சிறுநீரில் கண்களை கழுவிய பெண்! அதிர்ந்து போன மருத்துவர்கள்..வைரல் வீடியோ..
Watch Video Urine Eye Wash: ஒரு பெண், சிறுநீரால் கண்களை கழுவிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து மருத்துவர்கள் இவரது செயலுக்கு அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Watch Video Urine Eye Wash: ஒரு பெண், சிறுநீரால் கண்களை கழுவிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து மருத்துவர்கள் இவரது செயலுக்கு அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றனர்.
புதுடெல்லி: அம்பேத்கர் வரைந்த இந்திய அரசியல் சாசன முகவுரையில் இல்லாத ‘மதச்சார்பின்மை’ மற்றும் ‘சோசலிசம்’ ஆகியவை வார்த்தைகள் தொடருவது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதன் 50-ம் ஆண்டை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே, “1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவசரநிலைச் சட்டத்தை பிரகடனத்தினார். அவசரநிலையின் போது அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தால் … Read more
புதுடெல்லி: இமாச்சல பிரதேசம், காஷ்மீர், உத்தராகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் மழை பாதிப்பு, விபத்து காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். பலரை காணவில்லை. இமாச்சல பிரதேசத்தில் மணாலி, ஜீவா நல்லா, ஷிலாகர், ஸ்ட்ரோ, ஹோரன்கர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது. இந்த பகுதிகளின் நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இமாச்சலின் தரம்சாலா பகுதி, கன்னியாரா கிராமத்தில் நீர்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. இங்கு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 20 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் … Read more
புதுடெல்லி: அரசியல் சாசனம்தான் மிக உயர்ந்தது என்றும் ஜனநாயகத்தின் 3 பிரிவுகளும் அதன் கீழ் செயல்படுகின்றன என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவை கடந்த மாதம் பொறுப்பேற்றார். இந்நிலையில், அவருடைய சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித் துறை ஆகிய ஜனநாயகத்தின் 3 பிரிவுகளில் எது … Read more
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த அசோக் டிரேடிங் நிறுவனத்தில் மேலாளராக இருந்தவர் சதீஷ் குமார் ஆனந்த். இந்நிறுவனத்தின் உரிமையாளர் அசோக் குமார். இவர்கள் இருவரும் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து கடந்த 1977-ம் ஆண்டு பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.5.69 லட்சத்தை கடனாக பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக 1978-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆனந்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார். … Read more
Central Government, Aadhaar, IBPS bank exam : வங்கி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு மத்திய அரசு மிகப்பெரிய குட் நியூஸ் கொடுத்திருக்கிறது. மோசடிகளை தடுக்க வங்கிப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இது குறித்து விரிவாக இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
புதுடெல்லி: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டிகளிலிருந்து தரவுகள் எடுக்கப்பட்டு வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று (ஜூன் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏர் இந்தியா விமானம் AI-171 துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) உடனடி விசாரணைக்காக, ஜூன் 13, 2025 அன்று பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி பலதுறை குழு அமைக்கப்பட்டது. சர்வதேச நெறிமுறையின்படி அமைக்கப்பட்ட இந்தக் … Read more
புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீரிக்கப்படாமல் இருக்கும் 345 அரசியல் கட்சிகளை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் 2,800-க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் உள்ளன. இவற்றில் பல கட்சிகள் இந்த நிலையை தொடர்வதற்கு தேவையான நிபந்தனைகளை இதுவரை பூர்த்தி செய்யவில்லை. இது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்திருந்தது. இதையடுத்து, இத்தகைய அரசியல் கட்சிகளை அடையாளம் … Read more
புனே: புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கண்களை சிறுநீரால் கழுவும் வீடியோவை பதிவிட்டிருந்த நிலையில், பலரும் அவரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புனேவைச் சேர்ந்தவர் நூபுர் பிட்டி. இவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த வீடியோ மருத்துவ உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெண் தினமும் காலையில் தனது சிறுநீரில் கண்களை கழுவுவதாக தெரிவித்துள்ளார். அதோடு, அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘Urine Eye Wash — Nature’s Own Medicine’ என்ற தலைப்பில் … Read more
மும்பை: தேசத்தில் பெரும்பாலானோர் இந்தி மொழி பேசி வருவதால் அதை முற்றிலுமாக நாம் புறக்கணிக்க முடியாது. ஆனால், 5-ம் வகுப்புக்கு மேல் மாணவர்கள் விரும்பினால் அந்த மொழியை கற்பிக்கலாம் என மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் சரத் பவார் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு மூன்றாவது மொழியாக, இந்தி கட்டாயம் என அம்மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை … Read more