அடுத்தாண்டு ஏப்ரல் 1 முதல் கார்களுக்கு ஸ்டார் ரேட்டிங்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் புதிய கார்களுக்க விபத்துகளை தாங்கும் திறனை பொருத்து நட்சத்திர மதிப்பீடு அளிக்கும் திட்டம் அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.விபத்துகளை தாங்கும் திறனை பொருத்து புதிய கார்களுக்கும், மற்ற நுகர்வோர் பொருட்களை போல் நடசத்திர மதிப்பீடு (ஸ்டார் ரேட்டிங்) வழங்கப்படும் என்று ஒன்றிய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் அறிவித்தார். ‘இந்த நட்சத்திர மதிப்பீடு அடிப்படையில், பாதுகாப்பான கார்களை மக்கள் தேர்வு … Read more

ஒடிசாவில் மின்சார வசதி கூட இல்லாத திரவுபதி முர்முவின் சொந்த கிராமம்

புவனேஸ்வர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். ஆனால் அவரது சொந்த ஊரான ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் உபர்பேடா கிராமம், இதுவரையில் மின்சார வசதியைக் கூட பெறாத நிலையில் உள்ளது. குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். திரவுபதி முர்முவின் அண்ணன் பகத் சரண் துடுவின் மகன் பிராஞ்சி நாராயண் துடு அந்த கிராமத்தில் மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார். … Read more

ஜி 7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட ஜி7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஜெர்மனியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து நள்ளிரவில் புறப்பட்டுச் சென்றார். அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஜி7 நாடுகள் பங்கேற்கும் மூன்று நாள் உச்சி மாநாடு ஜெர்மனியின் பவாரியா பகுதியில் இன்று தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட 5 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நள்ளிரவில் டெல்லியில் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,350,215 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.50 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,350,215 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 548,605,448 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 523,456,003 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,246 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவசேனா அரசு கவிழ்ந்தால் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியா? – அமைச்சர்களின் கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி: மகாராஷ்டிராவின் ஆளும் சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் ஆபத்து சூழந்துள்ள நிலையில் மத்திய, மாநில அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக, சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகி குடியரசு தலைவர் ஆட்சி அமலாகும் வாய்ப்பிருப்பதாக சர்ச்சைகள் கிளம்பிவிட்டன. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனாவின் கூட்டணி ஆட்சி நிலவுகிறது. இதன் மேலவைக்கு கடந்த ஜூன் 20-ல் நடைபெற்ற தேர்தலில் ஆளும் கூட்டணி ஒரு உறுப்பினருக்கான வாய்ப்பை இழந்தது. இதற்கு முன் நடைபெற்ற மாநிலங்களவை … Read more

பஞ்சாப்பில் லஞ்ச வழக்கில் கைதான ஐஏஎஸ் அதிகாரியின் மகன் மர்ம மரணம்: துப்பாக்கி குண்டு பாய்ந்தது

சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மியின் முதல்வர் பகவந்த் மான், லஞ்சம், ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். டெண்டர் ஒதுக்கீடுக்கு ஒரு சதவீதம் லஞ்சம் கேட்ட சுகாதார அமைச்சரை கைது செய்து சிறையில் அடைந்தார். இதைத் தொடர்ந்து, கழிவு நீர் கால்வாய் அமைக்கும் டெண்டரை வழங்க லஞ்சம் கேட்ட ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் பாப்லி, கடந்த வாரம் கைது அதிரடியாக செய்யப்பட்டார். இந்நிலையில், பாப்லியின் மகனும் வழக்கறிஞருமான கார்த்திக் … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் – யஷ்வந்த் சின்ஹாவுக்கு சந்திரசேகர ராவ் ஆதரவு

ஹைதராபாத்: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். இதேபோல, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், மத்திய … Read more

தென்னிந்திய படங்கள் ஓடுவதை ஆராய்வது பயனற்றது: மாதவன் ‘கடுகடு’

மும்பை: ‘தென்னிந்திய படங்கள் ஓடுவதை ஆராய்வது பயனற்றது’ என்று கருத்து கூறியுள்ளார் நடிகர் மாதவன்.மாதவன், சிம்ரன் நடித்துள்ள ‘ராக்கெட்ரி்: தி நம்பி எஃபெக்ட்’ என்ற படம் வரும் ஜூலை 1ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் நடித்திருப்பதுடன் இப்படத்தையும் மாதவன் இயக்கியுள்ளார். இப்படம் பல மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் ‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’, ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற தென்னிந்திய படங்கள் வட இந்தியாவில் வசூலைக் குவித்து வருவது குறித்து மாதவனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:தென்னிந்தியப் படங்கள் திடீரென்று நன்றாக … Read more

ஒரே படத்தில் இத்தனை ஹீரோயின்களா? சல்மானுடன் இணையும் தென்னிந்திய நடிகைகள்

மும்பை: சல்மான் கானுடன் ஒரே படத்தில் தென்னிந்திய நடிகைகள் 5 பேர் இணைந்து நடிக்க உள்ளனர்.சல்மான் கான், அனில் கபூர், பர்தின் கான், பிபாஷா பாசு, லாரா தத்தா நடித்த படம், ‘நோ என்ட்ரி’. அனீஸ் பாஸ்மி இயக்கி இருந்தார். இப்படத்தின் இரண்டாவது பாகம், ‘நோ என்ட்ரி மே என்ட்ரி’ என்ற பெயரில் உருவாக உள்ளது. இதிலும் சல்மான் கானுடன் அனில் கபூர் நடிக்க உள்ளார். மற்றொரு ஹீரோவாக நடிப்பவர் முடிவாகவில்லை. அதே நேரம், ஹீரோயின்கள் மாற்றப்பட்டுள்ளனர். … Read more

'பாஜகவுக்கான ஆதரவு கிடையாது இது' – திரவுபதி முர்முவை ஆதரிப்பதற்கான காரணத்தை விளக்கிய மாயாவதி

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு (64), தனது வேட்புமனுவை நேற்றுமுன்தினம் தாக்கல் செய்தார். பாஜக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டவுடன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முழு ஆதரவை தெரிவித்தார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோரும் அவருக்கு … Read more