ஸ்டாலின் பாணியில் மம்தா பானர்ஜி அதிரடி!

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் முதல்வர்களுக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக தமிழக அரசு தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. எனவே, ஆளுநர்களுக்கு இருக்கும் அதிகாரங்களை பறிக்கும் பொருட்டு மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், துணைவேந்தர்களை இனி ஆளுநருக்கு பதில், தமிழக … Read more

ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்த விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது – மத்திய அரசு

ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்த விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது என அச்சு, காட்சி மற்றும் இணைய ஊடகங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சூதாட்டம் மற்றும் பந்தயம் ஆகியவை நாட்டின் பல்வேறு பகுதியில் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவை இளைஞர்கள், சிறார்களுக்கு சமூக பாதிப்பு மற்றும் நிதி சிக்கலை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்கள் தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. Source link

தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர், குடும்பத்தினர் மீது சந்தேகம்: ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் புகார்

டெல்லி: தங்கக் கடத்தல் வழக்கில் வெளியாகும் தகவல்களால் கேரள முதல்வர், குடும்பத்தினர் மீது சந்தேகம் என ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் புகார் அளித்தார்.சதித்திட்டத்தின் முக்கிய நபராக கேரள முதல்வர் இருப்பதாக அவர் கூறினார். கடத்தலை விசாரிப்பதற்கு பதில் அதனை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பெண்ணுக்கு மிரட்டல் என தெரிவித்தார்.    

பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் மம்தா பானர்ஜி: மேற்குவங்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களில் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதல்வர் மம்தா பானர்ஜியை நியமனம் செய்யும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார். பட்டமளிப்பு விழாவும் ஆளுநர் தலைமையில் நடைபெறுகிறது. அதேபோல் துணைவேந்தரை நியமிப்பதிலும் ஆளுநர் முக்கிய பங்கு வகிக்கிறார். எதிர்க்கட்சிகள் ஆட்சி நடைபெறும் தமிழகம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனங்களில் மாநில ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே மோதல் … Read more

Online Gambling: ஆன்லைன் சூதாட்டம்: ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களைத் தவிர்க்குமாறும், அதனை ஒளிபரப்புவது சட்ட விரோதமானது என்றும் ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அண்மைக்காலமாக இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி பணம் மட்டுமல்லாமல் உயிரையும் இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என … Read more

வாக்குப்பதிவுக்கு முந்தைய – பிந்தைய கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்குப்பதிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளை தடை செய்யவும், ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட முடியும் உள்ளிட்ட 6 புதிய சட்ட விதிமுறைகள் தொடர்பான சட்ட திருத்த அறிவிப்பை வெளியிடுமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. மேலும், அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் வகையில், அரசியல் கட்சிகளின் பதிவு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை … Read more

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ்

டெல்லி: ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியது. டெலிவரி, பேக்கிங் கட்டணங்களின் உண்மைத்தன்மை, விநியோக நேர மாறுபாடுகள் பற்றி பதிலளிக்க ஆணையிட்டது. உணவகங்களில் விலை, அளவு  ஆகியவை இடையே வேறுபாடு போன்றவை பற்றி 15 நாளில் பதில்தர ஆணை பிறப்பித்தது.    

’பள்ளிக் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்துக’ – மத்திய அரசு

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது மற்றும் முதியோர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தி உள்ளார். அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய சுகாதாரத்துறை … Read more

உ.பி-யில் ‘புல்டோசர்’ நடவடிக்கையால் வீடு இடிப்பு… யார் இந்த அஃப்ரீன் பாத்திமா?

இஸ்லாமியர்களின் இறை தூதரான முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ், சஹாரன்பூர், பிஜ்னோர், மொராதாபாத், ராம்பூர், லக்னோ ஆகிய 6 மாவட்டங்களில் வன்முறை வெடித்தது தொடர்பாக 130-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். குறிப்பாக, பிரயாக்ராஜ் பகுதியில் ஏற்பட்ட வன்முறையை முன்னின்று நடத்தியதாக ‘வெல்ஃபேர் … Read more

President Election: குடியரசு தலைவர் வேட்பாளர் – சரத் பவாருக்கு காங். ஓகே!

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியத் திருநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. … Read more