சீனா எல்லை அருகே இந்திய ராணுவம் வான்வெளி பயிற்சி

புதுடெல்லி: சீனாவின் எல்லைக்கு அருகே இந்திய ராணுவ வீரர்கள் 2 நாள் வான்வெளி பயிற்சியில் ஈடுபட்டனர். மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி அருகே இந்திய ராணுவ வீரர்கள் 2 நாட்கள் வான்வௌி பயிற்சியில் ஈடுபட்டனர். சிலிகுரி பிரிவு என்பது நேபாளம், பூடான் மற்றும வங்கதேசம் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியாகும். வடகிழக்கு பிராந்தியங்களை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. ராணுவ கண்ணோட்டத்தில் இந்த பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த 24, 25ம் தேதிகளில் இந்த … Read more

பிர்பும் அருகே 40 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றிய போலீசார்..!

மேற்கு வங்கம் பிர்புமில் 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த ராம்பூர்ஹட் கிராமம் அருகே 40 நாட்டு வெடி குண்டுகளை கைப்பற்றியதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார். ராம்புர்ஹட் கிராமம் அருகே கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்த பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பெண்கள், குழந்தைகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில் சம்பவம் நடந்த கிராமத்தில் அண்டையில் நாட்டு வெடிகுண்டுகள் போலீசார் கைப்பற்றியது அப்பகுதியில் … Read more

இந்தியாவில் புதிதாக 1,421 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 1,826 பேர் மீண்டுள்ளனர்.  இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 82 ஆயிரத்து 262 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,421 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்து.  கொரோனா பாதிப்பால் மேலும் 149 பேர் உயிரிழந்துள்ளனர்.  தற்போது 16,187 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை … Read more

இந்தியாவில் தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 1,421 பேருக்கு தொற்று உறுதி; 149 பேர் உயிரிழப்பு..!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.2 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4.30 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 1,421 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,19,453-ஆக உயர்ந்தது.* புதிதாக 149 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

சத்தீஸ்கரில் அரசு மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்தி வழங்காததால் மகளின் சடலத்தை 10 கி.மீ. தோளில் சுமந்து சென்ற தந்தை

சத்தீஸ்கரில் அமரர் ஊர்தி வசதி செய்து தரப்படாததால் 7 வயது மகளின் சடலத்தை அவரது தந்தை10 கி.மீ. தொலைவுக்கு தோளில் சுமந்து சென்றுள்ளார். சத்தீஸ்கரின் சர்குஜா மாவட்டம், லகன்பூர் வட்டம், அம்டாலா கிராமத்தைச் சேர்ந்த ஏழை தொழிலாளிஈஸ்வர் தாஸ். அவர் கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட தனது மகளைலகன்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். மகளின் சடலத்தை வீட்டுக்குஎடுத்துச் செல்ல அமரர் ஊர்தி வசதிசெய்து தருமாறு அரசு … Read more

நாட்டிலே முதல் முறையக குஜராத்தின் ஹசிரா துறைமுக நகரில் ஸ்டீல் கழிவுகளை கொண்டு இரும்பு சாலை அமைப்பு.!

நாட்டிலே முதல் முறையக குஜராத்தின் ஹசிரா துறைமுக நகரில் ஸ்டீல் கழிவுகளை கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்டவைகள் ஒன்றிணைந்து சாலையை அமைத்துள்ளன. மற்ற சாலைகளை காட்டிலும் 30 சதவீதம் தடிமன் குறைக்கப்பட்டுள்ளதாகவும், மழை மற்றும் பேரிடர் காலங்களில் சாலை சேதமடைவதை தடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முன்னோடித் திட்டமாக ஸ்டீல் சாலை கருத்தப்படுவதாகவும், … Read more

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தால் சொத்துகள் பறிமுதல்- போலீசார் எச்சரிக்கை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் சமூக விரோத செயல்களை அரங்கேற்றும் பயங்கரவாதிகள், உள்ளூர்வாசிகளின் வீடுகளில் தங்கியிருந்து தாக்குதல்களுக்கு திட்டமிடவும், செயல்படுத்தவும் செய்கிறார்கள். அங்கு பாதுகாப்பு படையினருடன் நடந்து வரும் மோதல்கள் பெரும்பாலும் இந்த வீடுகளிலேயே நடக்கிறது. இவ்வாறு உள்ளூர்வாசிகள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதால் மாநிலத்தில் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பயங்கரவாதிகளுக்கு உதவும் சொத்துகள் மற்றும் வீடுகளை பறிமுதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்போரின் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் … Read more

திருப்பதியில் திருமண நிச்சயதார்த்ததிற்கு சென்ற பேருந்து 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி; 45 பேர் காயம்

திருமலை: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் நகரி அருகே உள்ள கிராமத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்ய தனியார் பேருந்தில் 52 பேர் புறப்பட்டு வந்தனர். இந்த பேருந்து நேற்று இரவு 11.30 மணிக்கு பாக்கராப்பேட்டை மலைப்பாதை வழியாக திருப்பதிக்கு வந்து கொண்டிருந்த பேருந்து அதிவேகம் காரணமாக கட்டுபாட்டை இழந்த பேருந்து வளைவில் சாலையோரம் உள்ள 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.இதனை கவனித்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள்  இதுகுறித்து சந்திரகிரி போலீசாருக்கு … Read more

போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் 2021-ல் நாடு முழுவதும் ரூ.1,898 கோடி அபராதம் வசூல்

நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில் ரூ.1898.73 கோடிஅபராதம் வசூல் செய்யப்பட் டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்நிதின் கட்கரி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்ப தாவது: நாடு முழுவதும் கடந்த 2021-ம் ஆண்டில் 2,15,328 போக்குவரத்து விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. இதன்காரணமாக சுமார் 1.98 கோடி பேருக்கு அபராதம் விதிக்கப் பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.1,898.73 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மிக அதிகபட்சமாக … Read more

‘காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை பாருங்கள் என்று அமித் ஷா பரிந்துரை.!

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் காஷ்மீரை தீவிரவாதம் எப்படி ஆக்கிரமித்தது என்பதைத் தெரிந்துக் கொள்ள காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தைப் பார்க்குமாறு மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தை வெளிப்படையாகப் பாராட்டிய நிலையில் குஜராத்தின் காந்தி நகரில் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, பிரதமர் மோடி இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியதாகக் குறிப்பிட்டார். மோடியைப் போல வலிமையான தலைவர் எந்த … Read more