குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு பிரதமர் மோடியுடன் சந்திப்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் முடிவதை முன்னிட்டு, ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு நேற்று காலை புவனேஸ்வரில் உள்ள பிஜூ பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் டெல்லி வந்தடைந்தார். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான … Read more

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பழங்குடியின மக்களுடன் ஆட்டம் பாட்டம்.!

குடியரசு தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு தேர்வு செய்யப்பட்டதை பழங்குடியின மக்களுடன் இணைந்து மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் பாரம்பரிய உடை அணிந்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார். பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு வேட்பாளர் திரெளபதி முர்மு, இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். இதனிடயே விழாவில் கலந்து கொண்ட மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பழங்குடியின மக்களின் பாரம்பரிய உடை அணிந்து, வில் உள்ளிட்டவற்றை சுமந்து நடனமாடி மகிழ்ந்த காட்சிகளை தன் … Read more

சபரிமலையில் இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை… ஆதார் உள்பட ஏதாவது ஒரு அடையாள அட்டை போதுமாம்!!

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று அதன் தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார். கொரோனா பரவலை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில மாதங்களாக தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி, பக்தர்கள் இதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும், இது தவிர 2 டோஸ் கொரோனா தடுப்பூசி அல்லது ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இந்த நிலையில், கொரோனா … Read more

வீட்டு வாசலில் காரை நிறுத்திய கவுன்சிலர்.. கை விரலை துண்டாக வெட்டிய இளைஞர்

தனது வீட்டு வாசலில் காரை நிறுத்திய கவுன்சிலரின் கை விரலை துண்டாக வெட்டிய இளைஞரை ஹரியாணா போலீஸார் கைது செய்துள்ளனர். ஹரியாணா மாநிலம் கர்னல் நகரின் 13-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் இஷ் குலாட்டி. இவர் வீட்டின் முன்பு பெரிய அளவில் இடம் இருந்தபோதிலும், பக்கத்து வீட்டு வாசலில்தான் தனது காரை நிறுத்துவதை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார். அந்த வீட்டில் வசித்து வரும் வயதான தம்பதியர், பல முறை கூறியும் அங்கு கார் நிறுத்துவதை கவுன்சிலர் கைவிடவில்லை … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ஜூலை மத்தியில் ஆஜராக சோனியாவுக்கு மீண்டும் சம்மன்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ராகுல் காந்தியிடம் 51 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. இதைத் தொடர்ந்து நேற்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. கரோனாவில் இருந்து முழுமையாக குணமாகும்வரை … Read more

அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு இன்றுமுதல் ஆள்சேர்ப்பு.!

அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமானப் படைக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை இன்று தொடங்குகிறது.இந்திய ராணுவத்தில் அக்னி வீரர்களைத் தேர்வு செய்வதற்காக,‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் விமானப் படைகளுக்கான ஆட்சேர்ப்பு அக்னி பாதை திட்டத்தின்கீழ் இன்று தொடங்கும் என்று விமானப் படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் IAF-யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான indianairforce.nic.in, agnipathvayu.cdac.in ஐப் பார்வையிடுவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். Source … Read more

14 எம்பிக்களும் ஷிண்டே அணிக்கு மாறுகின்றனர் உத்தவுக்கு நெருக்கடி முற்றுகிறது: சின்னத்தையும் பறிக்க திட்டம்

மும்பை: கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் பெரும்பான்மையினருடன் அசாமில் முகாமிட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயின் அணிக்கு மாற சிவசேனாவின் 14 எம்பிக்கள் திட்டமிட்டுள்ளது, முதல்வர் உத்தவ் தாக்கரே தரப்பினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உத்தவுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. உண்மையான சிவசேனா தாங்கள்தான் என கோரி வரும் ஷிண்டே தரப்பினர், சின்னத்தையும் முடக்க திட்டமிட்டிருப்பது, உத்தவ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா – பாஜ கூட்டணி வெற்றி பெற்றது. … Read more

இந்தியா இதை செய்தால் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு – மலேசிய அமைச்சர்

மலேசியாவில் அனைத்து துறைகளிலும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றார், இந்திய அரசு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார். மலேசியாவில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அங்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் போதிலும், அது போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது. இரண்டு துறைகளில் மட்டுமே தமிழர்கள் பணியமர்த்தப்பட்டு வருவதால், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மலேசிய தமிழர்கள் தொடர்ந்து எழுப்பி … Read more

பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பு பொருளாதாரத்தை மீட்க உதவும் – பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் 14-வது உச்சி மாநாட்டை சீனா காணொலி மூலம் நேற்று நடத்தியது. இதில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, பிரேசில் அதிபர் ஜெயர் பல்சோநரோ, ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார். இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: உலக பொருளாதாரத்தை நிர்வகிப்பதில், பிரிக்ஸ் உறுப்புநாடுகள் ஒரே மாதிரியான அணுகுமுறையை பின்பற்றுகின்றன. கரோனா பெருந்தொற்றின் பக்க விளைவுகள் தற்போது குறைந்துள்ளன. ஆனாலும், … Read more

மகாராஷ்ட்ரா அரசியலில் பரபரப்பை கிளப்பிய ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஆதரவாக 42 முதல் 46 எம்.எல்.ஏக்கள்.!

மகாராஷ்ட்ரா அரசியலில் பரபரப்பை கிளப்பிய ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஆதரவாக 42 எம்.எல்.ஏக்கள் கவுஹாத்தியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 எம்.எல்ஏக்கள் தமக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ஷிண்டே கூறியுள்ளார். தமது ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே தங்களுக்கு தேசிய கட்சியின் ஆதரவு இருப்பதாக பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்தார். பெரும்பாலான சிவசேனா மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஷிண்டே பக்கமாக அணி மாறியதால் முதலமைச்சர் உத்தாவ் தாக்கரே அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. … Read more