சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அனில் பிரப்-க்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

மும்பை : பணமோசடி விசாரணை தொடர்பாக மராட்டிய அமைச்சரும் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அனில் பிரப்-க்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. நிலம் பேரம் ஒன்றில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒருபகுதியாக இந்த சோதனை நடைபெற்றது.அனில் பிரப் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து மராட்டியத்தில் புனே, மும்பை மற்றும் தபோலி ஆகிய நகரங்களில் உள்ள 7 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையால் சோதனை நடத்தப்படுகிறது.ரத்தினகிரி … Read more

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்! பயனர்கள் புகார் மழை!

வேகமாக ஓட்டிச் செல்லும்போது ஓலா எலக்ரிக் ஸ்கூட்டரின் முன்சக்கரங்கள் கழண்டு சென்று விடுவதாக பயனர்கள் பலர் புகார் தெரிவித்து வருகின்றனர். ஓலாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது. இம்முறை பேட்டரி வெடிப்பு அல்ல… இயந்திரக் கோளாறுகள் பற்றிய புகார்கள். ஓலா ஸ்கூட்டரின் முன்பக்க சஸ்பென்ஷனின் நீடித்த தன்மை குறித்த புகார்கள் குவியத் துவங்கியுள்ளன. ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டிருக்கும்போதே முன்சக்கரம் உடைந்துபோய் விட்டதாக பயனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். @OlaElectric @bhashThe front fork is … Read more

சீனர்களுக்கு விசா தர லஞ்சம் பெற்றதாக புகார்: கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜராக சிபிஐ சம்மன்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறைஅமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும் இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம்பெற்றதாகவும் அவர் மீது சிபிஐ சமீபத்தில் வழக்கு பதிவு செய்தது. பஞ்சாபில் டிஎஸ்பிஎல் எனும் நிறுவனத்தின் சார்பில் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுத் தர, டிஎஸ்பிஎல் நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவரது … Read more

டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்- கைது செய்யப்பட வாய்ப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது. இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சி.பி.ஐ. சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது. பஞ்சாபில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான டி.எஸ்.பி.எல் எனும் நிறுவனத்தின் சார்பில் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக … Read more

பாஜகவின் 8 ஆண்டு ஆட்சியில் வேலையின்மை அதிகரிப்பு: காங்கிரஸ் விமர்சனம்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் 8 ஆண்டு ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளது என காங்கிரஸ் தெரிவித்தது. பாஜகவின் 8 ஆண்டு ஆட்சி குறித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்து ஆவணம் வெளியிட்டது.

காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி – 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் போலீஸார் நடத்தி துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஊடுருவ எல்லைப் பகுதியில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் காத்துக் கொண்டிருப்பதாக உளவுத் துறையினருக்கு அண்மையில் தகவல் கிடைத்தது. இதன்பேரில், எல்லைப் பகுதி முழுவதும் ராணுவத்தினர் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, காஷ்மீர் போலீஸாரும் எல்லைப்புற கிராமங்களில் தினமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜுமாகுண்ட் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரே நாளில் குவிந்த ரூ.5.43 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் நேற்று (மே 25) ஒரே நாளில் பக்தர்கள் ரூ.5.43 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல மாநிலங்களில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடந்து முடிந்ததால், நாடு முழுவதிலுமிருந்து திருமலைக்கு பக்தர்கள் படை எடுத்து வருகின்றனர். கரோனா பரவல் குறைந்ததும் பக்தர்கள் பழைய படி திருமலைக்கு வர தொடங்கி … Read more

இந்தியாவில் புதிதாக 2,628 பேருக்கு கொரோனா- சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக 2,628 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 500-க்குள் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதே போல நேற்று மகாராஷ்டிரத்தில் 470 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது அம்மாநிலத்தில் கடந்த 1½ மாதங்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் அதிகம் ஆகும். … Read more

ஆந்திர மாநிலத்தில் கார் குளத்தில் கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தை 4 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் கார் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். ரெட்டிவாரி கிராமத்தை சேர்ந்த கங்கிரெட்டி தனது குடும்பத்துடன் திருமணத்துக்கு பலமனேருக்கு காரில் சென்றனர்.மதனப்பள்ளி அருகே புங்கனுரில் கார் வேகமாகச் சென்றபோது சாலையோர கல்வெட்டில் மோதி மொரவப்பள்ளி குளத்தில் கவிழ்ந்தது.காரில் பயணம் செய்த மதுலதா, குஷிதா, தேவன்ஷ் ரெட்டி, கங்கிரெட்டி உள்ளிட்ட 4 பெரும் உயிரிழந்தனர்.தகவல் அறிந்த வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் … Read more

பிரதமர் மோடியை வரவேற்காமல் புறக்கணிப்பு – தெலங்கானா முதல்வர் முடிவு?

கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானா மாநிலம் சென்ற போதும் அவரை சந்திரசேகர ராவ் புறக்கணித்தார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஹைதராபாத் நகருக்கு வருகை தரும்போது, தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மரபுப்படி பிரதமரை வரவேற்க மாட்டார் என்கிற தகவல் பாஜக தலைவர்களிடையே  அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் நகரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவருடைய மகன் குமாரசாமி ஆகியோரை சந்திக்க கர்நாடக தலைநகர் செல்வதாக சந்திரசேகர ராவ் … Read more