ஜார்கண்டில் நிஜத்தில் நடந்த ‘காத்துவாக்குல 2 காதல்’ சம்பவம்!
ஒரே நேரத்தில் தான் காதலித்த இரண்டு பெண்களையும் இளைஞர் ஒருவர் மணமுடித்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில் நடந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஒரே நேரத்தில் தான் காதலித்த இரண்டு பெண்களையும் இளைஞர் ஒருவர் மணமுடித்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில் நடந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
இந்தியாவில் சீனப் பொருட்களின் இறக்குமதி கடந்த நிதியாண்டில் 45 விழுக்காடு அதிகரித்து 7 இலட்சம் கோடி ரூபாய் என்னும் அளவைத் தாண்டியுள்ளது. அதே நேரத்தில் சீனாவுக்கு இந்திய பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு அரை விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது. மினரல் ஆயில், வேதிப்பொருட்கள், உரங்கள், பிளாஸ்டிக், இரும்பு மற்றும் உருக்கு, மின் கருவிகள், மருத்துவக் கருவிகள் ஆகியன சீனாவில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. Source link
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வீட்டுக்குள் புகுந்து பலாத்காரம் செய்ய முன்ற நபரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே கூடல் பகுதியை சேர்ந்தவர் ரஜனி (42). கணவனை விவாகரத்து செய்து விட்டார். தற்போது 18 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்த சசிதரன் (50) என்பவருடன் ரஜனிக்கு பழக்கம் ஏற்பட்டது. சசிதரன் அடிக்கடி ரஜனியின் வீட்டுக்கு வந்து … Read more
ஜெய்ப்பூரில் ஆன்லைன் கேமிற்கு அடிமையான 13 வயது சிறுவன் ஒருவன், தனது பெற்றோரின் செல்போன்களையே ஹேக் செய்த விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் தனது பெற்றோரின் செல்போன்களில் இருந்த அனைத்து தரவுகளையும் அழித்துவிட்டு, ஆபாச செய்திகளை அவர்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டதுடன், அதைவைத்து மிரட்டியும் உள்ளான் அந்த சிறுவன். மேலும் அவர்களுடைய செல்போன் திரைகளில் விசித்திர அனிமேஷன்களையும் ஃப்லாஷ் செய்துள்ளான். தங்களுடைய செல்போன்களை யாரோ ஹேக் செய்துவிட்டதாக சிறுவனின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தபின்னரே இந்த விஷயம் … Read more
மும்பை: அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் போர்க்கொடி தூக்கியுள்ளதால், மகாராஷ்டிர மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தான் ராஜினாமா செய்யத் தயார் என்று அம்மாநில முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். சரத்பவாரும், கமல்நாத்தும் தன்னை தொடர்புகொண்டு பேசியதாகவும், முதல்வர் பதவியில் தொடர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஏக்னாத் ஷிண்டேவுடன் சென்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அவர்கள் வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் … Read more
மகாராஷ்டிராவில், ஆளுநரைத் தொடர்ந்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, 40 எம்.எல்.ஏ.க்களுடன் அசாமின் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளார். இதனால் கூட்டணி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார். Source link
டெல்லி: மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுசூழல் அனுமதி கோரும் விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து ஒன்றிய அரசு நீக்கியது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் தமிழகம் கடுமையாக எதிர்த்து வருகிறது. மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்பதும், காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்கக் கூடாது என்பதும்தான் தமிழக அரசின் உறுதியான, இறுதியான நிலைப்பாடு. மேகதாது அணை கட்டக் கூடாது … Read more
மைசூர் அருகே காதலியைக் கொன்று புதைத்து காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கெப்பேஹூண்டி கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜு மற்றும் சுமித்ரா ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து அவ்வப்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி சனிக்கிழமை இவர்கள் இருவரும் அருகிலுள்ள சுற்றுலா இடமான காவேரி நிசர்கதாமா பகுதியில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது … Read more
நேஷனல் ஹெரால்டு வழக்கில் நேரில் ஆஜராவதற்கு ஏதுவாக விசாரணையை சிறிது நாட்கள் ஒத்தி வைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா கோரிக்கை விடுத்துள்ளார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவன விற்பனையில் நடந்த சட்ட விரோத பண மோசடி குறித்து, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, கடந்த 3 ஆம் தேதி ஆஜராகக்கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், 13 ஆம் தேதி ஆஜராகக் கோரி, அவரது மகனும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் … Read more
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஒடிசாவை சேர்ந்த திரௌபதி முர்மு வருகிற 24-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலின்போது பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வருகிற 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18-ம் தேதியும், 21-ம் தேதி வாக்கு … Read more