விபசாரத்திற்கு செல்கிறீர்களா? ஆட்டோவில் சென்ற பிரபல நடிகையிடம் அவமரியாதையாக நடந்த இன்ஸ்பெக்டர்: நடவடிக்கை எடுக்க சிபாரிசு

திருவனந்தபுரம்: கொச்சியில் இரவில் தன்னுடைய தோழிகளுடன் ஆட்டோவில் சென்ற பிரபல மலையாள நடிகை அர்ச்சனா கவியிடம் மோசமான முறையில் நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் நீலத்தாமரை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அர்ச்சனா கவி. பின்னர் இவர் சால்ட் அன்ட் பெப்பர், பெஸ்ட் ஆப் லக், ஸ்பானிஷ் மசாலா, நாடோடி மன்னன் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் அரவாண், ஞானக்கிறுக்கன் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கிலும் … Read more

தாஜ்மஹால் வளாகத்தில் தொழுகை செய்த 4 பேர் கைது; பூஜைக்கு அனுமதிக்க இந்து அமைப்பினர் போர்க்கொடி

ஆக்ரா: தாஜ்மஹால் வளாகத்தினுள் அமைந்துள்ள மசூதியில், விதிகள் மீறி தொழுகை நடத்தியதற்காக சுற்றுலா பயணிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ராவில் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் அமைந்துள்ள மசூதியில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வெள்ளிக்கிழமைகளில் மட்டும் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) நான்கு சுற்றுலா பயணிகள் தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தியதாக கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து ஆக்ரா நகர எஸ்பி கூறுகையில், … Read more

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி.. பிரதமர் நரேந்திர மோடி உறுதி.!

சென்னையில் நடைபெற்ற விழாவில் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தரமான உள்கட்டமைப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.  ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்என் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர்.   விமான நிலையத்தில் இருந்து … Read more

உலகின் 3வது பெரிய நுகர்வோர் சந்தை மற்றும் முதலீட்டு நிறுவனங்களுக்கான சூழலியல் அமைப்பு இந்தியாவில் உள்ளது; பிரதமர் மோடி பேச்சு

உலகின் மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தை இந்தியாவில் உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் இந்திய தொழில் வர்த்தக பள்ளி நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி ஐதராபாத் சென்றுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி பின்னர் கூறியதாவது: இந்திய தொழில் வர்த்தக பள்ளி நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை நாம் அனைவரும் கொண்டாடுகிறோம். இன்று பல ஊழியர்கள் பட்டங்களும், தங்கப் பதக்கங்களும் … Read more

துரத்தி துரத்தி பேட்டால் அடித்த மனைவி; வலிதாங்காமல் ஓடிய கணவன் – சாட்சியான சிசிடிவி காட்சி

ராஜஸ்தானில் தனது மனைவி தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக அரசு பள்ளி தலைமையாசியர் அளித்த புகாரின்பேரில் அவருக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்திலுள்ள கார்கரா அரசுப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார் அஜித் யாதவ். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சுமன் யாதவ் என்ற ஹரியானாவைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். ஆனால் அவருடைய காதல் மனைவி தினமும் அவரை அடித்து கொடுமைப்படுத்துவதாக நீதிமன்றத்தில் புகார் ஒன்றை முன்வைத்திருக்கிறார். மேலும் தனது தரப்பை … Read more

'யாரோ விட்டுச்சென்ற அடையாளம்' – விமானத்திற்குள் குட்கா கறையைக் காட்டி ஐஏஎஸ் அதிகாரி ட்வீட்

புதுடெல்லி: விமானத்திற்குள் யாரோ ஒருவர் குட்கா மென்று துப்பிய கறையை பகிர்ந்துள்ளார் ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் ஷரன். அவரது ட்வீட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பேருந்து தொடங்கி விமானம் வரையில் ஜன்னலோர இருக்கையில் பெரும்பாலான மக்கள் பயணம் செய்ய விரும்புவார்கள். அந்த இருக்கையில் அமர்ந்து பயணிக்க விரும்பாதவர்கள் மிகவும் குறைவு. இருந்தாலும் சமயங்களில் அந்த ஜன்னல் ஒரே இருக்கை சுகாதாரமற்ற முறையில் இருக்கும். எச்சில் துப்புவது, பாக்கு – குட்கா போன்றவற்றை மென்று துப்புவது, பபுள் கம் … Read more

கர்நாடகாவில், இரவு நேர ஹோட்டலில் உணவு கேட்டு வந்தவர்களுக்கு உணவு இல்லை என்று சொன்னதால், கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.!

கர்நாடகாவில், இரவு நேர ஹோட்டலில் உணவு கேட்டு வந்தவர்களுக்கு உணவு இல்லை என்று சொன்னதால், கடைக்கு தீ வைத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. கொப்பல் அருகே, ஆனேகுந்தி கிராமத்தில் சாலையோர தாபா ஹோட்டல் இயங்கி வருகிறது. நேற்று இரவு 4 பேர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற நிலையில், அங்குள்ள ஊழியர்கள் உணவு இல்லை என்று கூறியதால், ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள் ஹோட்டல் ஊழியர்களை கடைக்குள் வைத்து பூட்டி தீ வைத்து விட்டு சென்றுவிட்டனர். அந்த ஊழியர்கள் ஊர் … Read more

கேரளாவில் இறைச்சி துண்டு தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு

கேரளா: கேரள மாநிலம் செத்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிக்  இவரது மனைவி பாத்திமா ஹானான்  இவர் திருமணத்திற்கு பிறகும் தனியார் கல்லூரி ஒன்றில் தனது படிப்பை தொடர்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் ஹானான் இறைச்சி உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது தொண்டையில் இறைச்சி துண்டு ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் அவர் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டுள்ளார். பிறகு அவரை உடனே அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு தொடர் சிகிச்சையிலிருந்த … Read more

பாலியல் தொழிலும் ஒரு புரொஃபஷனல் தான்: உச்ச நீதிமன்ற உத்தரவின் 10 முக்கிய அம்சங்கள்

பாலியல் தொழிலும் ஒரு புரொஃபஷனல் (தொழில் முறை) தான் என்றும், அதில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த உத்தரவில், ‘பாலியல் தொழிலும் ஒரு தொழிலே. அதை செய்வோருக்கும் சட்டத்தின் கீழ் சமமான மரியாதையும், பாதுகாப்பும் உண்டு. வயது வந்தோர் இருவர் அல்லது பாலியல் தொழிலாளியுடன் உவந்து உறவில் ஈடுபடுவோர் மீது போலீஸ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச … Read more

வானில் உள்ள குறுகிய தூர இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக பரிசோதனை.!

வானில் உள்ள குறுகிய தூர இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. மேற்கு கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த போர் கப்பலில் இருந்து ஏவுகணை ஏவப்பட்ட காட்சி, சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link