டெல்லியில் கணவன், மனைவி மூத்த மகன் கொலை; இளைய மகன் மாயம்

புதுடெல்லி: தெற்கு டெல்லி, மைதான் கார்கி பகுதியை சேர்ந்தவர் பிரேம் சிங். இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் வீட்டை போலீஸார் நேற்று முன்தினம் சோதனையிட்டனர். இதில் நடுத்தர வயதுடைய பிரேம் சிங், அவரது மனைவி ரஜினி, 24 வயது மகன் ஹர்திக் ஆகிய மூவரும் கழுத்து அறுத்து கொல்லப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தம்பதியின் இளைய … Read more

அவசரநிலை காலத்தில் நாட்டில் 1.07 கோடி பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு

புதுடெல்லி: கடந்த 1975 முதல் 1977 வரையி​லான அவசரநிலை காலத்​தில் அப்​போதைய இந்​திரா காந்தி அரசின் அத்​து​மீறல்​கள், முறை​கேடு​கள் குறித்து நீதிபதி ஷா ஆணை​யம் விசா​ரணை மேற்​கொண்​டது. அதன் அறிக்கை நாடாளு​மன்​றத்​தில் 1978-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி தாக்​கல் செய்​யப்​பட்​டது. குடும்​பக் கட்​டுப்​பாடு திட்​டத்தை அமல்​படுத்​தி​ய​தில் பலத்தை பிரயோகித்​தது குறித்​தும் அதன் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பான விவரத்தை மக்​களவை​யில் உள்​துறை இணை அமைச்​சர் நித்​யானந்த் ராய் பகிர்ந்து கொண்​டார். இது தொடர்​பாக அவர் எழுத்​து​மூலம் … Read more

மத்திய பிரதேச மாநிலம் ரீவாவில் தர்கா சேதம்: போலீஸார் தீவிர விசாரணை

புதுடெல்லி: மத்​தி​ய பிரதேச மாநிலம் ரீவா​வில் உள்ள கோர்கி கிராமத்​தில் பழமை​யான காஜி மியான் தர்கா உள்​ளது. குர் காவல் நிலைய பகு​தி​யில் அமைந்​துள்ள இந்த தர்கா​வுக்​குள் அடை​யாளம் தெரி​யாத ஒரு கும்​பல் இரவு நேரத்​தில் புகுந்​துள்​ளது. உள்ளே இருந்த தர்​கா​வின் மஸார் எனும் சமா​தியை கும்​பல் சேதப்​படுத்​தி​விட்டுச் சென்​றுள்​ளது. மறு​நாள் காலை தர்கா சேதம் அடைந்​துள்​ளதை பார்த்து உள்​ளூர் முஸ்​லிம்​கள் அதிர்ச்சி அடைந்​தனர். இதனால் அப்​பகு​தி​யில் பதற்​றம் ஏற்​பட்​டது. உள்​ளூர் மக்​கள் பலர் குர் காவல் … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இண்டியா கூட்டணி வேட்பாளர் மனு தாக்கல்

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) சார்பில் தமிழகத்தை சேர்ந்தவரான மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், … Read more

மசோதாக்களை ஆளுநர் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிடும்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: பெரும்​பான்மை உறுப்​பினர்​களால் சட்​டப்​பேர​வை​யில் ஏகமன​தாக நிறைவேற்​றப்​படும் மசோ​தாக்​களை ஆளுநர் காரணமில்​லாமல் ஆண்​டுக்​கணக்​கில் கிடப்​பில் போட்​டால் ஜனநாயகம் கேலிக்​கூத்​தாகி விடும் என உச்ச நீதி​மன்ற அரசி​யல் சாசன அமர்வு கருத்து தெரி​வித்​துள்​ளது. மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க ஆளுநர் மற்​றும் குடியரசுத் தலை​வருக்கு உச்ச நீதி​மன்​றம் கால நிர்​ண​யம் செய்த விவ​காரத்​தில், குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பான விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அரசி​யல் சாசன அமர்​வில் நேற்று தொடர்ச்​சி​யாக மூன்​றாவது … Read more

டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு Z பிரிவு, CRPF பாதுகாப்பு: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து அவருக்கு இசட் பிரிவு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பை ஏற்ற சிஆர்பிஎஃப்: மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து, டெல்லியில் உள்ள ரேகா குப்தாவின் இல்லத்துக்கு இன்று காலை சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள், டெல்லி போலீசாரிடம் இருந்து பாதுகாப்பை தங்கள் வசம் எடுத்துக்கொண்டனர். முதல்வருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கூடுதல் … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரான ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, என்சிபி-எஸ்சிபி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் எம்பி ராம் கோபால் யாதவ், திமுக எம்பி திருச்சி சிவா, சிவசேனா (யுபிடி) எம்பி … Read more

தீபாவளி, சத் பண்டிகைகளுக்காக 12,000+ சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே அமைச்சர்

புதுடெல்லி: தீபாவளி, சத் பண்டிகைகளுக்காக 12,000-க்கும் அதிகமான சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் ரயில் பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “தீபாவளி, சத் பண்டிகைகளின் போது பயணிகளின் வசதிக்காக 12,000-க்கும் அதிகமான சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. மேலும், அக்டோபர் 13 – 26 இடையேயான நாட்களில் பயணம் செய்வோருக்கும், நவம்பர் 17 – டிசம்பர் 1 இடையேயான நாட்களில் திரும்புவோருக்கும் கட்டணங்களில் 20 … Read more

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஒப்புக்கொண்டது ஏன்? – சுதர்சன் ரெட்டி விளக்கம்

புதுடெல்லி: “நான் ஓர் அரசியல்வாதி அல்ல, குடியரசு துணைத் தலைவர் பதவியும் அரசியல் பதவி அல்ல. அதனால்தான், குடியரசு தலைவர் பதவிக்குப் போட்டியிட ஒப்புக்கொண்டேன்” என்று இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார். இண்டியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா … Read more

பதவி பறிப்பு மசோதாவை கூட்டுக் குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் நிறைவேற்றம்

புதுடெல்லி: பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யும் 3 மசோதாக்களையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. 130-வது திருத்த அரசியலமைப்பு மசோதா, யூனியன் பிரதேச அரசு (திருத்த) மசோதா, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று … Read more