இந்தியாவின் முதல் 'சோலோகாமி' திருமணம்.. தன்னைத்தானே மணமுடித்த குஜராத் இளம்பெண்!

ஜூன் 11ம் தேதி தன்னைத் தானே திருமணம் செய்துக்கொள்ளவிருந்த இளம்பெண் முன்கூட்டியே சோலோகாமி முறையில் மணமுடித்துக் கொண்டிருக்கிறார். குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த கஷமா பிந்து (24) என்ற இளம்பெண் எதிர்பாலினத்தின் மீது பற்றற்று போனதால் தன்மீதான சுய காதல் மற்றும் சுய அங்கீகாரத்தை வெளிப்படுத்த பெற்றோர் சம்மதத்துடன் தன்னைத் தானே ஜூன் 11ம் தேதி திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இந்தியாவில் இந்த முறை சோலோகாமி திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் கஷாமா பிந்துவின் இந்த பின்வாங்காத … Read more

கரோனா இன்னும் குணமாகவில்லை: விசாரணைக்கு ஆஜராக கூடுதல் அவகாசம் வேண்டி சோனியா கோரிக்கை

புதுடெல்லி: கரோனா தொற்றிலிருந்து இன்னும் குணம் அடையாததால் அமலாக்கத் துறை முன் ஆஜராக கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரியுள்ளார். நேஷனல் ஹெரால்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜூன் 8-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை கடந்த 1-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் மறுநாளே சோனியா காந்திக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அவர் கரோனாவில் இருந்து மீண்டால் அமலாக்கத் துறை முன் … Read more

வியட்நாமுக்கு 12 அதிவிரைவு ரோந்துப் படகுகளை ஒப்படைத்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 12 அதிவிரைவு ரோந்துப் படகுகளை வியட்நாம் கடலோரக் காவல் படைத் தளபதியிடம் ஒப்படைத்தார். வியட்நாமுக்குப் பத்துக் கோடி டாலர் பாதுகாப்புத் தளவாடங்கள் வழங்குவதாக இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இந்தியாவில் கட்டப்பட்ட 5 அதிவிரைவு ரோந்துப் படகுகள், வியட்நாமில் கட்டப்பட்ட 7 ரோந்துப் படகுகள் ஆகியவற்றை வியட்நாம் தளபதியிடம் ராஜ்நாத் சிங் ஒப்படைத்தார். Source link

டெல்லி முன்னாள் சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: டெல்லி முன்னாள் சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி உள்ளிட்ட உபாதைகளுக்கு சத்யேந்திர ஜெயின் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஓவர் டோஸ் வயாகராவால் புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்.. டாக்டர் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

புதிதாக திருமணமான நபர் ஒருவர் நண்பர்களின் பேச்சை கேட்டு இல்லற வாழ்வுக்காக அளவுக்கதிகமான வயகாரா மாத்திரைகளை எடுத்துக்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கதிக்கு ஆளாகியிருக்கிறார். உத்தர பிரதேசத்தின் பிரயக்ராஜ் பகுதியைச் சேர்ந்த நபருக்குதான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அந்த நபருக்கு திருமணம் நடந்திருக்கிறது. தாம்பத்தியத்தில் குறைபாடு இருந்ததன் காரணமாக நண்பர்கள் சிலரின் அறிவுரையை கேட்டு வயாகரா மாத்திரையை உட்கொண்டிருக்கிறார். தொடக்கத்தில் அவருக்கு எவ்வித உபாதைகளும் ஏற்படவிலை. ஒரு கட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 4 … Read more

மருத்துவர் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

புதுடெல்லி: காலியாகவுள்ள முதுநிலை மருத்துவ படிப்பு இடங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மருத்துவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவ முதுநிலை படிப்புகளுக்காக நீட் தேர்வுநடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இடஒதுக்கீடுப்படி கல்லூரிகளில் சேர்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், மத்திய அரசு ஒதுக்கீட்டில் பல இடங்கள் காலியாக உள்ளன. அதன்படி, நடப்பு … Read more

இனி போட்டோ ஷாப்புல தான் குடித்தனம் நடத்தணும் ..! தன்னை தானே மணந்து கொள்ளும் பெண்..!

தன்னை தானே திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்த பெண்,எதிர்ப்புகளை மீறி ஆண் மற்றும் பெண் வேடமிட்டு போட்டோஷாப் மூலம் திருமணத்திற்கு தயாராகி வருகின்றார். தன்னை தானே திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்த குஜராத்தை சேர்ந்த ஷாமா பிந்து என்ற பெண்ணுக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில் அதனை மீறி தன்னை தானே திருமணம் செய்து கொள்வதில் ஷாமா பிந்து தீவிரமாக உள்ளார். கணவனும் யானே.. மனைவியும் நானே.. என்று திருமணத்துக்கு முந்தைய மெகந்தி நிகழ்ச்சிக்கு … Read more

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஜூன் 27ம் தேதி ஸ்டிரைக்: வங்கி சேவைகள் பாதிக்கும் அபாயம்..!!

டெல்லி: 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஜூன் 27ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு உள்ளிட்ட 9 சங்கங்களை உள்ளடக்கிய வங்கி சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பு இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் … Read more

தடுமாறி விழுந்ததை சமாளிக்கவே இந்த வட்டி அதிகரிப்பு! – வாசகர்களின் கமெண்ட்ஸ்

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஜூன் 8-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக, ‘மறுபடியும் அதிகரித்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதம்… பொருளாதாரத்தில் இந்தியா தடுமாறுகிறதா? சமாளிக்கிறதா?’ எனக் கேட்டிருந்தோம். … Read more

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 7,240 ஆக அதிகரிப்பு: நேற்றைவிட 40% அதிகம்

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 7,240 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைவிட இந்த எண்ணிக்கை 40% அதிகம். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கரோனா தொற்று நிலவரம் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,240 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்திற்குப் பின்னர் இன்றைய பாதிப்பு முதன்முறையாக அதிகரித்துள்ளது. அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 1.31 சதவீதமாகவும், வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 2.13 … Read more