எஸ்எஸ்சி தேர்வர்கள் மீது தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம்

புதுடெல்லி: மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வரும், காங்​கிரஸ் மூத்த தலை​வரு​மான ராகுல் காந்தி எக்ஸ் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: எஸ்​எஸ்சி தேர்​வு​களில் முறை​கேடு​கள் நடந்​த​தாக கூறி ராம்​லீலா மைதானத்​தில் அமை​தி​யாக போராட்​டம் நடத்​திய தேர்​வர்​கள் மற்றும் ஆசிரியர்​கள் மீது தடியடி நடத்​தப்​பட்​டது வெட்​கக்​கே​டானது மட்​டுமல்ல, அது ஒரு கோழைத்​தன​மான அரசாங்​கத்​தின் அடை​யாளம். வாக்​கு​களைப் பெறு​வதற்​காக அரசாங்​கம் முதலில் தேர்​தல்​களில் மோசடிகளைச் செய்​தது, பின்​னர் தேர்​வு​களில் முறை​கேடு​களை அனு​ம​தித்​தது, அதைத் தொடர்ந்து வேலைகளை வழங்​கு​வ​தில் தோல்​வியடைந்​தது, இறு​தி​யில் குடிமக்​களின் உரிமை​கள் மற்​றும் … Read more

உச்ச நீதிமன்றத்துக்கு இரு புதிய நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை

புதுடெல்லி: தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், நீதிப​தி​கள் சூர்ய காந்த், விக்​ரம் நாத், ஜே.கே.மகேஸ்​வரி, பி.​வி.​நாகரத்னா ஆகிய 5 உறுப்​பினர்​களை கொண்ட உச்ச நீதி​மன்ற கொலீஜி​யம் நேற்று பிற்​பகல் கூடி ஆலோ​சனை நடத்​தி​யது. இதில் நீதிப​தி​கள் ஆலோக் ஆராதே, விபுல் எம்​.பஞ்​சோலி ஆகிய இரு​வரை​யும் உச்ச நீதிமன்ற நீதிப​தி​களாக நியமிக்க மத்​திய அரசுக்கு பரிந்​துரை அளித்​துள்​ளது. இந்​தப் பரிந்​துரைக்கு மத்​திய அரசு ஒப்​புதல் அளித்​தால், குடியரசுத் தலை​வர், இரு​வரை​யும் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​களாக நியமித்து உத்​தர​விடு​வார். உச்ச நீதி​மன்ற … Read more

மத்திய பிரதேசத்தில் அரிய வகை தனிமங்கள் கண்டுபிடிப்பு

போபால்: மத்​திய பிரதேச சிங்​ர​வுலி​யில் உள்ள நிலக்​கரி சுரங்க பகு​தி​யில் அரிய மண் தனிமங்​களின் செறி​வு​கள் இருப்​பதை விஞ்​ஞானிகள் கண்​டறிந்​துள்​ளனர். இதுகுறித்து மாநில முதன்​மைச் செய​லா​ளர் (சுரங்​கம்) உமா​காந்த் கூறிய​தாவது: சிங்​ர​வுலி பகு​தி​யில் அரிய வகை மண் தனிமங்கள் கண்​டு​பிடிக்​கப்​பட்​டது, வெறும் தனிமங்​களைப் பற்​றியது மட்​டுமல்ல. தூய்​மை​யான எரிசக்தி பாது​காப்பு மற்​றும் தொழில்​நுட்​பத்​தில் இந்​தி​யா​வின் எதிர்​காலத்​தைப் பற்​றியது ஆகும். நிலக்​கரி துணைப்​பொருட்​களை முக்கிய வளங்​களாக மாற்ற மத்​திய பிரதேச அரசு தயா​ராக உள்​ளது. மேலும் சுய​சார்பு சங்கிலியை … Read more

பிஹாரில் வாக்கு திருட்டு நடைபெறுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு

பாட்னா: பிஹாரில் வாக்கு திருட்டு நடை​பெறுகிறது என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி மீண்டும் குற்​றம் சாட்டி உள்ளார். வரும் நவம்​பரில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதையொட்டி அந்த மாநிலத்​தில் அண்​மை​யில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி மேற்​கொள்​ளப்​பட்டு கடந்த 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இதில் 65 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டுள்​ளன. இந்த சூழலில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணியை எதிர்த்து மக்​களவை … Read more

பாலியல் புகாரில் சிக்கிய கேரள எம்எல்ஏ: காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்

திருவனந்தபுரம்: பாலியல் துன்புறுத்தல் புகார்களில் சிக்கிய கேரளாவின் பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மாம்கூட்டத்தில் (35), காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கேரளாவின் பாலக்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸை சேர்ந்த ராகுல் மாம்கூட்டத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், அவர் மீது மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். “காங்கிரஸை சேர்ந்த இளம் தலைவர் (ராகுல் மாம்கூட்டத்தில்) பலமுறை சமூக வலைதளங்கள் வாயிலாக பாலியல்ரீதியான தகவல்களை அனுப்பினார். … Read more

