Monkeypox: இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு? – மத்திய அரசு திடீர் விளக்கம்!

இந்தியாவில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை நோய் கண்டறியப்படவில்லை என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் பின்னர் மனிதர்களுக்கும் பரவத் தொடங்கியது. 1970 ஆம் ஆண்டு மனிதர்களுக்கு குரங்கு அம்மை நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. மனிதர்களிடையே பரவிய சின்னம்மை, பெரியம்மை நோய் போன்று குரங்குகளிடம் இருந்து பரவிய அம்மை நோய் மனிதர்களிடையே பரவுவதையே குரங்கு அம்மை நோய் … Read more

இந்தியாவில் நிலவும் நிலக்கரி தட்டுப்பாட்டை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு.!

இந்தியாவில் நிலவும் பற்றாக்குறையை சரிசெய்ய, வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய கோல் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. பல மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறையால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி தடைபட்டு மின்வெட்டு அதிகரித்துள்ள நிலையில், அந்தந்த மாநிலங்கள் நிலக்கரி இறக்குமதிக்கு ஒப்பந்தங்கள் கோரியிருந்தன. இதனால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, அவசர கால ஏற்பாடாக 7 ஆண்டுகளுக்கு பிறகு கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரி இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. மேலும், மாநிலங்கள் கோரிய ஒப்பந்தங்களையும் … Read more

4 இந்தியர்கள் உள்பட 22 பேருடன் சென்ற விமானம் மாயம்

நேபாளத்தில் 22 நபர்களுடன் சென்ற தாரா ஏர் 9 என்ஏஇடி விமானத்தின் தகவல் தொடர்ப்பு துண்டிக்கப்பட்டு மாயமாகியுள்ளது. நேபாளத்தில் காலை 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து  ஜோம்சோமுக்கு புறப்பட்டு சென்ற விமானம் மாயமாகியுள்ளது. மாயமான விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் பயணம் செய்துள்ளனர். காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதையும் படியுங்கள்.. திருப்பதியில் 24 மணி நேரமாகியும் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் 3 நாட்களுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடுமுழுவதும் குழாய் மூலம் குடிநீர்: 50 சதவீதம் நிறைவு

புதுடெல்லி: நாடுமுழுவதும் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தில் 50 சதவீதம் பணிகள் முடிந்துள்ளதாக மத்திய அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதென்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை மனதிற்கொண்டு, கிராமப்புறங்களில் உள்ள 50% வீடுகளுக்கு குழாய்வழி குடிநீர் இணைப்பை வழங்கி நாடு சாதனை படைத்துள்ளது. கோவா, தெலங்கானா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், தாத்ரா & … Read more

7 பேருக்கு உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பு – சுகாதாரத் துறை அறிவிப்பு!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 7 பேருக்கு உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமைக்ரானும், பல்வேறு திரிபுகளாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. அவ்வாறு உருமாறிய பிஏ-2 வைரஸ் முதன் முதலாக தென்னாப்ரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதம் கண்டறியப்பட்டது. பின்னர் பிஏ 4, பிஏ 5 என பல வகைகளாக உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த ஒமைக்ரானின் புதிய வகை மாறுபாட்டால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், … Read more

நேபாளத்தில் பணியாளர்கள் உள்பட 22 பேருடன் சென்ற விமானம் மாயம்.!

நேபாளத்தில் விமானம் மாயம் நேபாளத்தில் பணியாளர்கள் உள்பட 22 பேருடன் சென்ற விமானம் மாயமானது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது விமானத்தில் 4 இந்தியர்களும் இருந்ததாக நேபாள அரசு ஊடகம் தகவல் Source link

அயோத்தி நோக்கிச் சென்ற சுற்றுலாப் பேருந்து லாரி மீது மோதி 7 பேர் உயிரிழப்பு

பஹ்ரைச்- லக்கீம்பூர் நெடுஞ்சாலையில் இன்று கர்நாடகாவில் இருந்து 16 பேரை ஏற்றிக் கொண்டு சுற்றுலா பேருந்து அயோதிக்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, மோதிபூர் பகுதுியில் உள்ள நனிஹா சந்தையில் நுழைந்தபோது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். பேருந்து ஓட்டுநர் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவர மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்ததாகவும் போலீசார் … Read more

நேபாளத்தில் 19 பயணிகளுடன் சென்ற விமானம் மாயம்

நேபாளம்: நேபாளத்தில் 19 பயணிகளுடன் சென்ற தாரா ஏர் நிறுவனத்தின் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது. பொகாராவில் இருந்து ஜோம்சாம் சென்ற விமானம் காலை 9.55 மணியளவில் தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் வைத்ததற்கு கடும் எதிர்ப்பு: போர்க்களமாகும் ஆந்திரா!

ஆந்திராவில் கோணசீமா மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர், எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதால் கலவரம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தை ஏற்படுத்தியது தொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் இருந்த 13 மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக 26 மாவட்டங்களாக மாற்றப்பட்டன. அதன்படி கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமலாபுரம் நகரை மையமாக கொண்டு கோணசீமா பகுதி, தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அதற்கு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோணசீமா … Read more