சரயு நதியில் மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவர் மீது தாக்குதல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

உத்தரப் பிரதேசத்தின் சரயு நதியில் மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவர் சுற்றியிருந்த கும்பலால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆண் ஒருவர் சரயு நதியில் நீராடுகிறார். அவர் அருகில் ஒரு பெண் இருக்கிறார். அந்தப் பெண் அவரது மனைவி எனத் தெரிகிறது. அவர்கள் இருவரும் இணைந்து புனித நீராட முற்பட சுற்றி இருந்தவர்கள் அந்த தம்பதியை சுற்றிவளைக்கின்றனர். அப்போது அந்த நபர் தனது மனைவியை முத்தமிட சுற்றி இருந்தவர்கள் … Read more

உத்தரபிரதேசத்தில் பொது இடத்தில் வைத்து, மனைவியை முத்தமிட்ட அவரது கணவரை சரமாரியாக தாக்கிய கும்பல்.!

உத்தரபிரதேசத்தில், பொது இடத்தில் வைத்து, மனைவியை முத்தமிட்ட அவரது கணவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. மனைவியுடன் சரயு நதியில் குளித்துக் கொண்டிருந்த நபர் பொதுவெளியில், மனைவியை முத்தமிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள், அவரை தனியே இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டது. தாக்குதல் எப்போது நடைபெற்றது என தெரியாத நிலையில், அதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  Source link

டெல்லி, பஞ்சாப், உ.பி. உள்பட 6 மாநில இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

புதுடெல்லி: 6 மாநிலங்கள் மற்றும் டெல்லியில் உள்ள 3 மக்களவை மற்றும் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. உத்தரபிரதேச மாநிலம் அசம்கர், ராம்பூர் மற்றும் பஞ்சாபில் உள்ள சங்ரூர் ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதேபோல, டெல்லியில் உள்ள ராஜிந்தர் நகர், ஜார்கண்டில் உள்ள மந்தர், ஆந்திராவின் ஆத்மகூர் மற்றும் அகர்தலாவில் உள்ள டவுன் போர்டோவாலி, திரிபுராவில் உள்ள சுர்மா மற்றும் ஜபராஜ்நகர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் … Read more

அக்னிபாத் – வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்தே இழப்பீடு பெற உ.பி. அரசு நடவடிக்கை

உத்தரப் பிரதேசத்தில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இருந்தே இழப்பீட்டை பெற அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, உத்தரப் பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் … Read more

இந்தியாவில் 120 நாட்களுக்கு பின் ஒரே நாளில் 13,313 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

இந்தியாவில் 120 நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 24 மணி நேரத்தில் புதிதாக 13 ஆயிரத்து 313 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மூவாயிரத்து 260 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. Source link

டிவிட்டர் சமூக ஊடகம் வாயிலாக 2,500 எழுத்துக்கள் கொண்ட தகவலை பகிர்வது தொடர்பாக அந்நிறுவனம் பரிசோதனை..!!

டெல்லி: டிவிட்டர் சமூக ஊடகம் வாயிலாக 2,500 எழுத்துக்கள் கொண்ட தகவலை பகிர்வது தொடர்பாக அந்நிறுவனம் பரிசோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா, ஐந்திலந்து, கனடா, கானாவைச் சேர்ந்த சில எழுத்தாளர்களுக்கு புதிய வசதியை அளித்து டிவிட்டர் ஆய்வு மேற்கொண்டுள்ளது. டிவிட்டர் அறிமுகமானபோது 140 எழுத்துகளாக இருந்த தகவல் அளவு, 2017ல் 280 எழுத்துகளாக உயர்த்தப்பட்டது.

புல்டோசரில் சவாரி செய்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவில் இன்ஜினியர் மாப்பிள்ளை!

மத்தியப் பிரதேசத்தில் புல்டோசரில் சவாரி செய்து திருமண நிகழ்ச்சியில் சிவில் இன்ஜினியர் மாப்பிள்ளை பங்கேற்ற ருசிகர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பெதுல் நகராட்சியை சேர்ந்த இளைஞர் அங்குஷ் ஜெய்ஸ்வால். இவர் சிவில் இன்ஜினியராக டாடா கன்சல்டன்சியில் பணிபுரிந்து வருகிறார். பொதுவாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மணமகன் குதிரை அல்லது விலை உயர்ந்த காரில் ஊர்வலம் வருவது வழக்கம். ஆனால் அங்குஷ் வேறு மாதிரியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று கனவு கண்டுள்ளார். அது … Read more

தப்புமா மகாராஷ்டிர அரசு?- சிவசேனா அதிருப்தி அணியில் மேலும் 4 எம்எல்ஏக்கள்: உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடி

மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா எம்எல்ஏக்கள் 30 பேர் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் அந்த அணியில் இன்று மேலும் 4 எம்எல்ஏக்கள் இணைந்தனர். இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. 2019-ல் இந்தக் கூட்டணி பதவியேற்றது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், துணை முதல்வராக … Read more

நாடு முழுவதும் 3 மக்களவைத் தொகுதிகள், 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல்.!

நாடு முழுவதும் 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் சங்குருர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஆம் ஆத்மியின் பகவத் மான், முதலமைச்சரான நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல உத்தரபிரதேச மாநிலத்தில் இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. Source link

முதல்வருக்கான அரசு இல்லத்தை காலி செய்தார் உத்தவ் தாக்கரே

மும்பை : மகாராஷ்டிரா அரசியலில் நடக்கும் குழப்பங்களுக்கு இடையே முதல்வர் உத்தவ் தாக்கரே தனது அரசு இல்லத்தை காலி செய்து சொந்த வீட்டிற்கு சென்றுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்த மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் முதல்வர் பதவியை விட்டு விலகத் தயார் என்று நேற்று உத்தவ் அறிவித்து இருந்தார்.