சுகேஷிடம் மாதம் ரூ.1.5 கோடி லஞ்சம் பெற்ற 81 அதிகாரிகள்: பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு

புதுடெல்லி: சிறையில் செல்போன் பேசவும், சொகுசாக இருக்கவும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், 81 சிறை அதிகாரிகளுக்கு மாதம் ரூ.1.5 கோடி லஞ்சம் வழங்கியதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்து, இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதாக டிடிவி தினகரனிடம் மோசடியில் ஈடுபட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீசார் கடந்த 2017ல் கைது செய்தனர். இவர் டெல்லி ரோகினி சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, சில தொழிலதிபர்களை … Read more

தாய் மண்ணுக்கு சேவையாற்ற இயற்கை விவசாயத்தை பின்பற்றுங்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

டெல்லி: பூமி தாய்க்கு சேவை செய்ய இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள் என்று விவசாயிகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். குஜராத்தின் சூரத் நகரில் நடந்த இயற்கை விவசாயம் பற்றிய கருத்தரங்கில் பிரதமர் மோடி காணொலி மூலம் பேசியதாவது. இயற்கை விவசாயத்தை பின்பற்றுவது தாய் மண்ணுக்கும், இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் சேவை செய்வது போன்றது. இதன் மூலம் மண்ணின் தரத்தையும், உற்பத்தி திறனையும் பாதுகாக்க முடியும். கிராமத்தில் மாற்றத்தை கொண்டு வருவது எளிதானதல்ல என்று கூறியவர்களுக்கு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் … Read more

டெல்லியில் 6 மாதத்தில் 10 ஆயிரம் தீ விபத்துகள்: 60 பேர் பலி

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 6 மாதங்களில் மட்டுமே 10,350 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 60 பேர் பலியாகி உள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் இருந்தே டெல்லி தீயணைப்பு துறையின் கட்டுப்பாட்டு சேவை  மையம் பரபரப்பாகவே இருந்து வருகிறது. கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரையில்,  கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளுக்கு விபத்து குறித்து 16,763 அவசர அழைப்புகள் வந்துள்ளன. இவற்றில் 10 ஆயிரத்து 379 அழைப்புகள் தீ விபத்து தொடர்பானவை. இது … Read more

கட்சி ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தனர்: கோவாவில் 7 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய திட்டம்?

பனாஜி: கோவாவில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை 7 பேர் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் 7 பேரும் பாஜகவில் சேர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 25 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. 11 இடங்களில் வென்றகாங்கிரஸ், முக்கிய எதிர்க்கட்சியானது. தேர்தலின்போது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திகம்பர் காமத், தனக்கு … Read more

தமிழில் புதுப்படம் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய ஸ்ருதி

ஐதராபாத்: மலையாளத்தில் நடிகர் பிருத்வி ராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘காட்ஃபாதர்’ படத்தில், மோகன் ராஜா இயக்கத்தில் சல்மான்கான், நயன்தாரா ஆகியோருடன் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. அடுத்து அஜித் குமார் தமிழில் நடித்த ‘வேதாளம்’ என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘போலா சங்கர்’ படத்தில், மெஹர் ரமேஷ் இயக்கத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி. இதில் அவரது தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்நிலையில், சிரஞ்சீவியின் 154வது படத்தை பாபி இயக்குகிறார். … Read more

மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை கருத்து மன்னிப்பு கேட்ட நடிகர், இயக்குனர்

திருவனந்தபுரம்: மாற்றுத்திறனாளிகள் குறித்து திரைப்படம் ஒன்றில் சர்ச்சையான கருத்து வெளியான நிலையில், அதற்காக பிருத்விராஜ், இயக்குனர்  ஷாஜி கைலாஷ் மன்னிப்பு கேட்டுள்ளனர். மலையாளத்தில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் பிருத்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன் நடிப்பில் வெளியான ‘கடுவா’ படத்தில், ‘மாற்றுத் திறனாளி குழந்தைகள் பிறப்பதற்கு அவரவர் பெற்றோர் செய்த பாவம்தான் காரணம்’ என்ற அர்த்தத்தில், படத்தின் ஹீரோ சொல்வது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரள … Read more

என் திருமணத்தில் ஜனங்களுக்குதான் ரொம்ப அக்கறை… சோனாக்‌ஷி சலிப்பு

மும்பை: பாலிவுட் நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹாவின் மகளும், நடிகையுமான சோனாக்‌ஷி சின்ஹா, தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது அவருக்கு 35 வயது முடிந்து, 36வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆனால், இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், அவரது திருமணம் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாவது வழக்கம். அதாவது, சில பாலிவுட் ஹீரோக்களுடன் அவரை இணைத்து கிசுகிசுக்கள் வெளியாகும். இதை அவர் மறுப்பார். இந்நிலையில், சோனாக்‌ஷி சின்ஹா அளித்துள்ள பேட்டி வருமாறு: … Read more

இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருந்து வருகிறது – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கைக்கு இந்தியா ஆதரவாக இருந்து வருவதாகவும் அவர்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்வதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவர்கள் தங்கள் பிரச்சினையை சமாளித்து வருவதாக தெரிவித்தார். இலங்கையில் என்ன நடக்கிறது என பார்ப்போம் என்று தெரிவித்த ஜெய்சங்கர், தற்போது அகதிகள் நெருக்கடி எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.   Source link

மூளையில் அறுவை சிகிச்சை நடிகை திடீர் மரணம்

கோழிக்கோடு: கேரளா வைச் சேர்ந்த மேடை நாடகம் மற்றும் டி.வி நடிகை சத்யா ராஜன் (66) திடீரென மரணம் அடைந்தார். அவரது மூளையில் கட்டி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், சிகிச்சைக்குப் பிறகு அவர் ஒரு மாதத்துக்கு மேல் கோமாவில் இருந்ததாக கூறப்படுகிறது. வெங்கராவை சேர்ந்த சத்யா ராஜன், மலையாள திரைப்பட நடிகர்கள் குதிரவட்டம் பப்பு, நெல்லிக்கோடு பாஸ்கரன், மாமுக்கோயா உள்பட சிலருடன் இணைந்து நடித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட நாடகக்குழுக்களில் பணியாற்றி, … Read more

குதிரையில் பயணித்த மும்பை நபரை அடையாளம் கண்டது ஸ்விகி:  யார் அவர்?

புது டெல்லி: குதிரையில் பயணித்த மும்பை நபரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்து வரும் ஸ்விகி நிறுவனம். அவர் யார் என பார்ப்போம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மழைக்கு நடுவே ஸ்விகி நிறுவன பையை மாட்டிக்கொண்டு குதிரையில் ஒரு நபர் சென்றிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. முதலில் அந்த நபர் ஸ்விகி நிறுவனத்தில் பணியாற்றி வரும் உணவு டெலிவரி ஊழியர் என சொல்லப்பட்டது. ஸ்விகி நிறுவனமும் … Read more