மத்திய அரசை கண்டித்து இன்று முதல் நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் 2 நாள் பொது வேலைநிறுத்தம்: வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும்

சென்னை: மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இதில் வங்கி ஊழியர்களும் பங்கேற்கின்றனர். வார இறுதியில் 2 நாட்கள் விடுமுறை வருவதால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 … Read more

இரண்டு நாள் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக இன்று வங்கி, காப்பீடு, போக்குவரத்து, தபால்துறை, தொலைத் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் தனியார்மயக் கொள்கைகளைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்றும், நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார்மயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர்களும் 2 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வங்கி சேவைகள், மின்சாரம், போக்குவரத்து, போன்றவை இந்த வேலை … Read more

கோவா முதல்வராக 2வது முறையாக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்கிறார்

கோவா: கோவா முதல்வராக 2வது முறையாக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்கிறார். பனாஜி, சியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

2019ல் நடந்ததை விட 27 சதவீதம் அதிகம் விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவம் அதிகரிப்பு: ஓடுபாதையிலும் நாய்களால் தொல்லை

புதுடெல்லி: இந்தியாவில் குறைந்த அளவே விமானங்கள் இயக்கப்பட்ட போதிலும் விமானத்தின் மீது பறவைகள் மோதும் விபத்துகள் அதி‌கரித்து உள்ளதாக ஒன்றிய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. விமானங்களை இயக்கும்போது பறவைகள் மோதினால் விமானங்களுக்கு கடும் ஆபத்தை  ஏற்படுத்தும். இந்நிலையில், ஒன்றிய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி. கடந்த ஆண்டில் விமானங்களின் மீது 1,466 பறவை மோதல் சம்பவங்களும் (27.25 சதவீதம் அதிகரிப்பு), 29 விலங்குகள் மோதல் சம்பவங்களும் (93.33 சதவீதம் அதிகரிப்பு) நடந்துள்ளன. 2019ம் … Read more

2024 மக்களவை தேர்தலில் உதவி செய்ய பிராந்திய ஆணையர்களை நியமிக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை: 71 ஆண்டுகளுக்கு முன் பின்பற்றிய நடைமுறை

புதுடெல்லி: வரும் மக்களவை தேர்தலில் தலைமை தேர்தல் ஆணையருக்கு உதவியாக பிராந்திய தேர்தல் ஆணையர்களை நியமிக்கும்படி ஒன்றிய அரசுக்கு  நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த 1951ம் ஆண்டு நடந்த முதலாவது மக்களவை பொது தேர்தலின்போது  தலைமை தேர்தல் ஆணையருக்கு உதவியாக மும்பை, பாட்னாவில் பிராந்திய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு நடந்த பொது தேர்தல்களில் இவர்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், சட்டம் மற்றும் பணியாளர் துறைக்கான … Read more

பீகாரில் பரபரப்பு முதல்வர் நிதிஷ் மீது தாக்குதல்

பாட்னா:  பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரை பொது நிகழ்ச்சியில் வாலிபர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தனது சொந்த ஊரான பக்தயார்பூரில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். அங்குள்ள மருத்துவமனை வளாகத்தில் உள்ள, பீகார் மாநிலத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்  சில்பத்ரா யாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்றார். இதற்காக  மேடையை  நோக்கி அவர் சென்று கொண்டிருந்த போது, திடீரென பின்னால் இருந்து வந்த வாலிபர் அவரை தாக்கினார். … Read more

வெளிநாடுகளில் இந்திய பொருட்களுக்கு கிராக்கி ரூ.30 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்து சாதனை: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: நடப்பு ஆண்டில் ரூ.30 லட்சம் கோடி  பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மாதாந்திர மனதின் குரல்(மன் கீ பாத்) நிகழ்ச்சியை ஒட்டி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது: இந்தியா கடந்த வாரம் ரூ.30 லட்சம் கோடி ( 400 பில்லியன் டாலர்) அளவுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. உலக அளவில் இந்தியப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து … Read more

2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா காலர் டியூனை கைவிடுகிறது ஒன்றிய அரசு

புதுடெல்லி: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கொரோனா விழிப்புணர்வு தொடர்பான தொலைபேசி காலர் டியூனை முடிவுக்கு கொண்டு வர ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த 2020ம் ஆண்டு அனைத்து தொலைபேசிகளிலும் விழிப்புணர்வு காலர் டியூன் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் முககவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பிறகு, தடுப்பூசி செலுத்துக் கொள்ளுமாறு காலர் டியூன் மூலம் மக்களிடம் வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று … Read more

அமர்நாத் யாத்திரை ஜூன் மாதம் 30-ம் தேதி தொடங்குகிறது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான  அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் கோவில் வாரிய குழு ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழு நேற்று விவாதித்தது. இதில் அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூன் 30-ம் தேதி தொடங்குவது என முடிவு எடுக்கப்பட்டது.  இதையும் … Read more

பிவிஆர், ஐநாக்ஸ் தியேட்டர்கள் இணைப்பு

மும்பை:  பிவிஆர், ஐநாக்ஸ் தியேட்டர் நிறுவனங்களின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிவிஆர், ஐநாக்ஸ் தியேட்டர்களை இணைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த தியேட்டர்கள் இனி பிவிஆர் ஐநாக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படும். பிவிஆர் நிறுவன தலைவர் அஜய் பிஜ்லி, இந்த இணைப்பு தியேட்டர் நிறுவனத்துக்கு நிர்வாக இயக்குனராக செயல்படுவார்.