ஜனநாயகத்தை பாஜக பலவீனப்படுத்துகிறது – காங். முன்னாள் தலைவர் ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டின் முதல் பிரதமர் நேருவின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: நேரு மறைந்து 58 ஆண்டுகள் ஆகிறது. அவரது சிந்தனைகள், அரசியல், தொலைநோக்கு பார்வை இன்றும் பொருத்தமானவையாக உள்ளன. அவரது கொள்கைகள் நம்மை வழிநடத்தும். ஐஐடி, ஐஐஎம், எல்ஐசி, ஐடிஐ, பிஎச்இஎல், என்ஐடி, பிஏஆர்சி, எய்ம்ஸ், இஸ்ரோ, செயில், ஒஎன்ஜிசி, டிஆர்டிஓ ஆகிய அரசு அமைப்புகளை நேரு உருவாக்கினார். நாட்டின் ஜனநாயகத்தை … Read more

ஆந்திராவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து.. 4 பேர் பலி.!

ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே, சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி, 4 பேர் உயிரிழந்தனர். அனந்தபூர் மாவட்டம் முலக்கலேது பகுதியில், அதிகாலையில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு தரைமட்டமானது. அருகில் இருந்த 2 வீடுகளும் சேதமடைந்தன. Source link

திருப்பதி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் மின்னணு ஏலம்

திருமலை: திருப்பதியில் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் மின்னணு ஏலம் விடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் பணம் மற்றும் நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதில் கிடைத்த ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா நாடுகளின் வெளிநாட்டு நாணயங்கள் ஜூன் 16 , 17-ந் தேதிகளில் மின்னணு ஏலம் விடப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு மார்க்கெட்டிங் துறை பொது மேலாளர் … Read more

ஆந்திராவில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

அமராவதி: ஆந்திரா அனந்தபுரம் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலையில் சிலிண்டர் வெடித்ததில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அருகருகே இருந்த வீடுகளும் இடிந்ததில் 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  

’2020-2021-ல் அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுகவுக்கு முதலிடம்’ – ஏடிஆர் அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: 2020-2021 காலகட்டத்தில் அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடத்தில் உள்ளது. அதேபோல் வருவாயில் 50%க்கும் மேல் செலவழித்து அதிலும் முதலிடத்தில் உள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் (Association for Democratic Reforms-ADR) அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 31 மாநிலக் கட்சிகளின் வருவாய், செலவினங்கள் பற்றிய அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது. ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் தனது வருடாந்திர வருவாய், செலவினங்கள் குறித்து தாக்கல் செய்யும் … Read more

பேத்தியை பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்திய முன்னாள் அமைச்சரை கைது செய்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

உத்தரகாண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பகுகுனா தண்ணீர்த் தொட்டி மீது ஏறி தம்மை தாமே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 59. அவரது பேத்தியை அவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக அவர் மருமகள் அவர் மீது அளித்த புகாரையடுத்து போலீசார் கைது செய்ய வந்த போது தண்ணீர்த்தொட்டி மீது ஏறி துப்பாக்கியால் சுட்டு சாகப் போவதாக மிரட்டல் விடுத்து பின்னர் இந்த விபரீத முடிவை மேற்கொண்டார். Source link

இந்தியாவில் ஒரே நாளில் 2,685 பேருக்கு கொரோனா.. 33 பேர் பலி…. 2,158 பேர் குணமடைந்தனர்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,685 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,50,215 ஆக உயர்ந்தது.* புதிதாக 33 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

இறந்து கிடந்த யானைக்குட்டி: கண்ணீருடன் தூக்கி செல்லும் தாய் யானை- கண்கலங்க வைக்கும் காட்சி

மேற்கு வங்கத்தில் தேயிலைத்தோட்டத்தில் இறந்து கிடந்த யானைக்குட்டியின் உடலை, தாய் யானை கண்ணீருடன் தூக்கிச் செல்லும் கலங்க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரி (jalpaiguri) என்ற பகுதியில், அம்பாரி தேயிலைத் தோட்டமொன்று உள்ளது. இத்தோட்டத்தில் யானைக்குட்டி ஒன்று இறந்து கிடந்தது. அந்த யானைக்குட்டி எப்படி இறந்தது என்பது தெரியவராத நிலையில், குட்டியை தேடிக்கொண்டு அங்கு தாய் யானை வந்தது. குட்டியை உயிரற்ற நிலையில் கண்ட அந்த தாய் யானை, கண்ணீர் பொங்க குட்டியின் உடலை தும்பிக்கையால் தூக்கியது. … Read more

குவாட் உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கு கிடைத்த 2 வெற்றி

புதுடெல்லி: குவாட் உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கு ராஜாங்க ரீதியாக 2 வெற்றிகள் கிடைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்களிடையே கருத்து நிலவுகிறது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அண்மையில் நடைபெற்றது. இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற இந்த 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் … Read more

அஸ்ஸாமில் மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய 2 குழுக்கள் ஆய்வு.!

அஸ்ஸாமில் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சாச்சார், தார்ரங் உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய நிபுணர்க் குழுவின் வெள்ளச் சேதத்தை ஆய்வு செய்தனர். மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட முதல் சிறப்புக் குழுவினர் கரைகளை  உடைத்து ஆறுகள் விளைநிலங்களில் ஏற்படுத்திய சேதத்தை பார்வையிட்டனர். வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளையும் அவர்கள் நேரில் கண்டு ஆய்வு செய்தனர்.இது வரை வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் 30 உயிர்கள் பலியாகியுள்ளன. Source link