வாக்காளராக பதிய ஆதார் மட்டுமே போதுமானது என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை: பாஜக

புதுடெல்லி: வாக்காளராக பதிய ஆதார் மட்டுமே போதுமானது அல்ல என்று தெரிவித்துள்ள பாஜக, உச்ச நீதிமன்றம் இதை உறுதிப்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதற்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சிறப்பு தீவிர திருத்தத்தில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், தகுதி வாய்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் வாக்கு திருட்டு நடப்பதாகவும் ராகுல் … Read more

கடும் வெள்ளத்தை தாண்டி குதித்த பெண்..எதற்காக தெரியுமா? வைரல் வீடியோவை பாருங்க..

Healthcare Worker Jumped Flood Viral Video : பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை பொருட்படுத்தாமல், ஒரு பெண் பாறைகளை தாண்டி குதித்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிஹார் வாக்காளார் பட்டியலில் இடம்பெற்ற பாக். பெண்களின் பெயரை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை

பாட்னா: பிஹார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு பெண்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அண்மையில் அங்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்ட தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போதும் அவர்களது வாக்காளர் அட்டை சரிபார்க்கப்பட்டுள்ளது. விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் குறித்து உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வுப் பணியின் அடிப்படையில் இது அடையாளம் காணப்பபட்டுள்ளது. இது குறித்த தகவல் மாவட்ட நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களது இருவரது பெயரையும் … Read more

SUV கார், புல்லட் பைக்… இன்னும் ரூ.36 லட்சம் – வரதட்சணை கொடுமையால் தீக்கரையான பெண்

Delhi Dowry Murder: டெல்லியில் கணவனால் தீ வைத்து கொல்லப்பட்ட பெண்ணின் வீட்டில் இருந்து கொடுக்கப்பட்ட வரதட்சணைகள் குறித்தும், அவர்களுக்கு செய்யப்பட்ட கொடுமைகள் குறித்தும் இங்கு காணலாம்.

பிஹாரில் SIR மூலம் ஏழைகளின் வாக்குகளை திருட பிரதமர் மோடி விரும்புகிறார்: ராகுல் காந்தி

அராரியா(பிஹார்): பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் ஏழைகளின் வாக்குகளை திருட பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பிஹாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக அம்மாநிலத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அராரியா என்ற நகரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ராகுல் காந்தி, “விழிப்புணர்வு யாத்திரை மிகவும் வெற்றிகரமாக உள்ளது. … Read more

வரதட்சணை கொடுமை: நொய்டாவில் மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன் கைது

நொய்டா: நொய்டாவில் வரதட்சணைக் கொடுமையால் இளம் பெண் ஒருவர் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் தந்தை ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டி கண்கலங்கவைக்கும் வகையில் உள்ளது. உயிரிழந்த இளம் பெண்ணின் தந்தை அளித்தப் பேட்டி: “முதலில் சொகுசுக் கார் வேண்டும் என்றார்கள். வாங்கிக் கொடுத்தோம். பின்னர் புல்லட் வண்டி வேண்டும் என்றார்கள். அதுவும் வாங்கிக் கொடுத்தோம். ஆனால் தொடர்ந்து என் மகளை கொடுமைப் படுத்தியுள்ளனர். அண்மையில் நான் … Read more

ஜமாத்-இ-இஸ்லாமி தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 215 பள்ளி நிர்வாகத்தை கைப்பற்றியது காஷ்மீர் அரசு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச பள்ளிக் கல்வித் துறை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் செயல்படும் ஏராளமான பள்ளிக்கூடங்களுக்கு தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ் லாமியின் பலே-இ-ஆம் அறக்கட்டளையுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு இருப்பதாக உளவு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளன. அத்தகைய பள்ளிகளின் நிர்வாகக் குழுவை அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையர் நடவடிக்கை எடுப்பார். ஆய்வுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு ஒரு புதிய நிர்வாகக் குழுவை … Read more

சட்டவிரோத சூதாட்ட வழக்கில் கர்நாடக காங். எம்எல்ஏ கைது: ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி தங்கம் பறிமுதல்

புதுடெல்லி: சட்​ட​விரோத ஆன்​லைன் மற்​றும் ஆஃப்​லைன் சூதாட்ட வழக்​கில் கர்​நாடக காங்​கிரஸ் எம்​எல்ஏ கே.சி.வீரேந்​திரா நேற்று சிக்​கிம் மாநிலத்​தில் கைது செய்​யப்​பட்​டார். இது தொடர்​பான சோதனை​யில் ரூ.12 கோடி ரொக்​கம், ரூ.6 கோடி தங்​கம் உள்​ளிட்​ட​வற்றை அமலாக்​கத் துறை கைப்​பற்​றி​யுள்​ளது. கர்​நாட மாநிலத்​தின் சித்​ரதுர்கா தொகுதி காங்​கிரஸ் எம்​எல்ஏ வீரேந்​திரா (50). இவர் மற்​றும் இவரது சகோ​தரர் உள்​ளிட்ட குடும்​பத்​தினருக்கு சொந்​த​மான 30 இடங்​களில் அமலாக்​கத் துறை நேற்று முன்​தினம் சோதனை நடத்​தி​யது. பல்​வேறு மாநிலங்​களில் நடை​பெற்ற … Read more

தர்மஸ்தலா பாலியல் கொலை வழக்கில் புகார் அளித்தவர் கைது – பின்னணி என்ன?

பெங்களூரு: கர்நாடகாவில் தர்மஸ்தலா கோயில் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக புகார் அளித்த முன்னாள் தூய்மை பணியாளரை போலீஸார்கைது செய்தனர். இதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலின் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும், அந்த சடலங்களை நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்த‌தாகவும் … Read more

நமது அரசியலமைப்பு சட்டம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது: சுதர்சன் ரெட்டி கருத்து

புதுடெல்லி: வரும் செப்​. 9-ம் தேதி குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் மகா​ராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்​டி​யிடு​கிறார். எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்​டணி சார்​பில் உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி சுதர்​சன் ரெட்டி வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்டு உள்​ளார். பிடிஐ செய்தி நிறு​வனத்​துக்கு அவர் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: உயர் நீதி​மன்​றங்​கள், உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​யாக பணி​யாற்​றிய​போது அரசி​யலமைப்பு சட்​டத்தை காப்​பாற்ற அர்ப்​பணிப்பு உணர்​வுடன் பணி​யாற்​றினேன் … Read more