தனிநபர் வருமானம்: சிக்கிம் முதலிடம்

புதுடெல்லி: தனிநபர் வருமானத்தில் சிக்கிம், கோவாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021-2022ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை, டெல்லி சட்டப்பேரவையில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று சமர்பித்தார். இந்த அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் தனிநபர் வருமானத்தில் சிக்கிம், கோவா முதல் மற்றும் 2வது இடங்களை பிடித்துள்ளன. டெல்லியின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 16.81 சதவீதம் அதிகரித்து மூன்றாவது இடத்தில் உள்ளது. டெல்லியின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை காட்டிலும் 3 … Read more

நீதிமன்ற விசாரணைகளை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க குழு அமைப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மக்களவையில் நடப்புக் கூட்டத்தொடரில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துப் பேசிய மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியது: “உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரலையாக ஒளிபரப்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உச்ச நீதிமன்றத்தின் மின்னணு கமிட்டி குழு ஒன்றை அமைத்துள்ளது. இது தவிர உச்ச … Read more

கவுகாத்தி விமான நிலையத்தில் 80 வயது பெண்ணின் ஆடையை களைந்து சோதனை – விசாரணை நடத்த உத்தரவு

கவுகாத்தி: நாகாலாந்தை சேர்ந்தவர் மொகலோ கிகோன் (வயது80). மாற்றுத்திறனாளியான இவர் சம்பவத்தன்று தனது பேத்தியுடன் டெல்லி செல்வதற்காக அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்திற்கு சென்றார். அவர் வீல் சேரில் அமர்ந்து சென்றார்.அப்போது அங்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.இந்த சோதனையின் போது மொகலோ கிகோன் இடுப்பு பகுதியில் இருந்து ஒரு விதமான சத்தம் எழந்தது. கடந்த மாதம் அவர் இடுப்பில் அறுவை சிசிச்சை … Read more

தேர்வை சந்திப்பது எப்படி?.. மாணவர்களுடன் 1ம் தேதி பிரதமர் கலந்துரையாடல்

புதுடெல்லி: தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி வரும் 1ம் தேதி கலந்துரையாட உள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்வதற்கு முன்பாக ஏற்படும் மன பயம், அழுத்தத்தில் இருந்து விடுபடுவது தொடர்பாக, பிரதமர் மோடி அவர்களுடன் `பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் ஆண்டுதோறும் பேசி வருகிறார். இது, ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி முதல் முறையாக கடந்த 2018ம் ஆண்டு … Read more

சூரியசக்தி மின் உற்பத்தி கழிவுகளை கையாளப்போவது எப்படி? – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: சூரியசக்தி மின் உற்பத்தி கழிவுகள் குறித்து ஆராய மத்திய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என மக்களவையில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார். நடப்பு மக்களவைக் கூட்டத்தொடரில் இன்று தூக்குக்குடி மக்களவைத் தொகுதியின் எம்.பி. கனிமொழி, சூரியசக்தி மின் உற்பத்தி குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர், “புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் முக்கிய அங்கமான சூரிய சக்தி மின் உற்பத்தியில் வெளியாகும் கழிவுகள் எவ்வளவு? கடந்த மூன்று ஆண்டுகளிலும், நடப்பு ஆண்டிலும் சூரிய … Read more

மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் பரம்வீர் சிங் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் பரம்பீர் சிங்கிற்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான அனைத்து துறை சார்ந்த விசாரணைகளுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரம்பீர் சிங் மீது மகாராஷ்ட்ரா அரசு தொடுத்த அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையே இவ்வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்ற மகாராஷ்ட்ர அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் காவல்துறை மூலம் … Read more

அருணாசல பிரதேசத்தில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இடாநகர்: அருணாசல பிரதேசத்தின் பான்கினில் இருந்து தெற்கே இன்று இரவு 9.51 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.   இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.   இதையும் படியுங்கள்…உ.பி முதல்வராக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு வரவில்லை: திமுக எம்.பி. ஆ.ராசாவின் கேள்விக்கு சுகாதார இணையமைச்சர் பதில்..!!

டெல்லி: தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசாவின் கேள்விக்கு சுகாதார இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தகவல் தெரிவித்திருக்கிறார். நீட் விலக்கு மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அமைச்சகத்திற்கு வந்ததா? என்று ஆ.ராசா கேள்வி எழுப்பியிருந்தார்.

உ.பி.யில் யோகி அமைச்சரவையில் 5 பேர் மட்டுமே பெண்கள்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் முதல்வராக மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றுக்கொண்டார். இவரது அமைச்சரவையின் 52 உறுப்பினர்களில் வெறும் ஐந்து பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் 403 தொகுதிகளில் பாஜக கூட்டணி 273 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் பின்னணியில் அக்கட்சிக்கும் அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் வாக்களித்ததும் ஒரு காரணம். கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் அனைத்து கட்சிகளும் சேர்த்து பெண் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 42 என்றிருந்தது. இந்தமுறை அது 46 … Read more

ஒமைக்ரானை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் புதிய உருமாறிய வகை வைரஸ், 2 ஆண்டுகளில் உருவாகலாம் – இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி

ஒமைக்ரான் வகை கொரோனாவை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் உருமாறிய வகை வைரஸ், அடுத்த 2 ஆண்டுகளில் உருவாக அதிக வாய்ப்புள்ளதாக இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், உயிர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தும் வைரஸ்கள், வாழ்நாள் முழுவதும் மனிதர்களுடன் இருக்கும் என கூறினார். குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தாக்கக்கூடிய என்டமிக் என்ற நிலையை கொரோனா வைரஸ் எட்டியுள்ளது என்ற கருத்தை நிராகரித்த அவர், வைரஸ் பரவல் நிலையான … Read more