கையிருப்பை அதிகரிக்கும் வகையில் 52,460 டன் வெங்காயம் கொள்முதல் – மத்திய அரசு நடவடிக்கை!

கையிருப்பை அதிகரிக்கும் வகையில் நிகழாண்டின் மே இறுதி வரையில் 52 ஆயிரத்து 460 டன் வெங்காயத்தை கொள்முதல் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சக அதிகாரி, வரத்து குறைந்த நேரத்தில் விலை அதிகரிப்பை எதிர்கொள்ளும் வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே வெங்காயத்தின் கையிருப்பை அரசு அதிக அளவில் பராமரித்து வருகிறது என்றார். தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பின் மூலமாக வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக கூறிய அவர், 2022ஆம் … Read more

மனநலம் பாதித்த ஏழரை வயது சிறுமி பலாத்காரம், கொலை: உபி வாலிபருக்கு தூக்கு உறுதி

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி காய்கறி வண்டியில் அமர்ந்திருந்த ஏழரை வயது சிறுமியை பெற்றோர் முன்னிலையில் மனோஜ் பிரதாப் சிங் என்ற 28 வயது வாலிபன் கடத்தி சென்றான். உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவன், மனநலம் குன்றிய, மாற்றுத் திறனாளியான அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த வாலிபர் சிறுமியின் தலையை தரையில் அடித்து சிதைத்து கொடூரமாக கொலை செய்தான். இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் … Read more

குவாஹாட்டியில் தங்கியிருக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் – நட்சத்திர ஓட்டலில் ஒரு நாள் செலவு ரூ.8 லட்சம்

குவாஹாட்டி: அசாம் மாநிலம் குவாஹாட்டி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் சிவசேனா மற்றும் சுயேச்சை எம்.ஏல்.ஏ.க்களுக்கான ஒரு வார கட்டணம் ரூ.56 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என சிவசேன கட்சி எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சுமார் 40 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் முதலில் குஜராத்தின் … Read more

பிரதமர் மோடியிடம் ஆதரவு கேட்ட யஷ்வந்த் சின்ஹா

டெல்லி: பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு யஷ்வந்த் சின்ஹா ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட சின்ஹா, கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

முதல்வர் பதவி குறித்து கவலையில்லை; முதுகில் குத்தியதுதான் வலிக்கிறது – உத்தவ் தாக்கரே

“முதல்வர் பதவியை தக்க வைப்பது குறித்தோ, ஆட்சியை காப்பாற்றுவது குறித்தோ எனக்கு ஒரு துளி கூட கவலை இல்லை; ஆனால் எனது சொந்த கட்சியினரே என் முதுகில் குத்தியது தான் மிகவும் வலிக்கிறது” என்று மகாராஷ்ட்ரா முதல்வரும் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே உருக்கமாக தெரிவித்தார். மகாராஷ்ட்ராவில் ஆளும் சிவசேனாவுக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர். அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தற்போது அசாம் மாநிலம் குவாஹாட்டியில் … Read more

முதல்வருக்கான இல்லத்தை காலி செய்துவிட்டேன் – முதல்வர் உத்தவ் தாக்கரே உரை

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சிக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கிளம்பியுள்ள நிலையில், கட்சி மற்றும் ஆட்சி தொடர்பாக கட்சி நிர்வாகிகளின் அச்சத்தை போக்கும் வகையில் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே காணொலி மூலம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: இதுபோன்ற கிளர்ச்சிகளை கட்சி இதற்கு முன்பும் எதிர் கொண்டுள்ளது. என்றாலும் இரண்டு முறை ஆட்சிக்கு வந்துள்ளது. முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை நான் காலி செய்திருக்கலாம். என்றாலும் மன தைரியத்தை நான் இழக்கவில்லை. கடந்த இரண்டரை … Read more

அக்னிபாத் திட்டம் மூலம் விமானப் படையில் சேர வீரர்கள் மும்முரம்.. முதல் நாளில் 3,800 வீரர்கள் விண்ணப்பம்.!

அக்னிபாத் திட்டத்தின் மூலம் விமானப் படையில் சேர முதல் நாளில் மூன்றாயிரத்து 800 வீரர்கள் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு நடுவே அக்னிபாத் திட்டத்தில் விமான படைக்கு ஆட்சேர்பு பணி தொடங்கியது. தரைப்படைக்கு 40 ஆயிரம் வீரர்களும், விமான மற்றும் கடற்படைக்கு தலா மூன்றாயிரம் வீரர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  Source link

இந்தியாவில் ஓராண்டில் கொரோனா தடுப்பூசியால் 42 லட்சம் மரணம் தடுப்பு: ஆய்வறிக்கையில் தகவல்

லண்டன்: இந்தியாவில் கொரோனா தடுப்பூசியால் 2021ம் ஆண்டில் 42 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக தி லான்சென்ட் மருத்துவ இதழ் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. கொரோனா இறப்புகள் தொடர்பாக, தி லான்செட் மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில் முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:அதிகப்படியான கொரோனா இறப்புகளை அடிப்படையாகக் கொண்டு, 185 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் உலகளவில் நிகழ வேண்டிய சாத்தியமான 3.14 கோடி கொரோனா மரணங்களில் 1.98 கோடி இறப்புகள் தடுப்பூசி மூலம் தடுக்கப்பட்டுள்ளன. … Read more

கரோனா தடுப்பூசிகளால் இந்தியாவில் 42 லட்சம் பேரின் மரணம் தடுக்கப்பட்டுள்ளது – லேன்செட் மருத்துவ இதழ் ஆய்வில் தகவல்

புதுடெல்லி: கரோனா தடுப்பூசி செலுத்தியதன் காரணமாக இந்தியாவில் 42.10 லட்சம் பேரின் மரணம் தடுக்கப்பட்டுள்ளது என்று மருத்துவ இதழான லேன் செட் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 5.24 லட்சம் பேர் கரோனாவால் இறந்ததாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், கரோனா தொற்றால் பல லட்சம் பேர் இறந்துள்ளதாக ராகுல் உட்பட பலர் குற்றம் சாட்டினர். ஆனால், இந்தியாவில் பிறப்பு, இறப்பை பதிவு செய்யும் நடைமுறை வலுவாக உள்ளது. இதில் உயிரிழப்புகளை மறைக்க … Read more

கட்சித் தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது; உத்தவுக்கு ஷிண்டே சவால்: ‘சிவசேனா எம்எம்எல்.ஏக்கள் 42 பேர் என்னுடன் உள்ளனர்’

மும்பை: ஷிண்டேயுடன் உள்ள தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் 12 பேர் மீது தகுதியிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துணை சபாநாயகரிடம் சிவசேனா கேட்டுக் கொண்டுள்ள நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தன்னிடம் சிவசேனா எம்எல்ஏக்கள் 42 பேர் உள்ளதாகவும் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வரும் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ளது. சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் மாயமானதில் இருந்து மகாராஷ்டிர அரசியலில் நாளுக்கு … Read more