இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை செப்.24 வரை நீட்டிப்பு

புது டெல்லி: இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை செப்டம்பர் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 30 முதல் இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம், பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்கள், ராணுவ விமானங்கள் உட்பட சொந்த அல்லது குத்தகைக்கு எடுத்த விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து பலமுறை இந்த தடை … Read more

வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும்: பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 திட்டம் மூலம் கடந்த 2023 ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்தது. இதை நினைவுகூரும் விதமாக கடந்த 2024-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தேசிய விண்வெளி … Read more

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் ஆக.25 முதல் நிறுத்தம்: ட்ரம்ப்பின் 50% வரிக்கு இந்தியா பதிலடி

புதுடெல்லி: இந்த மாத இறுதியில் அமலுக்கு வரும் அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு காரணமாக, ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்தது. ஜூலை 30 அன்று அமெரிக்க நிர்வாகம் வெளியிட்ட நிர்வாக உத்தரவு எண் 14324-ஐ தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் 800 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பொருட்களுக்கான வரி இல்லாத குறைந்தபட்ச விலக்கு ரத்து செய்யப்படுகிறது. … Read more

“ஊழலுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவா?” – பதவி பறிப்பு மசோதா விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சர் கேள்வி

இந்தூர்: 130-வது அரசியலமைப்பு திருத்த மசோதா முற்போக்கானது என்றும், இதை எதிர்ப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் ஊழலை ஆதரிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது என மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் நடைபெற்ற தாயின் பெயரில் மரம் நடும் விழாவில் பங்கேற்று மரக்கன்றினை நட்ட அர்ஜுன் ராம் மேக்வால், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் … Read more

தீ பற்றி எரிந்த தாய்… நேரில் பார்த்து உறைந்து போன மகன் – வரதட்சணை கொடுமையின் உச்சம்!

Delhi Woman Killed For Dowry: வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் கணவனாலும், அவனது குடும்பத்தாராலும் தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் ‘ஜனநாயக பற்றாக்குறை’ நிலவுகிறது: சுதர்சன் ரெட்டி கருத்து

புதுடெல்லி / சென்னை: “தற்போது இந்திய ஜனநாயகத்தில் பற்றாக்குறை நிலவுகிறது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருவது போலவே அரசியலமைப்பு சட்டமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது” என்று இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்றியபோது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிவேன். அந்த வேட்கையின் காரணமாகவே தற்போது குடியரசு துணைத் தலைவர் … Read more

“பதவி பறிப்பு மசோதாவில் முதலில் பிரதமர் பதவி இடம்பெறவில்லை, ஆனால்…” – கிரண் ரிஜிஜு தகவல்

புதுடெல்லி: பதவி பறிப்பு மசோதாவில் முதலில் பிரதமர் பதவி இடம்பெறவில்லை என்றும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இதை ஏற்க மறுத்ததாலேயே பிறகு சேர்க்கப்பட்டது என்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, “நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாட்டின் பார்வையில் வெற்றிகரமாக இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் பார்வையில் அது தோல்வி அடைந்த ஒன்று. அரசு இதை வெற்றி பெற்றதாகவே கருதுகிறது. விவாதங்கள் ஆரோக்கியமானதாக … Read more

சோகத்தில் அரசு ஊழியர்… வாட்ஸ்அப் கல்யாண பத்திரிகையால் ரூ.2 லட்சம் போச்சு – எப்படி?

Cyber Crime Alert: தனது மொபைலுக்கு வந்த திருமண அழைப்பிதழை கிளிக் செய்ததால், அரசு ஊழியர் ஒருவரிடம் இருந்து 1,90,000 ரூபாய் திருடப்பட்டுள்ளது. இது எப்படி நடந்து என்பதை இங்கு காணலாம்.

“இந்தியா சொந்தமாக விண்வெளி நிலையம் நிறுவும்” – பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: ‘இந்தியா மிக விரைவில் ககன்யான் திட்டத்தைத் தொடங்கும். அடுத்து, சொந்தமாக விண்வெளி நிலையம் உருவாக்கப்படும்’ என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, விண்வெளித் துறையில் சாதனைகளைப் படைப்பது தற்போது இந்தியாவின் இயல்பாகிவிட்டது எனக் குறிப்பிட்டார். 2025-ம் ஆண்டு தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார். அவர் தனது உரையில், “இந்த ஆண்டின் கருப்பொருளான “ஆர்யபட்டாவிலிருந்து ககன்யான் வரை” என்பது, இந்தியாவின் கடந்த காலத்தின் நம்பிக்கையையும் அதன் எதிர்காலத்திற்கான … Read more

‘நான் கொல்லப்பட்டால் கட்சியும், நீங்களும்தான் பொறுப்பு’ – அகிலேஷுக்கு பெண் எம்எல்ஏ கடிதம்

லக்னோ: ‘தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சமாஜ்வாதி கட்சியும், அகிலேஷ் யாதவும் தான் பொறுப்பு’ என உத்தரப் பிரதேச மாநிலத்தின் சாயல் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பூஜா பால் கடிதம் எழுதியுள்ளார். சமாஜ்வாதி கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட எம்எல்ஏ பூஜா பால், அகிலேஷ் யாதவுக்கு எழுதிய கடிதத்தில், “ நான் கொலை செய்யப்பட்டால், உண்மையான குற்றவாளி அகிலேஷ் யாதவ் தான். என் கணவர் பட்டப்பகலில் கொல்லப்பட்டார், எங்களுடன் நிற்பதற்கு பதிலாக, சமாஜ்வாதி கட்சி குற்றவாளிகளை காப்பாற்றியது. … Read more