பாலியல் புகாரில் சிக்கிய கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்!

திருவனந்தபுரம்: நடிகை ரினி ஆன் ஜார்ஜ் உட்பட பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்ததை அடுத்து, பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூத்தத்தில் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மம்கூத்தத்தில் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதை அடுத்து, இன்று அவரை இடைநீக்கம் செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. மலையாள நடிகையும், முன்னாள் பத்திரிகையாளருமான ரினி ஆன் ஜார்ஜ், பெரிய அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு “இளம் தலைவர்” பலமுறை தனக்கு ஆபாசமான … Read more

பிஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் 2 பாகிஸ்தான் பெண்களின் பெயர்: விசாரணைக்கு மத்திய உள்துறை உத்தரவு

பகல்பூர்: பிஹார் வாக்​காளர் பட்​டியலில் பாகிஸ்​தானியர்​கள் 2 பேரின் பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ளது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது. பாகிஸ்​தானில் இருந்து கடந்த 1956-ம் ஆண்டு இந்​தி​யா​வுக்கு வந்த பாகிஸ்​தான் பெண்​கள் 2 பேருக்கு வாக்​காளர் அடை​யாள அட்டை வழங்​கப்​பட்​டுள்​ளது. மேலும், சமீபத்​தில் பிஹாரில் மேற்​கொண்ட தீவிர வாக்​காளர் திருத்​தப் பணி​யின் போதும், அவர்​கள் இரு​வரின் வாக்​காளர் அட்​டைகள் சரி​பார்க்​கப்​பட்​டுள்​ளன. மத்​திய உள்​துறை அமைச்​சகத்​தின் உத்​தர​வின் பேரில் நடத்​தப்​பட்ட ஆய்​வில் இவர்​கள் பாகிஸ்​தானியர்​கள் என்று தெரிந்​துள்​ளது. மேலும், தற்​போது அவர்​கள் வயது மூத்​தவர்​களாக … Read more

காசா பகுதி மக்களுக்காக நிதி வசூலித்த சிரியா நாட்டைச் சேர்ந்தவர் குஜராத்தில் கைது

அகமதாபாத்: ​குஜராத்தில் போரால் பாதிக்​கப்​பட்ட காசா பகுதி மக்​களுக்கு உதவப் போவ​தாகக் கூறி, அது தொடர்​பாக வீடியோக்களை காட்டி மசூ​தி​களில் சிலர் நன்​கொடை வசூலிப்​ப​தாக புகார் வந்​தது. அதன் அடிப்​படை​யில், அகம​தா​பாத் நகரின் எல்​லிஸ் பிரிட்ஜ் பகு​தி​யில் உள்ள ஒரு ஓட்​டலில் தங்​கி​யிருந்த அலி மெகாத் அல்​-அ​சார் (23) என்​பவரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். அவரிடம் நடத்​திய விசா​ரணை​யில், அல்​-அ​சார் மற்​றும் 3 பேர் என மொத்​தம் 4 பேர் சிரி​யா​விலிருந்து சுற்​றுலா விசா மூலம் அகமதாபாத் … Read more

வேறொரு ஸ்டேஷனில் இருந்து ரயிலில் ஏற முடியுமா? விதிகள் சொல்வது என்ன?

ரயில் டிக்கெட் புக் செய்யும் போது பலரும் செய்யும் தவறு, மாற்றி போர்டிங் ஸ்டேஷனை கிளிக் செய்வது. இதனை எப்படி சரி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

51 ஆயுள் கைதிகளை விடுவிக்கிறது ஜார்க்கண்ட் அரசு

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் மாநில தண்டனை மறுஆய்வு வாரிய கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 51 கைதிகளை விடுவிக்க முதல்வர் ஒப்புதல் அளித்தார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கடந்த 2019 முதல் 619 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 470 பேர் பல்வேறு சமூக நலத் திட்டங்களின் பலன்களைப் பெறுகின்றனர். தற்போது விடுவிக்கப்படும் கைதிகளின் குடும்பப் பின்னணியை ஆய்வு செய்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கான திறன் … Read more

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி வெடித்ததில் 7 பேர் உயிரிழப்பு, 15 பேர் படுகாயம்

சண்டிகர்: பஞ்சாபின் மண்டியாலா பகுதியில் எல்பிஜி டேங்கர் லாரி ஒன்று, மற்றொரு லாரி மீது மோதியதில் டேங்கர் வெடித்ததால் 7 பேர் உயிரிழந்தனர், 15 பேர் படுகாயமடைந்தனர். பஞ்சாபின் ஹோசியார்பூர் – ஜலந்தர் சாலையில் சென்று கொண்டிருந்த எல்பிஜி டேங்கர் லாரி ஒன்று மாண்டியாலா அருகே வளைவு ஒன்றில் திரும்பியது. அப்போது எதிரே வந்த மற்றொரு லாரி மீது டேங்கர் லாரி மோதியது. இந்த விபத்தில், எல்பிஜி டேங்கர் வெடித்ததில், சம்பவ இடத்தில் இருந்த 7 பேர் … Read more

​​​​​​​இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்: விண்கலத்தை தரையிறக்கும் பாராசூட் சோதனை வெற்றி

விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் விண்கலம் பாதுகாப்பாக கடலில் இறங்குவதற்கான பாராசூட் சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதன்மூலம் ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல் கல்லை இஸ்ரோ எட்டியுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வருகின்றன. இந்த பட்டியலில் 4-வது நாடாக இந்தியாவும் விரைவில் இணைய உள்ளது. இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப ககன்யான் என்ற திட்டம் தொடங் கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக ஷுபான்ஷு சுக்லா, அங்கத் பிரதாப், அஜித் … Read more

பிஹார் SIR: 98% வாக்காளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர் – தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: பிஹார் மாநிலத்தில் 98.2 சதவீத வாக்காளர்களின் ஆவணங்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளதாகவும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியினை முன்னிட்டு வெளியிடப்பட்ட பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் மக்கள் உரிமை கோரவும், ஆட்சேபனை தெரிவிக்கவும் இன்னும் 8 நாட்கள் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் இன்று கூறியுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து செப்டம்பர் 1-ம் தேதி வரை ஆட்சேபனை தெரிவித்து, அதை சரி செய்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த காலகட்டத்தில் வரைவு … Read more

சபாநாயகர் பதவியின் கண்ணியத்தை அதிகரிக்க பாடுபட வேண்டும்: அமித் ஷா

புதுடெல்லி: சபாநாயகர் பதவியின் கண்ணியத்தை அதிகரிக்க சபாநாயகர்கள் பாடுபட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இந்த இரண்டு நாள் மாநாட்டை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார். விழாவில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சபாநாயகர்கள், மேல்சபை தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. … Read more

நொய்டா வரதட்சணை கொடுமை: போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்

நொய்டா: நொய்டாவில் வரதட்சணைக் கொடுமையால் இளம் பெண் ஒருவர் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற அப்பெண்ணின் கணவர் விபின் பாட்டி காலில் சுட்டு பிடிக்கப்பட்டார். உத்தரப்பிரதேசம், நொய்டாவில் ரூ.36 லட்சம் வரதட்சணைக்காக கணவன் வீட்டார் பெண்ணைத் தீவைத்து எரித்துக் கொலை செய்துள்ளனர். அப்பெண்ணின் இளம் வயது மகன் கண் முன்பாக இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த இளம் பெண் நிக்கியின் தந்தை அளித்தப் … Read more