‘ஆபரேஷன் சிந்தூர்’ ஏன், எதற்காக? – சீனாவில் ராஜ்நாத் சிங் ஆவேசப் பேச்சு!

பீஜிங்: “அரசு ஆதரவுடன் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கான எங்களின் உரிமையே நாங்கள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர்” என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று (ஜூன் 25) தொடங்கியது. இந்நிலையில்,ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியான உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் கலந்து கொண்டார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் … Read more

நீதிக்காக 32 ஆண்டு போராடி வெற்றி பெற்ற போஸ்ட் மாஸ்டர்

பெதுல்: மத்திய பிரதேச மாநிலம் பெதுலைச் சேர்ந்தவர் மங்காராம். இவர் கடந்த 1983-ம் ஆண்டு போஸ்ட்மாஸ்டராக வேலைபார்த்தபோது தனது கிளைக்கு வந்த ஒரு வாடிக்கையாளரின் டெபாசிட் தொகை ரூ.3,596-ஐ பதிவேட்டில் பதிவு செய்ய மறந்துவிட்டார். ஆனால் அந்த தொகையை முறைப்படி அரசு கருவூலத்தில் செலுத்தி வாடிக்கையாளரின் பாஸ்புக்கிலும் வரவு வைக்கப்பட்டுவிட்டது. மங்காராம் செய்த செயலில் எந்தவொரு நிதி முறைகேடும் இல்லாத போதிலும் அந்தப் பிழை குற்றவியல் மோசடியாக கருதி கடந்த 1993-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் மங்காராமுக்கு … Read more

பள்ளியில் சேர விரும்பிய ஏழை சிறுமி: உதவிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ: பள்ளியில் சேர விரும்பிய ஏழைச் சிறுமிக்கு அவர் விரும்பிய பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அவ்வப்போது ஜனதா தர்ஷன் என்ற பெயரில் மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியில், முதல்வர் யோகியை ஏழைச் சிறுமி வஷி என்பவர் சந்தித்து தனக்கு உதவுமாறு கேட்டார். அப்போது அவரது கோரிக்கை என்ன என்று முதல்வர் … Read more

ராகுல் அடிக்கடி வெளிநாடு செல்வது ஏன்? – பாஜகவின் கேள்விக்கு காங்கிரஸ் பதில்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன் என்று பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ‘எக்ஸ்’ வலைதளத்தில் அமித் மாளவியா வெளியிட்ட பதிவில், “ராகுல் காந்தி கடந்த வாரம் ரகசிய வெளிநாட்டு பயணத்தில் இருந்தார். இப்போது அவர் மீண்டும் வெளிநாடு சென்று, மற்றொரு வெளிப்படுத்தப்படாத இடத்துக்கு சென்றுள்ளார். அவர் இவ்வாறு அடிக்கடி ரகசியப் பயணம் செல்வது ஏன்? அடிக்கடி வெளிநாடு செல்வதற்கு அவரை கட்டாயப்படுத்துவது … Read more

மிசோரம், கோவாவுக்கு அடுத்து முழு கல்வியறிவு பெற்ற மாநிலம் திரிபுரா

குவாஹாட்டி: மிசோராம், கோவாவுக்கு அடுத்தபடியாக 3-வது முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக திரிபுரா உருவாகியுள்ளது. யுனெஸ்கோ விதிமுறைப்படி ஒரு மாநிலத்தில் கல்வியறிவு பெற்றோர் சதவீதம் 95 என்ற இலக்கை தாண்டினால் அந்த மாநிலம் முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக கருதப்படும். கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் திரிபுராவில் கல்வியறிவு பெற்றோர் சதவீதம் 93.7 சதவீதமாக இருந்தது. 23,184 பேர் மட்டுமே கல்வியறிவு பெறாதவர்களாக இருந்தனர். இந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் திரிபுராவின் கல்வியறிவு பெற்றோர் சதவீதம் 95.6 சதவீதமாக உள்ளதாக … Read more

அகமதாபாத் விமான விபத்தில் இறந்த கேரள செவிலியர் உடல் தகனம்

திருவனந்தபுரம்: அகமதாபாத் விமான விபத்தில் இறந்த கேரள செவிலியரின் உடல் நேற்று அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அதில் பயணித்தவர்கள், மருத்துவ மாணவர்கள், பொதுமக்கள் என 247 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் விமானத்தில் பயணித்த கேரள செவிலியர் ரஞ்சிதா நாயரும் (37) ஒருவர். அவரது உடல் டிஎன்ஏ பரிசோதனை மூலம் 11 நாட்களுக்கு பிறகு அடையாளம் காணப்பட்டு, … Read more

‘உன்னத சுதந்திரத்தை விரும்பும் இந்திய மக்களுக்கு நன்றி’ – ஈரான் தூதரகம்

புதுடெல்லி: இஸ்ரேல் உடனான மோதலில் தங்கள் தேசத்துக்கு ஆதரவாக இருந்த இந்திய மக்கள் மற்றும் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது புதுடெல்லியில் உள்ள ஈரான் நாட்டின் தூதரகம். மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே 12 நாட்கள் மோதல் நீடித்தது. இதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நின்றதோடு ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் மீது தாக்குதலும் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் – ஈரான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதைத் … Read more

அவசரநிலை பிரகடனத்தின் 50 ஆண்டு நிறைவு – மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

புதுடெல்லி: அவசரநிலை பிரகடனத்தின் 50-ம் ஆண்டு நிறைவை அனுசரிப்பது குறித்த தீர்மானம் இன்று (ஜூன் 25) மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இது குறித்த மத்திய அரசின் செய்திக் குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுகளைத் தகர்க்கும் முயற்சியையும் துணிச்சலுடன் எதிர்த்த எண்ணற்ற நபர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து கவுரவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. 1974-ம் ஆண்டு நவநிர்மாண் இயக்கம், சம்பூர்ண கிராந்தி இயக்கம் ஆகியவற்றுக்கும் … Read more

“சங்பரிவார் அரசின் அறிவிக்கப்படாத அவசரநிலை அரசியலமைப்பையே அழிக்க முயற்சிக்கிறது” – பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: “நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. தற்போதைய சங்பரிவார் அரசு அரசியலமைப்பையே அழிக்க முயற்சிக்கிறது.” என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பினராயி விஜயனின் பேஸ்புக் பதிவில், “இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயமான அவசரநிலை பிரகடனம், அரை நூற்றாண்டுக்கு முன்பு ஜூன் 25, 1975 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இது திடீரெனவும் எதிர்பாராததாகவும் ஏற்பட்ட பேரழிவு அல்ல. மாறாக, இந்தியாவில் பல ஆண்டுகளாக சர்வாதிகார போக்குகள் மற்றும் சிவில் உரிமைகள் அரிக்கப்பட்டதன் கொடூரமான … Read more

அகமதாபாத் மைதானத்துக்கு குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

அகமதாபாத்: ஏமாற்றிய காதலனை பழிவாங்குவதற்காக அவரது பெயரில் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்தவர் ரேனி ஜோஷில்டா. இவர் பன்னாட்டு நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் திவிஜ் பிரபாகர் என்பவரைக் காதலித்து வந்தார். ஆனால் திவிஜ் பிரபாகர், இவரது காதலை ஏற்காமல் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜோஷில்டா, தனது காதலரை பழிவாங்க முடிவு செய்தார். ஐடி இன்ஜினீயரான … Read more