பாஜக பெண் செய்தி தொடர்பாளர் குறித்து ஆபாச வீடியோ பதிவு: டெல்லி போலீஸ் வழக்கு

புதுடெல்லி: பாஜக பெண் செய்தி தொடர்பாளர் தொடர்பான ஆபாச வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். டெல்லி பாஜக பெண் செய்தித் தொடர்பாளர் குறித்து ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அதையடுத்து சம்பந்தப்பட்ட பெண் செய்தி தொடர்பாளர் டெல்லி போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து புதுடெல்லி மாவட்ட சைபர் செல் பிரிவு போலீசார் இந்திய தண்டனை சட்டத்தின் 354ஏ, 509 மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு … Read more

கோவா காங். பிளவு! தற்காலிகமாக தவிர்ப்பு! முழு பின்னணி இதோ!

தற்போது 10 எம்.எல்.ஏக்களும் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பதால் கோவா காங்கிரஸில் பிளவு தற்போதைக்கு தவிர்க்கப்பட்டுள்ளது. கோவாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் திகாம்பர் காமத், மைக்கேல் லோபோ உள்ளிட்ட 6 பேர் பாரதிய ஜனதா கட்சியில் சேர இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து, காங்கிரஸ் தரப்பில் அந்த எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள முயன்ற போது அவர்களது செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. … Read more

நதி வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த நபர்.. உயிரை பொருட்படுத்தாமல் நதியில் குதித்து காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரர்!

சத்தீஸ்கர் மாநிலம், கான்கெர் மாவட்டத்தில் நதி வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து கொண்டிருந்த ஒரு நபரை, எல்லை பாதுகாப்பு படை நீச்சல் வீரர் ஒருவர் கடும் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டார். நதி பாலத்தின் கீழே பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் மரக்கட்டையை பிடித்தப்படி அந்த நபர் போராடிக்கொண்டிருந்தார். அப்போது  உயிரை பொருட்படுத்தாமல் நதி வெள்ளத்தில் குதித்த எல்லை பாதுகாப்பு படை வீரர் எஸ்ஐ பிஜு குமார் பின்னர் சக வீரர்களின் உதவியுடன் அந்த நபரை மீட்டார். Source link

மோடிக்கு எதிராக சர்ச்சை பதிவு கேம் விளையாடிய நண்பர்கள் கைவரிசையால் இளைஞன் கைது

பாட்னா: வீடியோ கேம் விளையாடுவதற்காக தனது செல்போனை பயன்படுத்திய நண்பர்கள், மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருக்கலாம் என்று கைதான இளைஞன் பீகார் போலீசிடம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய பதிவை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த அர்மான் அலி என்பவரை பைகுந்த்பூர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். உள்ளூர் பாஜக தலைவர் ஷம்பு நாராயண் சிங் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த நடவடிக்கை … Read more

Shiv Sena: பாஜக – சிவசேனா மீண்டும் கூட்டணி? – திரெளபதி முர்முவுக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு!

குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்க்கொடி தூக்கினார். மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதை அடுத்து, பெரும்பான்மை இல்லாதததை உணர்ந்த … Read more

சின்ன பையன் என்ன பாவம் பண்ணினான்? சைக்கோ தந்தை விபரீதம்..!

மனைவி மீது இருந்த சந்தேகத்தால் ஒன்பது வயது மகனுக்கு உயிரோடு தீவைத்த தந்தையை அடித்து உதைத்து பொது மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் , நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு நீண்ட நாட்களாக தகராறு செய்து வந்துள்ளார். குறிப்பாக தனது 9 வயது மகன் தன் … Read more

கொலை குற்றவாளிகள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரை பாஜகவினர் மிரட்டியது ஏன்?..முதல்வர் கெலாட் கேள்வி

ஜெய்ப்பூர்: உதய்பூர் கொலை வழக்கில் ெதாடர்புடைய குற்றவாளிகள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரை பாஜகவினர் மிரட்டியது தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்வர் கெலாட் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான ரியாஸ் அக்தாரியுடன் பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், ‘உதய்பூர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பாஜகவுக்கு தொடர்பு இருப்பது … Read more

தனிப்பட்ட காரணங்களுக்காக பயணம் – மீண்டும் வெளிநாடு சென்ற ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட காரணங்களுக்காக ஐரோப்பா பயணமாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுல் காந்தி கடந்த மே மாதம் தொடக்கத்தில் நேபாளம் சென்றார். அங்கு ஓர் இரவு விடுதியில் அவர் இருந்தது சர்ச்சைகளை கிளப்பியது. பின்பு அதே மாதம் இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மே மாதம் இந்தியாவின் பல மாநிலங்களில் ராஜ்ய சபா தேர்தல் நடந்துகொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சி இதில் இடங்களை தக்கவைப்பதில் தடுமாறி கொண்டிருந்தது. அந்த … Read more

”மாநிலங்களின் வளர்ச்சியால் தான் நாடும் வளர்ச்சி பெறும்”

உதான் திட்டத்தின் கீழ் கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் சுமார் 70 இடங்களில், புதிய விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் போன்றவை அமைக்கப்பட்டதாகவும், நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 401 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தியோகர் விமானநிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், அங்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27ம்தேதி நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27ம்தேதி நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் சுப்பா ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மிக பிரமாண்டமாக பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்ஆனால் கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக … Read more