பஞ்சாப் முதல்வருக்கு நாளை இரண்டாவது திருமணம்; டாக்டர் பெண்ணை கரம்பிடிக்கிறார்!

48 வயதாகும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் திருமணம் நாளை சண்டிகரில் எளிமையான முறையில் நடைபெற உள்ளது. நகைச்சுவையாளர், பாடகர், நடிகர், சமூக சேவகர், அரசியல் பிரமுகர் என பன்முகத் திறமை கொண்டவர் தற்போதைய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று பகவந்த் மான் முதல்வராக பதவி வகித்து வருகிறார். … Read more

மாநில வளர்ச்சிக்கு உதவுவதாக பிரதமர் மோடி, அமித் ஷா உறுதி – மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தகவல்

மும்பை: மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் என்னிடம் உறுதி அளித்துள்ளனர் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் தாணே மாவட்டத்திலுள்ள தனது சொந்த கிராமத்துக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று முன்தினம் இரவு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்களிடம் ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது: கடந்த 2 வாரங்களாக மகாராஷ்டிரா அரசியலில் பல்வேறு … Read more

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு டும் டும் டும்..!

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, 48 வயதாகும் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, முதல் மனைவியை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள், தாயுடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். எனினும், பஞ்சாப் மாநில முதலமைச்சராக பகவந்த் மான் பதவியேற்ற நிகழ்ச்சியில், அவரது குழந்தைகள் பதவி ஏற்றனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், முதலமைச்சர் பகவந்த் … Read more

இந்துக் கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எம்பி மஹுவா மொய்த்ரா மீது போலீசார் வழக்குப்பதிவு.!

இந்துக் கடவுள் காளி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது போபால் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், மத உணர்வுகளை புண்படுத்துவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் எச்சரித்துள்ளார். இதற்கிடையே, மஹுவா மொய்த்ரா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அதற்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. Source link

உருக்குத்துறை அமைச்சர் ஆர்.சி.பி. சிங்-ன் பதவி காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில் இன்று ராஜினாமா!

டெல்லி: உருக்குத்துறை அமைச்சர் ஆர்.சி.பி. சிங்-ன் பதவி காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து ராஜினாமா செய்தார். ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினர் பதவி முடிவடைய உள்ள நிலையில் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்தார்.

சாலையிலேயே நிகழ்ந்த யானையின் பிரசவம்.. தொந்தரவு செய்யாமல் காத்திருந்த வாகன ஓட்டிகள்

கேரள மாநிலம் மறையூர் அருகே யானையொன்று சாலையிலேயே குட்டி யானையை பிரசவித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறையூரிலிருந்து தமிழகத்தின் உடுமலைப்பேட்டை பகுதியை இணைக்கும் மலைப்பாதையில் யானை ஒன்று நகராமல் நின்றுகொண்டிருந்தது. அச்சம் காரணமாக வாகனங்களை சாலையில் நிறுத்தியபடி ஓட்டுநர்கள் காத்திருந்தனர். நீண்ட நேரம் நகராமல் இருந்ததால் சந்தேகமடைந்த வாகன ஓட்டுநர்கள் அருகில் சென்று பார்த்தபோது யானை, குட்டியை ஈன்றது தெரியவந்தது.  குட்டியை அழைத்துக்கொண்டு தாய் யானை காட்டுக்குள் செல்லும்வரை, ஒருமணிநேரத்திற்குமேல் இருப்பக்கமும் வாகனங்கள் காத்திருந்தன. இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. யானை பிரசவிப்பதற்காக வாகன ஓட்டிகள் தொர்ந்தரவு செய்யாமல் காத்திருந்த சம்பவம் நெட்டிசன்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

உதய்பூர் கொலையாளிகளை பிடிக்க உதவிய கிராமவாசிகள் 2 பேருக்கு ராஜஸ்தான் முதல்வர் பாராட்டு

ஜெய்ப்பூர்: நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கன்னையா லால் என்ற தையல்காரர் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர வீடியோவை பார்த்தபின், கொலையாளிகள் கவுஸ் முகமது, முகமது ரியாஸ் ஆகியோரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினர். கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் தியோகர் மற்றும் பிம் ஆகிய இடங்களுக்கு இடையே இருப்பதை அறிந்த போலீசார், அந்தப் பகுதியை சேர்ந்த தார் கிராமத்தைச் சேர்ந்த சக்தி சிங் மற்றும் … Read more

Kaali Poster Row: கடவுள் காளி குறித்து சர்ச்சை கருத்து – திரிணாமுல் காங். எம்பி மீது வழக்கு பதிவு!

கடவுள் காளி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் லீனா மணிமேகலை. அவர் தற்போது காளி என்ற ஆவணப்படத்தை உருவாக்கி உள்ளார். இதன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கடும் எதிர்ப்பைப் பெற்றது. அதில், காளி வாயில் சிகரெட்டுடனும், தன் பாலினத்தவர்களான எல்ஜிபிடி சமூகத்தின் கொடியுடனும், மற்றொரு கையில் திரிசூலம் உள்ளிட்ட ஆயுதங்களுடனும் … Read more

திடீரென சாலையில் இருந்த மரம் சாய்ந்து விழுந்த நிலையில், ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய சிசிடிவி காட்சி

கேரளாவில் தொடர் மழை காரணமாக சாலையோரத்தில் இருந்த மரம் சாய்ந்தது சாலையில் நடந்து சென்றவர் மீது சாய்ந்த மரம் அதிர்ஷ்டவசமாக மரத்திற்கு இடையே சிக்கிய நபர் உயிர்த்தப்பினார் மரம் சாய்ந்து விழுந்த சிசிடிவிக் காட்சி Source link

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நுபுர் சர்மாவுக்கு மீண்டும் சம்மன்

கொல்கத்தா: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நுபுர் சர்மாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜூலை 16-ல் ஆஜராகுமாறு நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.