தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் வானங்கள் மீது கற்கள் வீச்சு.!

மத்தியபிரதேச மாநிலம் கார்வால் கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரின் வானங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. அங்கு மூன்று கட்ட தேர்தல் பணிகள் முடிவடைந்து போலீசார் திரும்பிக்கொண்டிருந்த போது, ஒருதரப்பினர் பட்டாசு வெடித்ததாகவும், மற்றொரு தரப்பினர் தோல்வி பயத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். Source link

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து நீக்கம் : உத்தவ் தாக்கரே அதிரடி

மும்பை: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனாவில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 39 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால், உத்தவ் பெரும்பான்மை பலத்தை இழந்ததால், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, பாஜ.வுடன் கூட்டணி சேர்ந்து, மகாராஷ்டிரா மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிசும் நேற்று … Read more

‘சந்திரசேகர் ராவ் ஒரு சர்வாதிகாரி’ – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சனம்

ஹைதராபாத்: ”சந்திரசேகர் ராவ் ஒரு சர்வாதிகாரி” என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார். பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு கலந்து கொள்ளுவதற்காக பிரதமர் மோடி வந்தார். ஆனால் அவரை முதல்வர் என்ற முறையில் வரவேற்க சந்திரசேகர் ராவ் செல்லவில்லை. இதோடு மூன்றாவது முறையாக பிரதமர் ஹைதராபாத் வந்துள்ளார். ஆனால், இந்த மூன்று முறையும் பிரதமரை வரவேற்க சந்திரசேகர் ராவ் விமான நிலையம் செல்லவில்லை. சந்திரசேகர் ராவ்வின் இந்தச் செயலை பாஜக … Read more

கன்னையா லால் படுகொலை : கைதானவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை..!

உதய்பூர் கொலை வழக்கில் கைதாகி ஆஜ்மீர் சிறையில் உள்ள இருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்கு எடுத்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த தையல் கலைஞர் கன்னையா லால் கடந்த 28 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட நிலையில், ரியாஷ் அக்தாரி மற்றும் கவுஸ் முகம்மது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை விசாரிக்கும் நிலையில், ஆஜ்மீர் சிறையில் உள்ள இருவரையும் விசாரணைக்காக ஜெய்ப்பூர் அழைத்துச் சென்றனர். Source link

ஆந்திரப்பிரதேசத்தில் வரும் 4ம் தேதி விடுதலை போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!!

ஹைதராபாத் : ஆந்திரப்பிரதேசத்தின் பீமாவரத்திற்கும் குஜராத்தின் காந்திநகருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வரும் 4ம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளார். புகழ்பெற்ற  விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாளின் ஓராண்டுகால விழாவை அன்று காலை 11 மணிக்கு பீமாவரத்தில் பிரதமர் மோடி தொடங்கிவைப்பார். அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார். 1897ம் ஆண்டு ஜூலை 4 அன்று பிறந்த அல்லூரி சீதாராம ராஜூ, … Read more

தெலங்கானா சென்ற பிரதமர் மோடி – மீண்டும் ஆப்சென்ட் ஆன சந்திரசேகர ராவ்!

தெலங்கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நேரில் சென்று வரவேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்துக்கு விமானத்தில் சென்றார். விமான நிலையத்தில் அவரை அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். ஆனால், முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமரை வரவேற்க செல்லவில்லை. வழக்கமாக ஒரு மாநிலத்திற்கு பிரதமர் வந்தால், அவரை மாநில … Read more

கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்த 3 வயது பாகிஸ்தான் குழந்தை.. மீட்டு பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைத்த இந்திய வீரர்கள்..!

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த 3 வயது குழந்தையை, நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் வீரர்களிடம், எல்லை பாதுகாப்பு வீரர்கள் ஒப்படைத்தனர். நேற்றிரவு சுமார் 7 மணியளவில், கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்த குழந்தையை, பெரோஸ்பூர் எல்லைப் பாதுகாப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் மீட்டு, பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைத்தனர்.  Source link

சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியிருந்த அசாம் சொகுசு விடுதி ‘பில்’ ரூ.70 லட்சம்; 8 நாளில் செலவான சாப்பாட்டு செலவு ரூ.22 லட்சம்

கவுகாத்தி: சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியிருந்த அசாம் மாநில கவுகாத்தி சொகுசு விடுதியின் பில் ரூ. 70 லட்சம் என்றும், 8 நாளாக செலவான சாப்பாட்டு செலவு ரூ.22 லட்சம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக நீடித்து வந்த அரசியல் நெருக்கடி தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே (உத்தவ் தாக்கரே அரசில் அமைச்சராக … Read more

உதய்பூர் கொலையாளிகள் மீது சரமாரி தாக்குதல் – நீதிமன்றத்தில் பரபரப்பு – வீடியோ வைரல்

உதய்பூர் கொலையாளிகளை நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்னையா லால் என்பவரை கடந்த வாரம் இரு நபர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். அதனை வீடியோவாகவும் எடுத்து அவர்கள் வெளியிட்டனர். முகமது நபி குறித்து அவதூறாக பேசிய நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதால் கன்னையா லாலை தாங்கள் கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், … Read more

அதானி, அம்பானியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு.!

உலக பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறைந்துள்ள நிலையில், இந்திய பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டதால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் எலான் மஸ்க், ஜெஃப் பிசோஸ், மார்க் ஸக்கர்பெர்க் ஆகியோரின் சொத்து மதிப்பு தலா 60 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சரிவடைந்தது. அதேநேரத்தில் இந்தியாவைச் சேர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 22.1 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது ஒரு லட்சத்து 74 … Read more