விரைவில் இந்தியா வருகிறார் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி

புதுடெல்லி: உக்ரைன் – ரஷியா போர் நீடித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு வெளிநாடுகளின் முக்கிய அதிகாரிகள் வருகை அதிகரித்துள்ளது.  இந்நிலையில், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் விரைவில் இந்தியா வரவுள்ளார் என தகவல்கள் வெளியானது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் அந்நாடு மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்கள் வாங்கும் விவகாரத்தில் எந்த பண மதிப்பில்  இருநாடுகளும் … Read more

மதம், மொழி சார்ந்து சிறுபான்மை சமூகமாக வகைப்படுத்தலாம்: ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில்

புதுடெல்லி: மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘‘கட ந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, ஜம்மு-காஷ்மீர், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினர் எண்ணிக்கையில் உள்ளனர். எனவே அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க உத்தரவிட வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு … Read more

பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை திரும்ப பெற நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.ஐந்து மாநில தேர்தல் முடிந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 6வது முறையாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. இவ்விவகாரம் நாடாளு மன்றத்தில் கடும் அமளியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மக்களவையில் நேற்று பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்திய எதிர்க்கட்சியினர், இப்பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அமளியில் … Read more

அந்தமான் நிகோபாரில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

புதுடெல்லி: அந்தமான்  நிகோபார் தீவுகளில் உள்ள திக்லிபூர் பகுதியில் இன்று அதிகாலை 2.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.  ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், திக்லிபூரில் இருந்து வடக்கே 147 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    இந்த நிலநடுக்கத்தின் விளைவாக உயிரிழப்போ, உடமைகள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.   இதையும் படியுங்கள்…பஞ்சாப்பில் வீடு தேடி ரே‌ஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் அறிமுகம்: முதல்-மந்திரி தகவல்

மே.வங்க சட்டப்பேரவையில் பரபரப்பு திரிணாமுல்-பாஜ எம்எல்ஏக்கள் மோதல்: எதிர்கட்சி தலைவர் சுவேந்து உட்பட 5 பேர் சஸ்பெண்ட்

கொல்கத்தா:  மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்று சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்ததால் ஆளும்  திரிணாமுல் மற்றும் பாஜ எம்எல்ஏக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அவை விதிமுறை மீறியதால் எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து உட்பட 5 பாஜ எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் 8 பேர் எரித்துக்கொல்லப்பட்ட விவகாரம் அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று எதிரொலித்தது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் … Read more

தேசிய பங்கு சந்தை முறைகேடு தடுக்க என்ன நடவடிக்கை?.:மக்களவையில் தயாநிதிமாறன் எம்பி கேள்வி

புதுடெல்லி: ‘தேசிய பங்கு சந்தை முறைகேட்டை தடுக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன’ என்று மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார். தேசிய பங்கு சந்தையில் நிகழ்ந்த மோசடி மற்றும் சட்டவிரோத செயல்களை தடுக்க ஒன்றிய நிதி அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். அதன் விவரங்கள் பின்வருமாறு: * தேசிய பங்கு சந்தையின் முன்னாள் நிர்வாக … Read more

கிழக்கு, மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு விவகாரம் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ்

புதுடெல்லி:  கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க வேண்டும் என திமுகவை சேர்ந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அதில் ஒரு விரிவான எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல் தீர்ப்பாயம் வழக்கை முடித்து வைத்திருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பால சுப்ரமணியம் மற்றும் ராம் … Read more

மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு டிஎன்பிஎஸ்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் அரசு பணியில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவில் தற்போது வரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசுப் பணிகளில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த உத்தரவை நடைமுறைப் படுத்தவில்லை … Read more

உக்ரைனில் முடிவுக்கு வராத போர்.. இந்தியா வரும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்!

உக்ரைன் போர் ஒரு மாதத்துக்கு மேலாக தொடரும் நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போருக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், ரஷ்யா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை உக்ரைன் போர் விவகாரத்தில் நடுநிலைமையை பேணி வருகிறது. இந்தியாவின் … Read more

நடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்பிடம் தீவிர விசாரணை நடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்பிடம் தீவிர விசாரணை

திருவனந்தபுரம்: மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், தொடர் விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 15ம் தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பலாத்கார வழக்கில் 8வது நபராக சேர்க்கப்பட்டு உள்ள நடிகர் திலீப்பிடம் 28ம்தேதி (நேற்று) போலீசார் விசாரணை நடத்த தீர்மானித்தனர். இது தொடர்பாக கடந்த வாரம் திலீப்புக்கு நோட்டீஸ் கொடுத்தனர்.அதன்படி … Read more