திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27ம்தேதி நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27ம்தேதி நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் சுப்பா ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மிக பிரமாண்டமாக பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்ஆனால் கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக … Read more

“என்னைப் போல் சிங்கிளாக இருங்கள்” – மக்கள் தொகையை கட்டுப்படுத்த நாகலாந்து அமைச்சரின் ஐடியா

கோஹிமா: “மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த என்னைப் போல் சிங்கிளாக இருங்கள்” என்று நாகலாந்து மாநில அமைச்சர் பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை உலகில் வாழும் மக்கள் தொகை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நவம்பர் 12, 2022-ல் உலக மக்கள் தொகை 800 கோடியாக உயர்ந்திருக்கும் என்றும், தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சமாகவும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே … Read more

தக்காளி காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம் – சுகாதார அமைச்சர் அட்வைஸ்!

தக்காளி காய்ச்சல் குறித்து பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் என, கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார். அண்டை மாநிலமான கேரளாவில், தக்காளி காய்ச்சல் என்ற பெயரில் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வகை காய்ச்சல் குறிப்பாக சிறுவர்களுக்கு அதிகம் பரவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கோட்டயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கேரளாவில் ஒருசில மாவட்டங்களில் தக்காளி காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு … Read more

ஜார்க்கண்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தியோகர் விமானநிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தியோகர் விமானநிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுமார் 12 ஆண்டுகால கனவை பிரதமர் இன்று நிறைவேற்றி இருப்பதாகவும், இது ஜார்கண்ட் மக்களுக்கு பெருமைக்குரிய விஷயம் என்றும் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார். தியோகர் விமான நிலையத்தை திறந்து வைத்த பின்னர், பிரதமர் நரேந்திர மோடி அங்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள  பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன் பல்வேறு வளர்ச்சிப்பணிகளையும் தொடங்கி வைத்தார். … Read more

விசா முறைகேடு: ஆகஸ்ட் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: விசா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டது. அதுவரை கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட மாட்டார் என அமலாக்கத்துறை  உறுதியளித்தது.

என்னது ட்ரெயினையே ஹைஜாக் பண்ணிட்டாங்களா?-கதிகலங்கிப்போன பாசஞ்சர்ஸ்!

கர்நாடகாவின் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தப்பட்டுவிட்டது எனக் குறிப்பிட்டு க்ருஷ்ணா பெஹெரா என்பவரின் ட்விட்டர் பதிவால் ரயில்வே அதிகாரிகள் உட்பட பலர் தரப்பிலும் பரபரப்பு தொற்றியிருக்கிறது. கடந்த ஞாயிறன்று சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் மஜ்ரி – சிதாஃபல் மண்டி சந்திப்பு இடையே திசை திருப்பப்பட்டிருக்கிறது. இது குறித்து எந்த அறிவிப்பும் ரயில்வே தரப்பிடம் இருந்து தெரிவிக்கப்படாததால் அச்சமுற்ற க்ருஷ்ணா என்ற பயணி, பதறிப்போய் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், “ட்ரெயின் நம்பர் 12650 கடத்தப்பட்டுவிட்டது. தயவு செய்து … Read more

குடியரசுத் தலைவர் தேர்தலில் முர்முவுக்கு ஆதரவளிக்க சிவசேனா முடிவு..!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிக்க சிவசேனா கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், யாரை ஆதரிப்பது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என அக்கட்சியின் எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முர்முவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என சிவசேனா எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக பேசிய சஞ்சய் ராவத், திரௌபதி முர்முவை ஆதரிப்பது என்பது பாஜகவை ஆதரிப்பதாக அர்த்தமல்ல என்றும் … Read more

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்..!!

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பில் சாலை திட்டங்கள், ரூ.3,000 கோடியில் எரிசக்தி உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. ஜார்க்கண்ட்டில் தியோகர் விமான நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

10 வயது சிறுவனை விழுங்கிய முதலை – மத்தியப் பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி

மத்தியப் பிரதேசத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவனை விழுங்கியதாகக் கூறி ராட்சத முதலையைப் பிடித்து கிராம மக்கள் கட்டிப் போட்டனர். மத்தியப் பிரதேசம் மாநிலம் ஷியோபூரில் உள்ள ஒரு ஆற்றில் நேற்று (திங்கட்கிழமை) காலை, 10 வயது சிறுவன் ஒருவன் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது ஆற்றில் மறைந்திருந்த ஒரு முதலை அச்சிறுவனை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். மேலும் அந்த சிறுவனை முதலை அப்படியே விழுங்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தகவலறிந்து வந்த சிறுவனின் குடும்பத்தினரும் … Read more

மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் – பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய்

மான் வேட்டையாடிய வழக்கில் பொதுவெளியில் நடிகர் சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூறியதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் கைதான அவரிடம் கடந்த 10ம் தேதி முதல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், மான்கள் தங்கள் மதகுருவான ஜம்பேஷ்வரின் மறு அவதாரமாக கருதுவதால், சல்மானும் அவரது தந்தை சலீம் கானும் தனது சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே கொலை செய்யும் … Read more