சத்தீஸ்கரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

ராய்ப்பூர்: நுபுர் சர்மா முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு பலதரப்பிலும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்தை வெளியிட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த கன்னையா லால் என்பர் கடந்த மாதம் 28-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதேபோல் சத்தீஸ்கர் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா ஜெகத் (22) என்பவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்து ஒன்றை கடந்த மாதம் 12-ம் தேதி பகிர்ந்துள்ளார். தற்போது அவருக்கும் … Read more

மும்பை திரும்பிய எம்.எல்.ஏ.க்கள்: மகாராஷ்டிராவில் இன்று கூடுகிறது சிறப்பு சட்டப்பேரவை!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மாநிலத்தை விட்டு வெளியேறினர். இதனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை உத்தவ் தாக்கரே நிரூபிக்குமாறு மாநில ஆளுநர் பிகத் சிங் கோஷியாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிசும் பொறுப்பேற்றனர். இந்த … Read more

சாலையோரம் நின்ற கார் மீது ஷேர் ஆட்டோ மோதி அப்பளம் போல் நொறுங்கிய சிசிடிவி காட்சி

கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் சாலையோரம் நின்ற கார் மீது ஷேர் ஆட்டோ மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஆட்டோவில் பயணித்த இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  Source link

வெற்றிகரமாக முடிந்தது முதல் சோதனை ஆளில்லா போர் விமானம் கதம் செய்ய வரும் கதக்: ராணுவத்துக்கு பலம் சேர்க்கும் அதிநவீனம்

புதுடெல்லி: நாட்டின் முதல் ஆளில்லா போர் விமான சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இது பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.ராணுவத்தில் பலம் வாய்ந்த அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ராணுவத்தில் ஆளில்லா போர் விமானங்களைக் கொண்டுள்ளன. போர் நடக்கும் சூழலில், இத்தகைய ஆளில்லா விமானங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உக்ரைன் போர் உலகிற்கு காட்டி உள்ளது. இதனால், இந்தியாவும் தனது சொந்த முயற்சியில் ஆளில்லா போர் … Read more

நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து | மகாராஷ்டிர மருந்துகடைக்காரர் கொலை – வழக்கை என்ஐஏ விசாரிக்க உத்தரவு

புதுடெல்லி: மகாராஷ்டிரா மருந்துக் கடை உரிமையாளர் உமேஷ் கோல்கே கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று உத்தரவிட்டார். மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் கால்நடை மருந்து கடை நடத்தி வந்தவர் உமேஷ் கோல்கே (54). இவர் கடந்த ஜூன் 21-ம் தேதி இரவு 10 மணியளவில், தனது கடையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். இவரது மகன் மற்றும் மனைவி மற்றொரு வாகனத்தில் உடன் … Read more

மகாராஷ்டிராவில் சிறப்பு சட்டப்பேரவை இன்று கூடுகிறது

மும்பை: மகாராஷ்டிராவில் சிறப்பு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் சபாநாயகர் தேர்வாகிறார்.நாளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

உதய்பூர் தையல்காரர் கொலை குற்றவாளிகள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்

புதுடெல்லி: உதய்பூர் தையல்காரர் கன்னையா லால் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, வரும் 12-ம் தேதி வரை என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது அங்கு கூடியிருந்த பொது மக்களும் வழக்கறிஞர்களும் தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள், “கன்னையா லாலை கொன்றவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க … Read more

அமராவதி கொலை வழக்கு- என்ஐஏ விசாரணை

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் நடந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். மருந்துக் கடைக்காரரான உமேஷ் கோலே கடந்த மாதம் 21ந் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இர்பான் கான் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். முதலில் இது வழிப்பறிக் கொள்ளை தொடர்பான கொலை என்று கூறி வந்த போலீசார் தற்போது நுபுர் சர்மாவை ஆதரித்ததற்காக கொல்லப்பட்டப்பட்டதாகக் கூறியுள்ளனர். உதய்பூர் தையற்கலைஞர் … Read more

தவறுதலாக எல்லை தாண்டிய குழந்தை: பாக். வீரர்களிடம் ஒப்படைப்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பெரோஸ்பூரில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதி அருகே பாகிஸ்தான் பகுதியில் 3 வயது சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். நேற்று இரவு 7 மணியளவில் அவன் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளான். புதிய இடம் என்பதால் வீட்டிற்கு செல்வதற்கு வழி தெரியாமல் சிறுவன் அப்பா, அப்பா என அழுதுள்ளான். இதனை பார்த்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அவனை மீட்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட சிறுவனின் தந்தை முன்னிலையில் பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் சிறுவன் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டான்.

பிரதமர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு உலக வங்கி ரூ.13,834 கோடி கடனுதவி

புதுடெல்லி: மத்திய அரசு செயல்படுத்தும் பிரதமர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு உலக வங்கி 175 கோடி டாலர் (ரூ.13,834.54 கோடி) கடனுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 100 கோடி டாலர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கும் 75 கோடி டாலர் மேம்பாட்டு திட்டப் பணிகளுக்கும் வழங்கப்படுகிறது. இத்தகவலை இந்தியாவுக்கான உலக வங்கி இயக்குநர் ஹைதெகி மோரி தெரிவித்துள்ளார். தனியார் முதலீடுகள் குறைந்துள்ள சூழலில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க 75 கோடி டாலரை முதலீட்டு திட்டப் பணிகளில் முதலீடு செய்ய … Read more