உழவர் கடன் அட்டை விவசாயிகளுக்கு சீராக கடன் வழங்க வேண்டும் – பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியமைச்சர் அறிவுறுத்தல்!
உழவர் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு சீராக கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகளின் கூட்டத்தில் பேசிய அவர், கிராமப்புற வங்கிகளின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், மீன்பிடித்தல் மற்றும் கால்நடை பண்ணை தொழிலில் ஈடுபடுவோருக்கும் உழவர் கடன் அட்டை வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. Source link