குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா!

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை … Read more

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா வரும் 27-ல் வேட்புமனு தாக்கல்

வரும் 27-ல் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா வரும் 27-ல் வேட்புமனு தாக்கல் குடியரசுத் தலைவர் தேர்தலில் கடந்த 15-ந் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது வேட்புமனு தாக்கல் செய்ய இம்மாதம் 29-ந் தேதி கடைசிநாளாகும் குடியரசுத் தலைவர் தேர்தல் ஜுலை 18-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு சரத்பவார் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா … Read more

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிப்பு

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் சரத்பவார் தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக அமைச்சரவையில் ஒன்றிய நிதி அமைச்சராக பதவி வகித்தவர் யஷ்வந்த் சின்ஹா. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று காலை விலகினார்.

’கையை பிடிச்சு இழுத்தியா?’ – முன்னாள் காதலியை இழுத்த மும்பை நபருக்கு நேர்ந்த கதி!

பெண்ணின் கையை பிடித்து இழுத்ததற்காக ஒருவருக்கு ஓராண்டு காலம் சிறைத்தண்டனை அளித்துள்ளது மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம். பொதுவெளியில் காதலியாகவே இருந்தாலும் பெண்ணின் கையை பிடித்து இழுப்பது அவரது கண்ணியத்தையும், அடக்கத்தையும் சீர்க்குலைப்பதற்கு சமம் எனக் குறிப்பிட்டு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு காதலியை தாக்கியதாகவும், அவரது கண்ணியத்தை சீர்குலைத்ததாகவும் எழுந்த புகாரில் அந்த நபருக்குதான் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கி, முந்தைய காதல் விவகாரமாகவே இருந்தாலும் அந்த நபர் அவ்வாறு நடந்துக்கொள்வதற்கு உரிமையில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.  … Read more

மகாராஷ்டிர அரசுக்கு எந்த நெருக்கடியும் இல்லை – சரத் பவார் பளீச்!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநில அமைச்சராக உள்ள சிவசேனா மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், குஜராத் மாநிலம் … Read more

கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.!

கேரள மாநிலம் காசர்கோட்டில் 10 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. உப்பலா பகுதியைச் சேர்ந்த லத்தீப் என்பவர் தனது குடும்பத்தினருடன் பத்வாடி பகுதிக்கு ஆட்டோவில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மலைப்பகுதியில் இருந்து 10 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.   Source link

பினராயி விஜயனின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: பிரதமருக்கு சொப்னா கடிதம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கேரளாவில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. தங்கக்கடத்தலில் முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர், சிபிஎம் எம்எல்ஏ, முதல்வர் அலுவலக அதிகாரிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக சொப்னா நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு சொப்னா திடீரென்று ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பது: திருவனந்தபுரம் தங்கக் கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், அவரது … Read more

குஜராத்: உலகின் மிக உயரமான படேல் சிலைக்கு அருகே நிலநடுக்கம்

குஜராத்தில் ஒற்றுமையின் சிலை (Statue Of Unity) எனக் கூறப்படும் வல்லபாய் படேல் சிலைக்கு அருகே 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குஜராத்தின் நர்மதா மாவட்டத்தின் கெவாடியா கிராமத்தில் படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலை உலகிலேயே உயரமான சிலையாக கருதப்படுகிறது. இதை ஒற்றுமையின் சிலை (Statue Of Unity) என்று அழைப்பார்கள். இந்தச் சிலைக்கு அருகே நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் வீரியம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது. … Read more

அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து முழு அடைப்பு – நாடு முழுவதும் 500 ரயில் சேவை பாதிப்பு

புதுடெல்லி: அக்னி பாதைத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற முழு அடைப்பின்போது நாடு முழுவதும் 500 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. ராணுவத்தில் அக்னி பாதை திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்க மத்திய அரசு கடந்த 14-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என்று தகவல்கள் பரவியதால் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த இளைஞர்கள் அதிருப்தி அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பிஹார் மாநிலத்தில் … Read more

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் ஆகிறார் யஷ்வந்த் சின்ஹா?

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில், பொது வேட்பாளராக, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த சின்ஹா களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் … Read more