சர்ச்சை பாடல்கள், அரசியல் தோல்வி, துப்பாக்கி கலாசாரம் – யார் இந்த சித்து மூஸ்வாலா?

சித்து மூஸ் வாலா துப்பாக்கி கலாசாரத்தை ஊக்குவிக்கும் விதமாக பாடல்களை பாடுவதாக சர்ச்சைகள் பல எழுந்ததுண்டு. பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாப் பாடகர் சித்து மூஸ் வாலா (28). இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சித்து மூஸ்வாலா பாடகர் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டு இருந்தார். காங்கிரஸ் கட்சியில் உள்ள அவர், கடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் புதிதாகப் ஆட்சிப் பொறுப்பேற்ற பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, … Read more

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க சதியா? – காஷ்மீரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனில் வெடிகுண்டுகள் மீட்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனில் 7 காந்த வெடிகுண்டுகள், 7 பேரல் லாஞ்சர் குண்டுகள் ஆகியவை மீட்கப்பட்டன. பாகிஸ்தானிலிருந்து ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பப்பட்ட ட்ரோனில் 7 காந்த வகை வெடிகுண்டுகள் மற்றும் 7 பேரல் லாஞ்சர்மூலம் ஏவும் குண்டுகள் அனுப்பப்பட்டிருந்தன. இந்த ட்ரோனை காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் தாலி ஹரியா சாக் என்ற இடத்தில் போலீஸார் நேற்று சுட்டு வீழ்த்தினர். இந்த ட்ரோனை, வெடிகுண்டு பிரிவு … Read more

நேபாள மலைப் பகுதியில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு.!

மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு நேபாள மலைப் பகுதியில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு 22 பேருடன் நேற்று மாயமான நிலையில் விமானம் விபத்தில் சிக்கியது உயிரிழப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை விபத்து நிகழ்ந்த இடத்தின் புகைப்படத்தை வெளியிட்டது நேபாள ராணுவம் Source link

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சிக்க சித்தராமையாவுக்கு தகுதி இல்லை: நளின்குமார் கட்டீல்

துமகூரு: கர்நாடக மாநில பா.ஜனதா விவசாய அணி மாநாடு துமகூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:- மத்திய அரசு கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கி வருகிறது. பசல் பீமா பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய-மாநிலத்தில் பா.ஜனதா அரசுகள் உள்ளன. இது இரட்டை என்ஜின் அரசு ஆகும். இந்த அரசுகள் சிறப்பான … Read more

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 'பி.எம்.கேர்ஸ்' திட்ட பலன்களை இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி

டெல்லி : குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை இன்று காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்குகிறார். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பிரதமர் மோடி அளிப்பார். இந்த நிகழ்ச்சியின்போது குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் கணக்கியல் புத்தகம் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்படும்.மார்ச் 11, 2020 முதல் பிப்ரவரி 28, 2022 வரை கோவிட் … Read more

இன்று பாஜகவில் இணைகிறாரா ஹர்திக் படேல்? – குஜராத் அரசியலில் பரபரப்பு

காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில முன்னாள் தலைவர் ஹர்திக் படேல் இன்று பாஜகவில் சேரவுள்ளதாக வெளிவந்த யூகத்தை அவர் மறுத்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய ஹர்திக் படேல், “நான் நாளை பாஜகவில் சேரப் போவதில்லை. இது போன்று ஏதாவது நடந்தால் உங்களுக்குத் தெரிவிப்பேன்” என்று கூறினார். மேலும் பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொல்லப்பட்டது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்தார். குஜராத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தீவிரமாக நடந்த படிதார் இடஒதுக்கீட்டுப் … Read more

குண்டூரில் 'அண்ணா கேன்டீன்': நடிகர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

குண்டூர்: தமிழகத்தில் அம்மா உணவகத்தைப் போன்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடைபெற்றபோது, ஆந்திராவிலும் அண்ணா கேன்டீன் தொடங்கப்பட்டது. தேர்தலுக்கு சுமார் 6 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த கேன்டீன்கள், குறிப்பாக ஏழை, எளியவர்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருந்தது. ஆனால், தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வி அடைந்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அண்ணா கேன்டீனும் மூடுவிழா கண்டது. இதேபோன்று தெலுங்கு தேசம் சார்பில் தொடங்கப்பட்ட … Read more

ஆறு மாடுகளை அடித்து கொன்ற புலியை பிடிக்கும் பணியில் 120க்கும் மேற்பட்ட வனத்துறையினர் முகாம்.!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி அருகே ஆறு மாடுகளை அடித்து கொன்ற புலியை பிடிக்கும் பணியில் 120க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  சர்பவரம் கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த 10 நாட்களாக நடமாடி வரும் புலி ஒன்று அந்த பகுதியில் விவசாயிகள் வளர்த்து வந்த மாடுகளை அடித்துக் கொன்று தின்றுவிட்டது எனவே அந்த புலியை பிடித்து அடர்ந்த காட்டில் விடும்படி பொதுமக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Source link

திருப்பதியில் இலவச தரிசனம் செய்ய 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரவு 7 மணியளவில் கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லேப்பாட்சி வணிக வளாகம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆனது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருமலை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தற்போது பள்ளி, … Read more

பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான உதவிகளை இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி

டெல்லி : கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை இன்று காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பிரதமர் அளிக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் கணக்கியல் புத்தகம் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்படும்.