக்கை விடுத்து வருகிறார். பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் சராசரியாக 4 கோடியே 90 லட்சம் மக்கள் வசிக்கும் வகையில் நாட்டை 75 சிறிய மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அனைத்து பகுதிகளின் … Read more

2024-25ல் ரூ.1 லட்சம் கோடிக்கு கடல்சார் பொருட்கள் ஏற்றுமதிக்கு இலக்கு – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்

பேர்ட்பிளேர்: 2024-25-ஆம் ஆண்டில் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு மீன் உள்ளிட்ட கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக அந்தமான் சென்றுள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அந்தமான் தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் சனிக்கிழமை கலந்துரையாடினார். அப்போது, மீன்வளம், சுற்றுலா, எளிதில் தொழில் மேற்கொள்வதற்கான அரசின் வழிமுறைகள், அதற்கான அனுமதி … Read more

ஆந்திரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் தண்ணீரில் முழ்கி தத்தளிப்பு: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் ஆய்வு

அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் கோதாவரி, கிருஷ்ணா நதி,  ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் தண்ணீரில் முழ்கி தத்தளிக்கின்றனர். கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில்  கனமழை காரணமாக கோதாவரி, கிருஷ்ணா நதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக  நதிகரைகளை ஒட்டியுள்ள பல கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. தொடர்ந்து கோதாவரியில் 70 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளநீர் ஆர்ப்பரித்து செல்கிறது. வெள்ளத்தில் சிக்கிய குடும்பங்களை மீட்க ஆந்திர அரசு தூரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இந்நிலையில் வெள்ள நிவாரண … Read more

விவசாயி மகன் TO குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்! ஜெகதீப் தங்கரின் பின்னணி!

பாஜக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கார் அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போதைய குடியரசு துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் யாரென்பது குறித்து தீர்மானிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, … Read more

“ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம் அல்ல’’ – மத்திய சட்ட அமைச்சர் முன்னிலையில் தலைமை நீதிபதி அதிருப்தி

புதுடெல்லி: அரசியல் எதிர்ப்பு பகையாக மாற்றப்படுவது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம் அல்ல என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று 18-வது அகில இந்திய சட்ட சேவைகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் தான் தலைமை நீதிபதி என்வி ரமணா இந்தக் கருத்தை பதிவு செய்துள்ளார். மேலும் தனது பேச்சில் தலைமை நீதிபதி … Read more

பாஜகவுக்கு எதிராக குரல் எழுப்புங்கள் – தெலுங்கானா எம்.பி.களுக்கு சந்திர சேகர் ராவ் உத்தரவு!

தெலுங்கானா மாநிலத்தின் மீதான மத்திய அரசின் பக்கச்சார்பான போக்கைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரல் எழுப்புமாறு தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தனது கட்சி எம்.பி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு, டிஆர்எஸ் நாடாளுமன்றக் கட்சியின் கூட்டம் முதல்வர் தலைமையில் இன்று பிரகதி பவனில் நடைபெற்றது. கட்சியின் மக்களவை மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பார்லிமென்ட் கூட்டங்களில் பின்பற்ற வேண்டிய வியூகம் குறித்து, கே.சி.ஆர்., வழிகாட்டுதல்களை வழங்கினார். எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் … Read more

தண்டவாளத்தில் தவறி விழுந்த நபரை ரயில் வருவதற்குள் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே போலீசார்..!

பெங்களூரு கே.ஆர்.புரம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த நபரை, ரயில் வருவதற்குள் ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நடைமேடையில் நடந்து வந்துக் கொண்டிருந்த போது தண்டவாளத்தில் தவறி விழுந்த அந்த நபர், பிளாட்பாரத்தில் ஏற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்துள்ளார். அவ்வழியாக ரயில் வருவதைக் கண்டதும் ஓடிச் சென்ற ரயில்வே போலீசார், அவரை பாதுகாப்பாக மேலே தூக்கிய நிலையில், அடுத்த சில நொடிகளில் ரயில் அவ்வழியாகச் சென்றது. Prompt … Read more

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலுக்கு மத்தியில் நாளை மறுநாள் நாடாளுமன்றம் கூடுகிறது; நாளை எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம்

புதுடெல்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலுக்கு மத்தியில் நாளை மறுநாள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. நாளை எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் வருகிற 24ம் தேதியுடன்  முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வருகிற 18ம் தேதி  (நாளை மறுநாள்) தேர்தல் நடக்கிறது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக  கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சி  வேட்பாளராக யஷ்வந்த் … Read more

மகாராஷ்டிராவில் தொடங்கியது மீண்டும் பெயர் மாற்றும் அரசியல்!

மகாராஷ்டிரா அமைச்சரவை சனிக்கிழமை அன்று மீண்டும் அவுரங்காபாத்தை சம்பாஜிநகர் என்று பெயர் மாற்றியது. இது ஏற்கனவே முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது தான். ஏனெனில் ஏக்நாத் ஷிண்டே தனது கடைசி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முந்தைய முடிவு ‘சட்ட விரோதம்’ என்று கூறினார். உஸ்மானாபாத் தாராசிவ் என மறுபெயரிடப்பட்டது மற்றும் நேவி மும்பை விமான நிலையத்தின் புதிய பெயர் ‘டிபி பாட்டீல்’ விமான நிலையம் என மாற்றப்பட்டது. ஜூன் 29 அன்று, உத்தவ் தாக்கரே … Read more

திடீர் சர்ச்சை கிளம்பியதால் பிரபல வணிக வளாகத்தில் மத வழிபாட்டுக்கு தடை; உத்தரபிரதேசத்தில் பரபரப்பு

லக்னோ: லக்னோவில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் சிலர் மத வழிபாடு செய்ததால் பெரும் சர்ச்சை கிளம்பிய நிலையில், மால் நிர்வாகத்தினர் மத வழிபாட்டுக்கு தடை விதித்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரபல வணிக வளாகத்தை திறந்து வைத்தார். இந்த வணிக வளாகத்தில் வேலை செய்துவந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஊழியர்கள் திறந்தவெளியில் வழிபாடு செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ … Read more