“50 ஆண்டுகள் பாஜக ஆட்சி என்று அமித்ஷா சொல்வதன் காரணம்…” – ராகுல் காந்தி விவரிப்பு

பாட்னா: தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் 1,300 கிலோ மீட்டர் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யைத் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி சசாரமில் இருந்து தொடங்கிய 16 நாள் யாத்திரை, செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் ஒரு பேரணியுடன் முடிவடைகிறது. இந்த யாத்திரையில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஎம்எல் தலைவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர். … Read more

இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பு இன்று முதல் அமல்: பணிய மாட்டோம் என பிரதமர் உறுதி

புதுடெல்லி: இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் அமலாகிறது. எனினும், எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் 25 சதவீத வரிவிதிப்பு தொடர்பான வரைவு அறிக்கையை அமெரிக்க சுங்கம் மற்றும் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. ரஷ்யாவால் அமெரிக்காவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான கொள்கையின் கீழ் இந்த வரிகள் இந்தியா மீது விதிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று … Read more

மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் யூ டியூபர் குருவாயூர் கோயில் குளத்தில் இறங்கியதால் சர்ச்சை

குருவாயூர்: கேரள மாநிலம் குரு​வாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயில் உலகம் முழு​வதும் புகழ்​பெற்​றது. ஒவ்​வொரு ஆண்​டும் கோடிக்​கணக்​கான பக்​தர்​கள் வந்து வழிபட்டு செல்​கின்​றனர். இந்​நிலை​யில் இந்​தக் கோயி​லின் புனித குளத்​தில் கடந்த சில நாட்​களுக்கு முன் ஜாபர் என்ற யூ டியூபர் குரு​வாயூர் ரீல்ஸ் பதிவு செய்து வெளி​யிட்​டார். சமூக வலை​தளத்​தில் பிரபல​மாக உள்ள ஜாஸ்​மின் ஜாபர், கேரள பிக் பாஸ் நிகழ்ச்​சி​யிலும் பங்​கேற்​றவர். குரு​வாயூர் கோயி​லில் இந்து அல்​லாத பிற மதத்​தவர்​களுக்கு அனு​மதி கிடை​யாது. இந்​நிலை​யில் … Read more

இஸ்ரேலின் அயர்ன் டோம் போல இந்திய வான்வெளியை சுதர்சன சக்கரம் பாதுகாக்கும்: முப்படை தலைமை தளபதி தகவல்

இந்தூர்: இஸ்ரேலின் அயர்ன் டோம் போல், இந்தியாவின் சுதர்சன சக்கரம் வான் பாதுகாப்பு கவசம் உருவாக்கப்படும் என முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார். இந்தியா மீது எதிர்காலத்தில் போர் மூண்டால், குஜராத்தின் ஜாம்நகர் எல்லைப் பகுதியில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் சமீபத்தில் தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டில் உள்ள … Read more

பிஹாரில் நடைபெறும் 'வாக்காளர் அதிகார யாத்திரை'யில் ராகுலுடன் இணைந்தார் பிரியங்கா காந்தி

பாட்னா: பிஹாரில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யில், இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இணைந்தார். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் 1,300 கிலோ மீட்டர் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யைத் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி சசாரமில் இருந்து தொடங்கிய 16 நாள் யாத்திரை, செப்டம்பர் 1 … Read more

வந்தாரா மீதான குற்றச்சாட்டு! சிக்கலில் ஆனந்த் அம்பானி? நீதிமன்றம் உத்தரவு!

வன்தாரா விவகாரம்: அம்பானியின் விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் முறைகேடுகளா? விசாரிக்க உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு! முழு விவரம்!

ஜம்முவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்முவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் புனித யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய நதிகளான தாவி மற்றும் ராவியில் வெள்ளம், அபாய அளவுக்கு மேல் செல்கிறது. கதுவாவில் ராவி நதியை ஒட்டிய தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தோடா மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு இடிந்து … Read more

தொழில்துறையை ஊக்குவிக்க மெகா பரிசு.. ரூ.40 கோடி வரை வட்டி மானியம் -முதல்வர் அறிவிப்பு

Nitish Kumar Big Announcement: பீகார் மக்களுக்கு ஜாக்பாட். தேர்தல் வருவதை அடுத்து, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தொடர்ந்து பல அதிரடியான தொகுப்புக்களை அறிவித்து வருகிறார். இதன்மூலம் மக்கள் தொடர்ந்து பரிசு மழையில் நனைந்து வருகிறார்கள்.

கேரளாவில் 18 பேருக்கு மூளை – அமீபா பாதிப்பு: தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார். திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தற்போது 18 பேருக்கு மூளையை தின்னும் அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் கேரளாவில் இதுவரை 41 பேருக்கு இந்த அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து, நீர் மூலம் … Read more

குருவாயூர் கோயிலில் கால் நனைத்த பெண் பிரபலம்..புனிதத்தை மீட்க பரிகார பூஜை!

Guruvayur Reels Controversy : குருவாயூர் கோயிலில், பெண் பிரபலம் ஒருவர் கால் நனைத்தார். இதனால் புனிதத்தன்மை கேட்டு விட்டதாக குருாவாயூர் கோயில் நிர்வாகம் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.