'சங்கி' மட்டும்தான் இல்லை – வார்த்தை கட்டுப்பாடுகள் குறித்து எதிர்கட்சிகள் கடும் விமர்சனம்

ஊழல், பாலியல் தொல்லை, முதலை கண்ணீர், கழுதை உள்ளிட்ட ஏராளமான வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாது என நாடாளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ள கையேடு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியின் விளக்கம் மற்றும் எதிர்கட்சியின் விமர்சனம் உள்ளிட்டவற்றை குறித்து விரிவாக காணலாம்.. ஊழல், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கோழை, அவமானம், கிரிமினல், முதலைக்கண்ணீர், முட்டாள்தனம், சர்வாதிகாரி, சகுனி, சர்வாதிகாரம், அராஜகவாதி, கண்துடைப்பு, ஒட்டுக்கேட்பு, துரோகம் செய்தார், திறமையற்றவர், அழிவு சக்தி, இரட்டை வேடம், பயனற்றது, … Read more

maharashtra petrol price reduction: பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு… இங்கே இல்ல; அங்க!

மகாராஷ்டிர மாநிலத்தில் அண்மையி்ல் நிகழ்ந்த அதிரடி அரசியல் திருப்பதால், உத்தவ் தாக்கரே தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை அணி திரட்டிய ஏக்நாத் ஷிண்டே, பாஜகவின் ஆதரவுடன் தற்போது முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். புதிய அரசு பொறுப்பேற்றதன் அடையாளமாக, மகாராஷ்டிர மக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு ஒன்றை அந்த மாநில அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 3 ரூபாயும் குறைத்து … Read more

“சட்டவிரோத கட்டிடங்கள் இடிக்கப்படுவதற்கு தடை விதிக்க முடியாது” -உச்ச நீதிமன்றம் உத்தரவு

உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், சட்டவிரோத கட்டிடங்கள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்படுவதற்கு உடனடியாக தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. ஜாமியத் உலாமா ஏ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு தாக்கல் செய்த மனுவில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகள் குறிவைத்து இடிக்கப்படுவதாக தெரிவித்திருந்தது. உத்தரபிரதேச அரசு சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, கலவரத்தில் பங்கேற்றவர் என்ற காரணத்துக்காக ஒருவரின் சட்டவிரோத கட்டிடங்களுக்கு விதிவிலக்கு அளிக்க முடியாது என்றும், கலவரம் நடைபெறுவதற்கு முன்னதாகவே சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கும் … Read more

டி.என்.பி.எஸ்.சி.-மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை ஆவணமாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டி.என்.பி.எஸ்.சி.-மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க கோரிய வழக்கில் அரசியல் நடைமுறை சிக்கலை ஆவனமாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளியில் பதவி உயர்வு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டி.என்.பி.எஸ்.சி.-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக கூறிப்பிட்டார். எனவே நீதிமன்றமே ஒரு வரையறையை வகுக்க வேண்டும் … Read more

வரலாற்றில் முதன்முறை! டாலருக்கு 80 ரூபாயாக சரிந்த இறக்குமதி பொருட்களின் விலைகள்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதால் எரிபொருள் உள்ளிட்ட இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 80 ரூபாய் 4 பைசா என வியாழக்கிழமை வணிகமான நிலையில், இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு விரைவாக குறைய தற்போது வாய்ப்பில்லை வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால் வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் செலவு அதிகமாகும் என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. அதேபோல வெளிநாடுகளுக்கு சுற்றுலா … Read more

“சர்வாதிகாரி வடித்த முதலைக் கண்ணீர்” – நெறி பிறழ்ந்த சொற்கள் பட்டியலை சாடிய ராகுல் காந்தி

புதுடெல்லி: நாடாளுமன்ற நெறி பிறழ்ந்த சொற்கள் பட்டியல் – 2022 வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புதிய இந்தியாவுக்கு புதிய அகராதி’ என்று தலைப்பிட்டு ஒரு ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் அன்பார்லிமென்ட்டரி என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அன்பார்லிமென்ட்டரி என்றால், நாட்டை பிரதமர் வழிநடத்தும் விதத்தை விவாதங்களில் மிகச் சரியாக வர்ணிக்கக் கூடிய வார்த்தைகள். ஆனால், இப்போது … Read more

விமான நிலையத்தில் பரிசோதனை; குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை குறித்து மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம்.!

டெல்லி: குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை குறித்து மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பை பரிசோதனை செய்யும் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அதில், குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையங்களில் … Read more

அமலாக்கத்துறையில் சோனியா காந்தி ஆஜராக சம்மன் -நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

சோனியா காந்தி வருகிற 21-ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும் போது நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.   நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில் கூட்டத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் மூத்த தலைவர்கள் அடங்கிய வியூக குழு கூட்டம் சோனியா காந்தியின் இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான … Read more

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்; புதிய பட்டியல் வெளியீடு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ம் தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் … Read more

இனி பாஜக அரசை எதைச் சொல்லித்தான் நாங்கள் விமர்சிப்பது: மஹூவா மொய்த்ரா 

நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ள வார்த்தைகள் அடங்கிய பட்டியலுக்கு திரிணமூல் எம்.பி. மஹூவா மொய்த்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மக்களவை செயலர் அவை நாகரிகமற்ற வார்த்தைகள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதிலுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாகவும், மீறி பயன்படுத்தினால் அவைக் குறிப்பிலிருந்து அந்த வார்த்தைகள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தடை செய்யப்பட்ட வார்த்தைகளின் பட்டியல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ஆங்கில அகர வரிசையில் அவை … Read more