கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 4000 ரூபாய்- பிரதமர் மோடி வழங்கினார்

புதுடெல்லி: கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி  முதல் நடப்பாண்டு பிப்ரவரி 28ந் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் இருவரையோ, பெற்றோரில் ஒருவரையோ அல்லது பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ இழந்த குழந்தைகளுக்கு அரசு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம், கடந்த ஆண்டு மே 29ந் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப் பட்டது.  கொரோனாவால் அனாதையான குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், … Read more

பெங்களூருவில் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் மீது கறுப்பு மை வீச்சு

பெங்களூரு: பெங்களூருவில் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் மீது கறுப்பு மை வீசப்பட்டுள்ளது. விவசாயசங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் மீது கறுப்பு மை வீசிய விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு போலீசார் உரிய பாதுகாப்பு தரவில்லை என ராகேஷ் திகாயத் குற்றச்சாட்டினார்.

‘‘நான் தகுதி குறைவானவளா?’’- மாநிலங்களவை எம்.பி. பதவி தராததால் நக்மா அதிருப்தி: காங்கிரஸ் தலைமைக்கு கேள்வி

புதுடெல்லி: மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்கப்படாததால் அதிருப்தியடைந்துள்ள நடிகை நக்மா, நான் தகுதி குறைவானவளா? என கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது காலியாக உள்ள 57 உறுப்பினர்களுக்கான ஜூன் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (மே 31) முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு கட்சிகளும், தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் சார்பில் … Read more

பஞ்சாபி பாடகர் படுகொலை- சிபிஐ, என்ஐஏ விசாரணை கோரும் தந்தை

சண்டிகர்: பஞ்சாப் மாநில பிரபல பாடகரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பை ஆம் ஆத்மி அரசு திரும்ப பெற்ற மறுநாள் அவரை கொலை செய்துள்ளனர்.  இச்சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி செய்யும் தார்மீக அதிகாரத்தை இழந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில், பஞ்சாப் பாடகர் … Read more

இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்ட அத்தியாவசிய மருந்து பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விநியோகம்

கொழும்பு: இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்ட அத்தியாவசிய மருந்து பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகம் மூலமாக தூதரக அதிகாரி ராகேஷ் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

பிஹார் | ஜமுய் பகுதியில் தங்கம் வெட்டி எடுப்பதற்கு அனுமதி வழங்க ஆலோசனை

பாட்னா: இந்திய தொல்லியல் துறை ஆய்வின்படி, பிஹாரின் ஜமுய் மாவட்டத்தில் மட்டும் 222.88 மில்லியன் டன் தங்கம் பூமிக்குள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதில் 37.60 டன் அளவுக்கு உயர்ந்த தங்கதாதுமண் இருக்கிறது என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிஹார் கனிம வள கூடுதல் தலைமை செயலர் ஹர்ஜோத் கவுர் பாம்ரா கூறும்போது “இந்திய தொல்லியல் துறை, தேசிய கனிம வள மேம்பாட்டு கழகம் ஆகியவற்று டன் ஜமுய் மாவட்டத்தில் தங்கத்தை தோண்டி எடுப்பது குறித்து அரசு … Read more

முதல்வரை புகழ்ந்து பேசிய அமைச்சர் – செருப்பை வீசி ஓட ஓட விரட்டிய கும்பல்!

தெலங்கானா மாநிலத்தில், முதலமைச்சர் சந்திரசேகர் ராவை, அமைச்சர் மல்லா ரெட்டி புகழ்ந்து பேசியதால், ஆத்திரமடைந்த பொது மக்கள், அவரது பாதுகாப்பு வாகனம் மீது செருப்பு மற்றும் கற்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்டை மாநிலமான தெலங்கானாவில், முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று (ஞாயிறு) மாலை அரசியல் சார்பற்ற சமூக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் தெலங்கானா மாநில தொழிலாளர் துறை … Read more

35 வயதில் வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த கேரள இளைஞர்

கேரள இளைஞர் ஒருவர் பல நாட்கள் முயற்சிக்குப் பிறகு வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.  பந்தளம் பகுதியை சேர்ந்த ஷேக் ஹசன் என்ற இளைஞர், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை வித்தியாசமாக கொண்டாட எண்ணி எவரெஸ்ட் சிகரத்தை தொட முடிவெடுத்தார். கடந்த மார்ச் 30ஆம் தேதி 15 பேர் கொண்ட குழு, எவரெஸ்ட் நோக்கி புறப்பட்ட போது குழுவில் தன்னையும் இணைத்துக் கொண்ட ஷேக் ஹசன் தற்போது 8,848.86 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து … Read more

மத்தியபிரதேசத்தில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி- 5 பேர் கைது

போபால்: ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் முறைகேடுகளை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறர்கள். போலி ரசீது மூலம் சிலர் மோசடியில் ஈடுபடுவது குறித்து புகார்கள் வந்ததையடுத்து ஜி.எஸ்.டி. வரி அதிகாரிகள் அடிக்கடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். 500 போலி நிறுவனங்களை உருவாக்கி, ஆவணங்கள், முகவரிகள், அடையாள அட்டைகளை போலியாக தயாரித்துள்ளனர். இந்த போலி நிறுவனங்கள் … Read more

ஜூலை முதல் வாரத்தில் புதுச்சேரி கடற்கரையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றுகிறார்

புதுச்சேரி: ஜூலை முதல் வாரத்தில் புதுச்சேரி கடற்கரையில் 100 அடி உயர கம்பத்தில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றுகிறார். 75வது சுதந்திரத்தினத்தை ஒட்டி 75 இடங்களில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை பிரதமர் புதுச்சேரியில் துவங்குகிறார்.