பொது இடங்களில் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை – முழு விவரம்

புதுடெல்லி: தமிழகத்​தில் பொது இடங்​கள், சாலை​யோரங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகள், சாதி, மத அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டுமென உயர் நீதி​மன்ற மதுரை கிளை பிறப்​பித்த உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை விதி்த்​துள்ள உச்ச நீதி​மன்​றம், தற்​போதைய நிலையே தொடர உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை கொடிக்​குளத்​தைச் சேர்ந்த அமா​வாசை தேவர் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில், விளாங்​குடி​யில் அதி​முக சார்​பில் கொடிக்​கம்​பம் அமைக்க அனு​மதி கோரி தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த நீதிபதி ஜி.கே.இளந்​திரையன், பொது இடங்​கள், சாலைகள், … Read more

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலி பாலியல் வழக்குகளை தொடுத்த உ.பி. வழக்கறிஞருக்கு ஆயுள்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்​தவர் பிரமானந்த் குப்​தா. இவர் வழக்​கறிஞ​ராக பணி​யாற்றி வந்​தார். இவருடைய மனை​விக்​கும் வேறு குடும்​பத்தை சேர்ந்த 2 சகோ​தரர்​களுக்​கும் இடை​யில் சொத்து தொடர்​பான பிரச்​சினை இருந்து வந்​துள்​ளது. இந்​நிலை​யில், பட்​டியலினத்​தைச் சேர்ந்த பெண் ஒரு​வர் கடந்த ஜனவரி மாதம் 2 சகோ​தரர்​கள் மீது பாலியல் வன்​கொடுமை வழக்கு தொடுத்​தார். அவர் சார்​பில் பிர​மானந்த் குப்தா வாதாடி​னார். முன்​ன​தாக பெண்​ணின் புகார் குறித்து போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தினர். அப்​போது பிர​மானந்த் குப்தா … Read more

‘விண்வெளிக்கு முதலில் சென்றது ஹனுமன்’ – பாஜக எம்.பி அனுராக் தாக்குர்

புதுடெல்லி: ‘விண்வெளிக்கு முதலில் சென்றது யார்?’ என அண்மையில் மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது கேட்டுள்ளார் பாஜக எம்.பி அனுராக் தாக்குர். இமாச்சல் மாநிலத்தில் உள்ள உனா நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் இந்த கலந்துரையாடல் நடந்துள்ளது. அவரது கேள்விக்கு ‘நீல் ஆம்ஸ்ட்ராங்’ என மாணவர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் பதில் சொல்ல, ‘நான் ஹனுமன் என உணர்கிறேன்’ என அனுராக் தாக்குர் தெரிவித்தார். அதுதான் இப்போது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. “விண்வெளிக்கு முதலில் சென்றது ஹனுமன் … Read more

உ.பி-யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதல்: 9 பேர் பலி, 43 பேர் காயம்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது இன்று அதிகாலை லாரி மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர், 43 பேர் காயமடைந்தனர். புலந்த்ஷஹர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் ஆர்னியா பைபாஸ் அருகே புலந்த்ஷஹர்-அலிகார் எல்லையில், லாரி ஒன்று டிராக்டர் மீது பின்னால் இருந்து மோதியதால், டிராக்டர் கவிழ்ந்தது. காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரஃபத்பூர் கிராமத்திலிருந்து ராஜஸ்தானின் ஜஹர்பீருக்கு யாத்திரைக்காகச் சென்ற 61 பேர் இந்த டிராக்டரில் சென்றனர். … Read more

ஜம்மு காஷ்மீர் அரசு அலுவலகங்களில் பென் டிரைவ்கள், பாதுகாப்பற்ற செயலிகள் பயன்படுத்த தடை

ஜம்மு: சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த, ஜம்மு காஷ்மீரின் அரசு நிர்வாகத் துறைகள் மற்றும் மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர்களின் அலுவலகங்களில் பென் டிரைவ்கள், பாதுகாப்பற்ற செயலிகளை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. தரவுகளின் ரகசியத்தை பாதுகாக்கவும், பாதுகாப்பு மீறல்களைத் தடுக்கும் நோக்கத்திலும் வாட்ஸ்அப் போன்ற செய்தி பகிர்வு தளங்கள் மற்றும் பாதுகாப்பற்ற ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தி ரகசிய தரவுகளை பகிர்தல் அல்லது சேமிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சைபர் பாதுகாப்பு நிலையை மேம்படுத்தவும், … Read more