40 பெண்களுக்கு பாலியல் தொல்லை – கர்நாடகாவில் தேடப்படும் பள்ளி ஆசிரியர்!

கர்நாடகாவில் மாணவிகள் உட்பட 40 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கர்நாடகா ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகா சிங்கபுரா கிராமத்தில் அரசு உயர் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் முகமது அசாருதீன். இவர் கொப்பல் மாவட்டம் கரடகி நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில், முகமது அசாருதீன், தன்னுடன் பணியாற்றும் ஆசிரியை ஒருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். தற்போது இதுதொடர்பான ஆபாச வீடியோ காட்சிகள் … Read more

உதய்பூர் கன்னைய்யா கொலையில் உதவி செய்தவர்கள் உட்பட 7 பேர் கைது – வன்முறை பேச்சுக்காக மவுலானா மீது நடவடிக்கை

புதுடெல்லி: முஸ்லிம்களின் இறைத் தூதரை விமர்சித்த நுபுர் சர்மாவுக்கு எதிராக ராஜஸ்தானின் பூந்தி நகரில் ஜுன் 3-ம் தேதி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பேசிய மவுலானா நதீம் அக்தர், ‘‘இறைத்தூதரை விமர்சித்த நுபுர் சர்மாவின் கண்களை தோண்டி எடுக்க வேண்டும்’’ என்பது உட்பட வன்முறையை தூண்டும் வகையில் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஆலம் கோரி மட்டும் கைது செய்யப்பட்டார். தலைமறைவான நதீம் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 … Read more

ஹைதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம்: பின்னணி என்ன?

மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் காவிக்கொடியை பறக்கவிட திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. ஆனால், தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் அக்கட்சிக்கு சிம்மசொப்பனமாக இருக்கின்றன. அந்த வரிசையில் தெலங்கானா மாநிலமும் இப்போது சேர்ந்துள்ளது. மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக செயல்பட்டு வந்த அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தற்போது பிரதமர் மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். தெலங்கானாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேலைகளை அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கி விட்டன. … Read more

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்றும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தளர்வு

144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் இன்றும், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. உதய்பூரை சேர்ந்த தையல்கடை காரர் கன்னையா லால் கடந்த 28-ம் தேதி படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில் இன்று மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக உதய்பூர் மாவட்டத்தில் 10 மணி நேரம் தளர்வு அளித்து மாவட்ட நிர்வாகம் … Read more

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடக்கம்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகரை தேர்ந்தெடுப்பதகான தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சிவசேனா அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க ஷிண்டே ஆதரவு தெருவித்த பின்னர் சிவசேனா எம்.எல்.ஏக்கள்  சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்தனர்.

மணிப்பூர் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

மணிப்பூர் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரயில்வே கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில்  கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கினர். ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. … Read more

ஆல்ட் நியூஸ் முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி – டெல்லி நீதிமன்றத்தில் போலீஸார் தகவல்

புதுடெல்லி: செய்தியின் உண்மை தன்மையை சரிபார்க்கும் இணைய செய்தி நிறுவனமாக “ஆல்ட் நியூஸ்” செயல்படுகிறது. இதன் இணை நிறுவனர் முகமது ஜூபைர் இவரை, சமூக வலைதளங்களில் மத உணர்வுகளை அவமதிக்கும் வகையில் கருத்து, புகைப்படம் வெளியிட்டதற்காக டெல்லி போலீஸார் கடந்த மாதம் 27-ம் தேதி கைது செய்தனர். அவரை 4 நாட்கள் காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் கடந்த 28-ம் தேதி அனுமதி வழங்கியது. இதன்படி முகமது ஜூபைரின் 4 நாட்கள் காவல் நிறைவடைந்து டெல்லி பெருநகர … Read more

கார்பன் சமநிலை: மத்திய அமைச்சர் புது ஐடியா!

பருவநிலை மாற்றம் தொடர்பான COP26 உச்சிமாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திரமோடி அளித்த வாக்குறுதிப்படி, 2030-க்குள் புதைபடிம எரிபொருள் பயன்பாடு அல்லாத 500ஜிகாவாட் மின் உற்பத்தித் திறனை இந்தியா அடைவதற்கு, “கார்பன் சமநிலை“ கட்டட கட்டுமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதோடு, அவற்றை தொழில்துறையுடன் இணைக்க வேண்டுமென, மத்திய அறிவியல்- தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். தூய்மை எரிசக்திக்கான இந்தோ-அமெரிக்க கூட்டு முயற்சியான, சூரியசக்தி டெகத்லான் இந்தியா விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக … Read more

ரோட்டில் அடிபட்டு கிடந்தவருக்கு தக்க நேரத்தில் உதவிய ராகுல் காந்தி…

கேரளாவில் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தவரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்க உதவும் வீடியோ வெளியாகி உள்ளது. வயநாடு மற்றும் மலப்புரத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வடபுர சாலையில் தன் காரில் சென்று கொண்டு இருந்தார். இந்நிலையில், விபத்தில் சிக்கி காயங்களுடன் சாலையில் கிடந்த வாகன ஓட்டியை கவனித்த ராகுல் காந்தி தன் காரை உடனே நிறுத்தி உதவினார். தன்னாக வந்த ஆம்புலன்ஸ்சில் வாகன ஓட்டியை ஏற்றி … Read more

சற்றே குறைந்த வைரஸ் பாதிப்பு; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,103 பேருக்கு கொரோனா.! 31 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 16,103 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 17,092 ஆக  பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 16,103 பேருக்கு புதிதாக கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,09,568-லிருந்து 1,11,711 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி … Read more