காதலியை கொன்று புதைத்துவிட்டு அருகிலேயே தூக்கில் தொங்கிய காதலன்.. கர்நாடகாவில் பரபரப்பு

மைசூர் அருகே காதலியைக் கொன்று புதைத்து காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கெப்பேஹூண்டி கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜு மற்றும் சுமித்ரா ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து அவ்வப்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி சனிக்கிழமை இவர்கள் இருவரும் அருகிலுள்ள சுற்றுலா இடமான காவேரி நிசர்கதாமா பகுதியில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ஆஜராக அவகாசம் கேட்கும் சோனியா!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் நேரில் ஆஜராவதற்கு ஏதுவாக விசாரணையை சிறிது நாட்கள் ஒத்தி வைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா கோரிக்கை விடுத்துள்ளார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவன விற்பனையில் நடந்த சட்ட விரோத பண மோசடி குறித்து, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, கடந்த 3 ஆம் தேதி ஆஜராகக்கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், 13 ஆம் தேதி ஆஜராகக் கோரி, அவரது மகனும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் … Read more

ஜூன் 24 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு.!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஒடிசாவை சேர்ந்த திரௌபதி முர்மு வருகிற 24-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலின்போது பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வருகிற 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18-ம் தேதியும், 21-ம் தேதி வாக்கு … Read more

அதிகம் பேர் இல்லை ஒரே ஒரு எம்.எல்.ஏ என் முகத்துக்கு நேராக சொல்லட்டும், நான் பதவி விலகி விடுகிறேன்: உத்தவ் தாக்கரே

மும்பை: நான் முதல்வராக நீடிக்க கூடாது என எம்.எல்.ஏ. யாரும் விரும்பினால் ராஜினாமா செய்யத் தயார் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். என்மீது குறை இருந்தால் என்னிடமே நேரடியாக கூறியிருக்கலாம், அதை விட்டுவிட்டு சூரத்தில் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

பாஜக தலைவருடன் கவுகாத்திக்கு பறந்த 4 சிவசேனா எம்.எல்.ஏக்கள்.. நடப்பது என்ன?

மஹாராஷ்டிராவில் ஆளுங்கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்னாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 46 பேருடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளார். மஹாராஷ்டிராவில் 2019இல் நடந்த சட்டசபை தேர்தலின்போது சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்றன. ஆனால் முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற நாற்காலி சண்டையில் கூட்டணி உடைந்தது. இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கி முதல்வராக பதவியேற்றார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. அவரது … Read more

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு Z+ பாதுகாப்பு.!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளாக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பாதுகாப்பான, Z Plus பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் அவருக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள். Source link

நேஷனல் ஹெரால்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கேட்டு அமலாக்கத்துறைக்கு சோனியாகாந்தி கடிதம்

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து ஆஜராவதில் விலக்கு கேட்டு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார். நேஷனல் ஹெரால்டு நிறுவன பங்குகளை சட்டவிரோதமாக மாற்றிய விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமலாக்கத்துறை விசாரணை நடத்த வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, எம்.பி.ராகுல்காந்தி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. கொரோனா தொற்று காரணமாக சோனியாகாந்திக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், … Read more

ஜெர்மனி பறக்கும் பிரதமர் மோடி.. ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார்!

ஜெர்மனி நாட்டில் நடைபெற உள்ள ஜி – 7 மாநாட்டில் கலந்து கொள்ள இம்மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்கு செல்ல உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில், ஜெர்மனி நாட்டில் வரும் 26, 27 தேதிகளில் ஜி – 7 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, அர்ஜென்டினா, இந்தோனேசியா, செனகல் மற்றும் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உளது. … Read more

பொண்ணு வீடா.. இல்ல மாப்பிள்ளை வீடா.? – கட்டணம் கொடுப்பதில் சச்சரவு.. திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை.!

உத்தரப்பிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் பேண்ட் வாத்திய கட்டணத்தை யார் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த மாப்பிள்ளை திருமணத்தையே நிறுத்திவிட்டு மணமேடையில் இருந்து வெளியேறினார்.  ஃபரூக்காபாத்தில் இருந்து மிர்சாபூருக்கு பேண்ட் வாத்தியங்களை மணமகன் அழைத்து வந்த நிலையில், அதற்கான பணத்தை மணமகள் தரப்பிடம் வாங்கி கொள்ளுமாறு கூறியதால் தகராறு ஏற்பட்டது. Source link

குட்டிக்கரணம் போட்டு விளையாடிய நடிகருக்கு கழுத்தில் ஆபரேஷன்

பெங்களூரு: நடிகர் திகந்த் மற்றும் அவரது  குடும்பத்தினர் கோவாவில் முகாமிட்டிருந்தபோது, நடிகருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதால், அவர் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல கன்னட நடிகர் திகந்த், கோடை விடுமுறையை கழிப்பதற்காக குடும்பத்தினருடன் கோவா சென்றிருந்தார். அப்போது திகந்த், குட்டிக்கரணம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் சுளுக்கு மற்றும் காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைத்ததால், அவரது குடும்பத்தினர் … Read more