ஹனிமூன் கொலைக்கு பிறகு மேகாலயாவில் புதிய தடை

ஷில்​லாங்: மேகாலயாவில் தேனிலவின்போது இந்தூர் தொழிலதிபர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தனியார் வாகனங்களை வர்த்தக நோக்கத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ம.பி.யின் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சிக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரும் அவரது மனைவி சோனமும் தேனிலவுக்கு மேகாலயா சென்றனர். அங்கு ரகுவன்சி கொல்லப்பட்டார். சோனம் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ரகுவன்சியை கொன்றது தெரியவந்தது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரகுவன்சி கொலைக்கு முன் மேகாலயாவில் … Read more

கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது

புதுடெல்லி: இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று கடந்த சில மாதங்களாக மீண்டும் பரவி வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் 7 பேர், டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பானாவர்கள் … Read more

உ.பி.யில் தந்தை, மகனுக்கு ஒரே நேரத்தில் காவலர் பணி: சாத்தியமானது எப்படி?

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் காவலர்கள் பணிக்காக ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது. இதில், தந்தையும், மகனும் ஒரே சமயத்தில் காவலர் பணி பெற்றுள்ளனர். உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ளது ஹாப்பூர். இங்குள்ள தவுலானா பகுதியின் உதய்பூர் நங்லா கிராமத்தில் தந்தையான யஷ்பால் பவுஜி (40), தன் மகன் சேகர் நாகருடன் (19) வசிக்கிறார். யஷ்பால் தனது 18 வயதில் இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்றியவர். இவர் 16 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்த பிறகு, கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். … Read more

உக்ரைனில் ‘ஆபரேஷன் கங்கா’ போல ஈரானில் இருந்து இந்தியர்களை உடனடியாக மீட்க முடியாதது ஏன்?

புதுடெல்லி: போர்ச்சூழல் காரணமாக, ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேற்ற முடியாததன் பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைனில் இருந்தது போன்ற சாதகமான சூழல் இல்லாததால் இந்தியர்கள் வெளியேறுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரானில் ஆயிரக்கணக்காக இந்திய மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். ஈரானில் உள்ள சுமார் 10,000 இந்தியர்களில் 2,000 பேர் மாணவர்கள். சுமார் 6,000 பேர் நீண்ட காலமாக ஈரானில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு அங்கு வசித்து வரும் இந்தியர்கள். இவர்களைத் தவிர, இந்திய மாலுமிகள் … Read more

இனி ரூ. 3000 செலுத்தினால் போதும்.. நாடு முழுக்க பயணம் செய்யலாம்.. வெளியாக முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் பயணிகளுக்கான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸை இந்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி இன்று (ஜூன் 18) அறிவித்தார்.

பிஹார் தொழிற்சாலையில் இருந்து கினியாவுக்கு ஏற்றுமதியாகும் முதல் ரயில் இன்ஜின்: பிரதமர் 20-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

பாட்னா: பிஹார் தொழிற்சாலையில் இருந்து கினியாவுக்கு ஏற்றுமதியாகும் முதல் ரயில் இன்ஜினை பிரதமர் நரேந்திர மோடி வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்தியன் ரயில்வேஸ் தனது வருவாயை அதிகரிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவுக்கு ரயில் இன்ஜின்களை ஏற்றுமதி செய்ய உள்ளது. பிஹாரின் சரண் மாவட்டம், மர்ஹோராவில் உள்ள டீசல் ரயில் இன்ஜின் தொழிற்சாலையில் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்ட முதல் ரயில் இன்ஜினை பிரதமர் மோடி வரும் 20-ம் தேதி … Read more

பாக். பிரச்சினையில் இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றதில்லை: ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி உறுதி

புது டெல்லி: பாகிஸ்தானுடனான பிரச்சினைகளில் இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டதில்லை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்ற செய்தியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி உறுதியாகத் தெரிவித்தார் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார். கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடினார். அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த உரையாடலின் போது, ​​இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பிரதமர் மோடி … Read more

ஜாக்கிரதை! இந்த பரிவர்த்தனைகளை முடிந்தவரை தவிர்க்கவும்! வருமான வரி நோட்டீஸ் வரலாம்!

இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்வதில் ஏதேனும் தவறுகள் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு வருமான வரி நோட்டீஸ் வரலாம். என்ன மாதிரியான பரிவர்த்தனைகளை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

அகமதாபாத் விமான விபத்து இடிபாடுகளுக்கு இடையில் 100 பவுன் தங்க நகைகள் மீட்பு

அகம​தா​பாத்: அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இடிபாடுகளுக்கு இடையிலிருந்து கிடைத்த 100 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில் அருகில் இருந்து பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடம் மீது மோதியது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியதில் அதில் பயணம் செய்தவர்கள், விடுதியில் இருந்த மாணவர்கள், பொதுமக்கள் என மொத்தம் 279 … Read more

குவாட் மாநாடு 2025: பிரதமர் மோடி அழைப்பு.. இந்தியா வருகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப்

President Donald Trump India Visit: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு இந்தியா வருகை தர உள்ளார். இந்தியாவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டிற்கான பிரதமர் மோடியின் அழைப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.