கியான்வாபி மசூதி வழக்கில் இந்துக்களின் 3 மனுக்கள் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றம் – மே 30-ம் தேதி விசாரணை

புதுடெல்லி: கியான்வாபி மசூதி வழக்கில் இந்துக்கள் தரப்பில் நேற்று 3 புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை வாரணாசி விரைவு நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிமன்றம் மாற்றியுள்ளது. இம்மனுக்கள் வரும் 30-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதி சுவரில் சிங்கார கவுரி அம்மனை தினமும் தரிசிக்க உத்தரவிட கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ல் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியில் களஆய்வு … Read more

ஆந்திராவில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 11 பேர் கைது.!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்றிரவு சித்தூர் – வேலூர் நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக வந்த ஆம்புலன்ஸை போலீசார் சோதனையிட்ட போது அதனுள்ளே செம்மரக்கட்டைகள் இருந்துள்ளன. ஆம்புலன்ஸில் இருந்து 4 பேர் தப்பி ஓடிய நிலையில் எஞ்சிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் சித்தூர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டாடா ஏஸ் வாகனத்தில் கடத்தப்பட்ட 36 செம்மரக்கட்டைகளை … Read more

வளர்ப்பு நாய் நடை பயிற்சிக்கு விளையாட்டு மைதானத்தை பயன்படுத்திய அதிகாரி மீது மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லியில் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக பணிபுரியும் சஞ்சீவ் கிர்வாரும்,  அதிகாரியாக உள்ள அவரது மனைவி ரிங்கு டுக்காவும், தியாகராஜ விளையாட்டு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த  வீரர்களை உடனடியாக வெளியேறுமாறு கூறியதாக புகார் எழுந்தது.  பின்னர் தனது வளர்ப்பு நாயுடன் அவர்கள் அந்த மைதானத்தில் நடந்து செல்லும் புகைப்படம் சமூக வலைதங்களில் வைரலானது.   தியாகராஜ் ஸ்டேடியத்தில் உள்ள வசதிகளை சஞ்சய் கிர்வார் மற்றும் அவரது மனைவி ரிங்கு துக்கா தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக ஊடங்களின் வெளியான செய்திகளின் அடிப்படையில் அறிக்கை … Read more

காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பஞ்சாப், உத்தரபிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 3 மக்களவை தொகுதிகள், 7 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூன் 23ல் இடைத்தேர்தல் நடைபெறும். ஜூன் 26ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் … Read more

யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை: என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு சொல்வது என்ன?

தீவிரவாத வழக்குகளில் சிக்கிய காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 10 குற்றங்களில் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் மீது தீவிரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி அளித்தது, காஷ்மீரில் 2017-ம் ஆண்டில் தீவிரவாதத்தை பரப்பியது, தீவிரவாத செயல்களுக்கு சதித் திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் பெருமாளை வழிபட 5 கிலோமீட்டர் நீண்ட வரிசையில் 20 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்த பக்தர்கள்.!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் பெருமாளை வழிபட 5 கிலோமீட்டர் நீண்ட வரிசையில் 20 மணி நேரத்துக்கு மேலாக பக்தர்கள் காத்திருந்தனர். கோடை விடுமுறை காரணமாக திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் இரண்டாவது வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் 64 அறைகளும் நிரம்பி வழிந்து 5 கிலோமீட்டர் தூரத்துக்கு மக்கள் காத்திருந்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் தற்போது ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. வரிசையில் காத்திருப்போருக்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பில்  … Read more

விபசாரத்திற்கு செல்கிறீர்களா? ஆட்டோவில் சென்ற பிரபல நடிகையிடம் அவமரியாதையாக நடந்த இன்ஸ்பெக்டர்: நடவடிக்கை எடுக்க சிபாரிசு

திருவனந்தபுரம்: கொச்சியில் இரவில் தன்னுடைய தோழிகளுடன் ஆட்டோவில் சென்ற பிரபல மலையாள நடிகை அர்ச்சனா கவியிடம் மோசமான முறையில் நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் நீலத்தாமரை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அர்ச்சனா கவி. பின்னர் இவர் சால்ட் அன்ட் பெப்பர், பெஸ்ட் ஆப் லக், ஸ்பானிஷ் மசாலா, நாடோடி மன்னன் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் அரவாண், ஞானக்கிறுக்கன் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கிலும் … Read more

தாஜ்மஹால் வளாகத்தில் தொழுகை செய்த 4 பேர் கைது; பூஜைக்கு அனுமதிக்க இந்து அமைப்பினர் போர்க்கொடி

ஆக்ரா: தாஜ்மஹால் வளாகத்தினுள் அமைந்துள்ள மசூதியில், விதிகள் மீறி தொழுகை நடத்தியதற்காக சுற்றுலா பயணிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ராவில் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் அமைந்துள்ள மசூதியில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வெள்ளிக்கிழமைகளில் மட்டும் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) நான்கு சுற்றுலா பயணிகள் தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தியதாக கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து ஆக்ரா நகர எஸ்பி கூறுகையில், … Read more

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி.. பிரதமர் நரேந்திர மோடி உறுதி.!

சென்னையில் நடைபெற்ற விழாவில் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தரமான உள்கட்டமைப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.  ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்என் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர்.   விமான நிலையத்தில் இருந்து … Read more

உலகின் 3வது பெரிய நுகர்வோர் சந்தை மற்றும் முதலீட்டு நிறுவனங்களுக்கான சூழலியல் அமைப்பு இந்தியாவில் உள்ளது; பிரதமர் மோடி பேச்சு

உலகின் மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தை இந்தியாவில் உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் இந்திய தொழில் வர்த்தக பள்ளி நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி ஐதராபாத் சென்றுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி பின்னர் கூறியதாவது: இந்திய தொழில் வர்த்தக பள்ளி நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை நாம் அனைவரும் கொண்டாடுகிறோம். இன்று பல ஊழியர்கள் பட்டங்களும், தங்கப் பதக்கங்களும் … Read more