பாகிஸ்தானுக்கு ஒரு ரகசிய தகவலை அளித்தால் ரூ.50,000: கைதான கடற்படை ஊழியர் விஷால் யாதவ் வாக்குமூலம்

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு ஒரு தகவலை அளித்தால் ரூ.50,000 கிடைக்கும் என்று கைதான கடற்படை ஊழியர் விஷால் யாதவ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஹரியானாவின் ரேவரியை சேர்ந்த விஷால் யாதவ், டெல்லியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு கடற்படையின் ரகசிய தகவல்களை வழங்கி வந்துள்ளார். அண்மையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராஜஸ்தான் உளவுத் துறை போலீஸார் கூறியதாவது: … Read more

டோல்கேட்டில் இனி கட்டணம் கிடையாது! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

கடந்த சில தினங்களாக இருசக்கர வாகனங்களுக்கும் டோல்கேட்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

வங்கதேசத்துடனான கங்கை நீர் பகிர்வை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி: வங்கதேசத்துடன் செய்து கொண்ட கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. சிந்து நிதி நீரை பகிர்ந்து கொள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக அந்த ஒப்பந்தத்தை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் பாகிஸ்தானில் வறட்சி ஏற்படும். வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. வங்கதேசத்துடன் இந்தியா கடந்த 1996-ம் … Read more

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை: மேலும் 3 பேர் சுற்றிவளைப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் தொலைதூர பசந்த்கர், பிஹாலி வனப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம் மற்றும் போலீஸ் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இதில் 4 தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். வனப் பகுதிக்குள் சிக்கிய எஞ்சிய 3 பேர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஜம்மு போலீஸ் ஐஜி பீம் சென் துதி கூறுகையில், “இந்த … Read more

நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட கடற்படை ஊழியர் கைது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் காவல் துறை தலைவர் (சிஐடி-பாதுகாப்பு) விஷ்ணு காந்த் குப்தா கூறியதாவது: டெல்லி கடற்படை தலைமையகத்தில் உள்ள கப்பல்துறை இயக்குநரகத்தில் எழுத்தராக (யுடிசி) விஷால் யாதவ் பணியாற்றி வருகிறார். ஹரியாணாவின் ரேவாரியைச் சேர்ந்த இவர், இந்திய பெண்போல தன்னை காட்டிக் கொண்டு பாகிஸ்தான் பெண் ஒருவருக்கு ராணுவ ரகசியங்களை கசிய விட்டுள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்கள் பற்றிய … Read more

தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண் கைது: 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் ஒரு பெண் தனது காரை ரயில் தண்டவாளத்தின் மீது ஓட்டியதால், அந்த மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரம் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லக்னோவை சேர்ந்தவர் ரவிகா சோனி (33). ஹைதரபாத்தில் ஒரு சாஃப்ட் வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் செய்வது வழக்கம். சமீபத்தில் இவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ரீல்ஸ் மோகத்தால் ரவிகா சோனி, ரங்காரெட்டி மாவட்டம், நாகலபல்லி – … Read more

கதாகாலட்சேபம் செய்பவர் மீதும் உ.பி.​யில் 2 வழக்குகள் பதிவு

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் கதாகாலட்சேபம் செய்பவர் தாக்கப்பட்ட விவகாரம் ஒரே நாளில் தலைகீழாக மாறியுள்ளது. இவர் ஒரு பெண்ணை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகவும், பிராமணர் என பொய் கூறி மோசடி செய்ததாகவும் இரு வழக்குகள் பதிவாகி உள்ளன. உ.பி.யின் அவுரய்யா நகரை சேர்ந்த முகுந்த்மணி சிங் யாதவ், கடந்த 15 வருடங்களாக கதாகாலட்சேபம் செய்து வருகிறார். இவர், ராமாயணம், மகாபாரதம் தொடர்பான கதாகாலட்சேபங்களில் பிரபலமானவர். இவர், எட்டாவா மாவட்டத்தின் தந்தர்பூர் கிராமத்துக்கு கதாகாலட்சேபம் செய்ய அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை … Read more

சத்தீஸ்கரில் 2 பெண் நக்சலைட்கள் சுட்டுக் கொலை

நாராயண்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: அபுஜ்மாத்தில் உள்ள கோகமெட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப் பகுதியில் மாவட்ட ரிசர்வ் படையினரும், சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து புதன்கிழமை மாலை நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை தொடங்கினர். மாவோயிஸ்ட்களின் மாட் பிரிவின் மூத்த போராளிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்த தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. அப்போது … Read more

ஆர்எஸ்எஸ் ஒருபோதும் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பில் உள்ள மதச்சார்பின்மை, சோசலிசம் எனும் வார்த்தைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் கூறி இருந்த நிலையில், அந்த அமைப்பு அரசியலமைப்பை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய அரசியலமைப்பை ஆர்எஸ்எஸ் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் தொடங்கிய நவம்பர் 30, 1949 முதல் அதில் ஈடுபட்ட டாக்டர் அம்பேத்கர், … Read more

ஈரான், இஸ்ரேலில் இருந்து இதுவரை 4,400+ இந்தியர்கள் மீட்பு!

புதுடெல்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் இருந்து ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ், 19 சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 4,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நடைபெற்றதை அடுத்து, அந்த இரு நாடுகளிலும் வசித்து வந்த இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மத்திய அரசு கடந்த 18-ம் தேதி ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கியது. இதுவரை 19 சிறப்பு விமானங்களில், … Read more